திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வசையமுறை
வசையஞ்சொல்லுகிறேன்- ஆண்டைகேளீர்
வசையஞ்சொல்லுகிறேன்.
📖 பாடல் எண்: (0175) 📖
மிருளுந்தாமசகுணவிசித மேன்மேல்விளம்பல்
மிகுதியாதொருபழிவிகடம் வஞ்சனைசெய்தல்
அலறும்வழிபாடாக வொழித்தல்வணக்கமாற
லரண்டுவரும்வெகுளியதனை விரும்பவெனல்
பிரளல்செய்தநன்றியைப் பிரித்தலுறுதிமாறல்
பெரிதாய்விந்தைமிகவும்பேசல் கடூர்வாஞ்சை
முரளுமுகத்திடறுபகையுடனேயும் வாழ்த்தல்
முன்புரைத்தப்பழியேமுனைதல் கூறலுமாண்டே – வசை.
📖 பாடல் எண்: (00176) 📖
கொலைகள்காமியமும் பொய்குறித்தல் கோள்கள்பொல்லாங்கு
குசிதம்யாவையும்புகழ் குரோதங்கொடூர மெய்தல்
அலைதல்காமத்தினிவை குரோதமதிசங்கை
யசத்தியநாள்தோறுமெய்தலறித லாண்டையேகேளீர்
பலபலவும்கடிசிலதுதொழில் விகற்பம்பகர்தல்
பாவியெனவுஞ் ஜெகதலமுமதியா
கலகப்பிரியனெனுமுலகமாத்தியஞ் சொல்லுங்
கருவில்தாமசகுண காட்சியிதாண்டையே – வசை.
📖 பாடல் எண்: (0177) 📖
அதிதசத்துவ குணமறிதலனேகவித
மனைத்தும்படைத்தகர்த்தன் மனதுளிருப்பதெனில்
விசித்தமதங்கடிவு வாய்மைதயவொடுக்க
மிகுத்தசாந்தகமைதன நினைவுதகைந்திடுதல்
உதித்தவன்புபெருமைபுகழ்தல் குணவிசித
முரிமைமறையினிறை தருமமானமியக்கல்
கதித்தநல்லோர்க்கீதல் அறிஞர்களைவாழ்வித்தல்
கருதுமிறைவனடிபணிதல் நலமறிதல் – வசை.
📖 பாடல் எண்: (0178) 📖
மகத்துக்களின்மனது மகிழ்ச்சிவருவதெனில்
மலர்க்கமலபதத்தில்வணக்கஞ் செய்திடுதலால்
அகற்றும்பழியகற்றல்விளையும் பிணியொழித்த
லதிதநல்லோர் பெரியோரவர்களுக்குப் பொருளுமீதல்
இகத்திலறமுந்தேடலுறவின் முறையதீத
மினமுஞ்சுற்றத்தாரையுங்கனமுங் காத்துரக்ஷித்தல்
மிகுத்தல்பசியகற்றலதிதிபரதேசிகள்
விரும்புமன்னபலாதிவிளங்குமேவுமீ தாண்டே – வசை.
📖 பாடல் எண்: (0179) 📖
ஆத்திரைவாசங்கள் செய்தலருமறையோரைக்காண
லருள்தேவதைகளுக்குமாகு பலிகொடுத்தல்
தேத்தியஞானப்பிரகாசந் தெளிந்தவர்கள்தமக்கு
சிந்தையையகற்றி யுபசாரஞ்செய்திடுதலால்
போற்றிடும்புண்ணியஞ்செய்தலின் பசுகந்தமலர்
பூசுரர் தமக்குநலம்புகழும் பூசையளித்தல்
வீற்றிடுஞ்சாத்தியகுணவிசித லட்சணங்கண்டு
விளங்குமூன்றின்விபரம் விதித்தவாறதுஆண்டே – வசை.
📖 பாடல் எண்: (0180) 📖
நாதவிந்ததினாலே நரகசொர்க்கமிரண்டும்
நவிலுநல்வினையுந்தீவினையு நாடியவாறில்
வேதங்களுமுதித்தசாரம் விண்ணுமண்ணாகில்
விளங்குநல்வினையும்வந்துதித்தல்
புண்ணியஞ்செய்தல்
ஓதுந்தீவினையுஞ்செய்திடும் பாவங்களுமெய்த
லுலகமாதிதமிவ்வாறுடலெடுத் துவமையால்
மாதுவம்பிகையெந்தன் மனதுக்குளுணர்வித்த
வரலாறறிந்திந்நூல்வசனித்தே னாண்டையே – வசை.
📖 பாடல் எண்: (0181) 📖
ராகமிதுவெட்டான நடத்தையிவ்வாறறிதல்
நலத்தகாமக் குரோதலோபமோகமதாகி
அகந்தனிலுதித்த மதமாச்சரியத்தோடு
மமைத்திடலுமிடும்பையறிதல் வேட்கையிதுகாண்
பாகமதாகியதே கஞ்சரீரங்களுதிக்கும்
பலனேயின்னதினிதும்பகர்ந்து சொலுவேன்காணும்
தேசக்கட்டளையிவ்வாறுசெய்கை செந்துகட்கெல்லாந்தெளிந்து
சீர்பிசகாமல்திருத்த ஆண்டையேகேளீர் – வசை.
Next Post