திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வசையமுறை
வசையஞ்சொல்லுகிறேன்- ஆண்டைகேளீர்
வசையஞ்சொல்லுகிறேன்.
📖 பாடல் எண்: (0163) 📖
கோசமயமுமைந்துங் குறியறிதலும்பேத
குணமாமன்னமயத்தால் பிராணமயமிரண்டு
வாசமுமன்னந்தனிலும் பிராணமயமுந்தோன்று
மன்னமயத்தில் பிராணமனோமயங்களுந் தோன்றும்
நிசமாமனோமயத்தில் விக்கியானமயமுந் தோன்றும்
நிருவிக்கியானமயத்தி லானந்தமயமுந் தோன்றும்
இசைவாமெண்சாணுடலிலெழு பத்தீராயிரமுமிருந்து
காத்துரட்சித்து இருவினைகளுஞ்சூழ – வசை.
📖 பாடல் எண்: (0164) 📖
மூலாதாரத்தில் சுவாதிஷ்டானமுமறிதல்
மூலமுமணிபூரக மனாகதம்விசுத்திகாணு
மேலாமாக்கினை யுமாதாரமு மாறுவிதமாய்விசித
மிதுவறியவிதியை வெல்லலாமோசொல்
மூலமெனுங்குய்யத்து நடுவேசுவாதிஷ்டான
முதலானதுவேலிலங்குஞ்சிவமே ஞானப்பிரகாசம்
ஞாலமுமணிபூரகம் நாபிக்கமலமது
நாடியவனாகதமு மிருதயமென்றிதுகாணும் – வசை.
📖 பாடல் எண்: (0165) 📖
நின்றதிதுவிசுத்திகண்டந்தனில் நினைக்கும்
நேராவாக்கினையின்மேல் மதியங்கண்டதியலாம்
மண்டலமூன்றுமறிதல் வன்னியெனு
மக்கினிமகிழுமண்டிலமிதுவகையறிவது நல்லோர்
அண்டர்கள் முனிவர்கள் போற்றுமாதித்த மண்டலமெய்தல்
அதிலுதித்திடுஞ்சந்திர வகண்டமண்டலஞ்சூழும்
கண்டமெப்படி யண்டமண்டலமறிந்தெந்தன்
கருத்தில்நினைத்தபடி கருவிதொண்ணூற்றாறும் – வசை.
📖 பாடல் எண்: (0166) 📖
அக்கினிமூலந்தொடங்கி நாபிக்கமலவிதழள
வாகியேயுதித்து ஆதித்தமண்டலமீறி
திக்கில்திக்கிலினிய நாபிக்கமலமெய்தல்
திசைகளெட்டதற்குந் தொட்டளவிற்றெளிந்திலகும்
தக்கபுகழுஞ்சந்திரமண்டல மிருதயத்தில்சார்ந்து
சார்வாய்த்தொடங்கி சடைமுடியடிநடு
விக்கிரமகதிர்மதி சூழக்கினிமண்டலமூன்றும்
விளங்குமதுரத்தமிழமிர்த சிந்துரத்தினம் – வசை.
📖 பாடல் எண்: (0167) 📖
மும்மலமூன்றுமுதிக்குமுன்னமே முறைமையறி
முனையுமாணவமாய்கை மோகமதாகிய காமியம்
நிர்மலசொரூபநிலைநினைவு முக்குணஞ்சொன்னேன்
நெறியைச்சொல்லவுஞான நேசமேயறியலார்காண்
அம்மெனுநானென்றுநாவை ஆணவங்காத்திடிலுமே
யபசயமேதனக்கு யாவரறியாக்கோபம்
தம்முயிர்போந்தனைக்கொன்று தனையறியாமல் நிற்குந்
தன்புத்தித்தானறிந்தாலுந்தா னொருவரைக்கேட்கும் – வசை.
📖 பாடல் எண்: (0168) 📖
நம்பிமனதுவேறாய்க் காமியந்தனைக்கொன்று
நானுடலங்கண்டதுக்கெல்லா நானென்றுமாசைப்படுதல்
வம்புமிகவுஞ் செய்தல்மாதர் மங்கையர்மேலு
மையல்கொண்டுவிரகத்தால் வாதுபோராடல்பேசல்
தும்பமுன்றுதித்திடும் வகையையாவர்கள் காண
துடியாய் வாதமும்பித்தஞ்சுகந்த சேத்துமமூன்றும்
தம்பனமுள்ளவாய்வது மோடிக்கலக்கமதாய்த்
தாபமுஞ்செய்தேயக்கினி சார்ந்துமத்திபஞ்செய்தல் – வசை.
📖 பாடல் எண்: (0169) 📖
வாசமுள்ளபிராணத்தின் வாய்வுநெட்டிட்டுமோடி
வளருமக்கினியதைமடக்கி மத்திபஞ்செய்தல்
நேசமுடனேபித்தம் வன்னியோடனுமித்து
நிறைந்துமத்தித்துசலம் நெடியவினையுண்டாக்கும்
சேதமிகவுண்டாகுஞ் சேத்துமரோமத்துவாரம் சிறந்துவோடியிடைபின்
பிரியாச்சிநேகஞ்செய்தால் மாதராசையிலிந்தநாடி பின்னிட்டடங்கி
மறிந்தறியாமல்தாது மடங்குமென்றாகையாலும்- வசை.
📖 பாடல் எண்: (0170) 📖
இச்சைமூன்றானவித மினியுரைக்கும்வகைகா
ணிதுவேபுத்திரவிச்சை லோகவிச்சையுமாகும்
பட்சமாமர்த்தவிச்சையுமிதன் கூறறியவெந்தன்
பரிபூரணவம்பிகை பாதமலர்பணிந்தேன்
அஷ்டதிக்கும்புகழு மகத்தீசருள்போற்றியபடி
யன்றிருவள் ளுவனவனிமீதிலிந்நூல்
நிஷ்டையோகத்தின் ஞான நிகழ்ந்தமூன்றுவகை
நிகழுமிச்சையதின் சுகத்தைக் கண்டவனாண்டே – வசை.
📖 பாடல் எண்: (0171) 📖
புத்திரன் இச்சையின் குணம் பொருள்மேலாசைப்படுதல்
புவியில்மண்ணின் பெண்ணாசை புவனமாளவுஞ்செய்தல்
அர்த்தத்தின்மேலுமதிக வாசைப்படுதல் நெஞ்ச
மறிதலோகவிச்சையின் விதியின்பயனுரைத்தல்
வெற்றிப்பாரிலுயர்ந்த காணியாட்சிவிளம்பல்
வெகுநாளுறவின்முறை தகுந்தகாதுவிளம்பல்
உற்றகாரியமுணர்ந் திச்சையத்தின்மேலாத
லுசிதப்பணிகள் செய்து விசிதம்பார்த்திடுமாதல் – வசை.
📖 பாடல் எண்: (0172) 📖
அர்த்தவிச்சையின்குண மதிககாமியந்தேடியன்
பதிகமுமாசை யின்பமதிலுண்டாதல்
எத்திசையினெந்த சாதியிலுமங்கையரின்னா
ரிவர்களெனு மெண்ணாமலுமிச்சித்தல்
சத்திவிரகதாபசங்கையிலு மனதாய்சார்ந்துவிகார
மெய்தல்தனைப்புகழ்ந்துணர்வாதல்
வித்தையென்னுமிச்சை வரலாறுமூன்றின்
விபரமெடுத்துரைத்தேனாண்டையே தொடுத்தேனாதவிந்தாலே – வசை.
📖 பாடல் எண்: (0173) 📖
குணவிசிதலட்சண மதிலுதித்தபடி
குறித்துமூன்றுவிதமாய் விரித்துச்சொல்வேன்காணும்
மனதாகியகுணராசத தாமசம்ரெண்டுமகிழுஞ்
சாத்திகத்தோடுபுகழுமூன் றுவிதமாம்
துணமாம்ராசதகுணம் வெகுளிபலபேசாமல்
துதித்திடுவோந்தமக்குக் கொடுத்திடுதலுமேன்மை
பணம்விசிதவேண்டிய பாக்கியங்களளித்தல்
பண்புபாராட்டலாதல் பலவுபகாரஞ்செய்தல் – வசை.
📖 பாடல் எண்: (0174) 📖
தனைச்சார்ந்தோர்கள் தமக்குத்தகைமை காத்திடும்பேசல்
தனதுதம்முயிர்போலுஞ் சார்ந்துரட்சித்திடுதல்
இனம்வேண்டிடுதல் பகையிகத்தல்பலகலைக
ளிசைந்துலகிலகங் கொண்டிருந்து வாழ்தலுமுண்மை
கனமுமினமுநலம்புகழும் வாஞ்சையொடுக்குங்
கருதுந்தாடாண்மையின் பங்கருவிலமைத்தபடி
முனையும்ராசதகுணந்தனையே யறிவிப்பதுமெனையே
புகழ்வதில்லைதுணையே நாதவிந்தருள் – வசை.
Next Post
👉 1️⃣1️⃣ ஞானவெட்டியான் (175-181) 👈