திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வசையமுறை
வசையஞ்சொல்லுகிறேன்- ஆண்டைகேளீர்
வசையஞ்சொல்லுகிறேன்.
📖 பாடல் எண்: (0182) 📖
மாதரைக்கண்டாசைகொண்டிடுங்காண் விரகதாப
மையல்கொண்டதகாமம்வருதல் மன்மதபாணம்
பேதபேதமில்லாமல்பிதற்றும் வணக்கமில்லா
பிணக்குமதிதகுரோதந் தனக்குந்தனைத் தெரியா
ஓதுமனதிலொன்றைநினைத்தபடி முடித்த
லொருபிடியாய்ப்பிடித்தலுறுதி விடாதுலோபம்
ஏதுவாகிலும்பெருமையின் பசுகாதிசுக
மெய்துமனமகிழ்ச்சியிதுவே மோகாதியோகம் – வசை.
📖 பாடல் எண்: (0183) 📖
சூதுமனதிலெண்ணல்துடியாக் கோபமுரைத்தல்
தொடுத்திடுதலும்பழிதுன்பமெய்திடுமதம்
யாதொருகாரியங்களிலதுவிச்சை
மனதெய்தலானந்தம்
பெருகியின்பமடையு மாச்சரியங்காண்
வாதுபோராடலொருசொல்லாயிரம் விரிவாய்வனல்
கொண்டாங்காரமெய்தல் வருமிடும்பையுமாதல்
வேதுவித்வேஷணம்பலவும் பலவுமெண்ணல்மெய்
யாங்காரக்கொள்ளல்வேறு செய்தலும்வேட்கை – வசை.
📖 பாடல் எண்: (0184) 📖
ஆகமத்திலுதித்தராகமத்தின் பரீட்சை
யதிதகுணலட்சணம்விதி தவறாமலெட்டும்
பாகமதாயுரைத்தேன் பகவான்சொற்படிபாரில்
பலகலையுந்தெளிந்து பழம்பொருளைக்கண்டு
ஏகவஸ்துவொன்றாலேயெடுத்தேன் தத்துவநெறி
யெறும்புகடையாயானை யெண்பத்துநான்குமுதல்
தோகைமாதுவம்பிகைசொல்லுஞ்சூட்ச மறிந்தேன்
சுருதிமுடிவைக்கண்டுதொடுத்தேன்
ஞானவெட்டியான் – வசை.
📖 பாடல் எண்: (0185) 📖
அவத்தையைந்துமொவ்வொன்றாய் விரித்துசொல்லுவன்காணு
மாக்கிரசாக்கிரசொப்பனஞ் சுழுத்தியொடுதுரியம்
பவத்தைப்பவனாதீதத்துரியாதீதத் தோடைந்தும்படைத்தா
ரெண்சாணுடலிலெடுத்தார் ஜெகத்துள்ளோர்க்கும்
இவத்தையெனுஞ் செனனமிதிலுதித்ததுகாணு
மெவரெவருக்குமிதுவே யேகவஸ்துவிதாகும்
தவத்தில்மிகுத்தவமெய்ஞ்ஞான நெடுதத்துவமறிந்து
தன்னைத்தான்றிந்திடுமே சொர்க்கம் – வசை.
📖 பாடல் எண்: (0186) 📖
ஆக்கிரமுஞ்சாக்கிரம்நிற்கு மதுவும்லலாட ஸ்தானத்திலறிதல்
நெற்றிநேர்மையமசைதல் காயத்தோடென்னில்
வாக்கிற்சொப்பனத்திற்கும் வாழ்தல்கண்டஸ்தானத்தில்
மருவியகருவிகளமைத்த வாறாண்டையே
விக்கிரமச்சுழியின் முனையிருதயகமலந்தனில்
விளங்குந்தானமறிதல் இன்பமிதுவாறுகாணும்
நிக்கிரகதுரியஸ்தான நேருமேநாபிக்கமலம்
நிரந்தரமாயிருத்தல் நிலைக்கும்சரீரமென்னில்.
📖 பாடல் எண்: (0187) 📖
உத்தமதுரியாதீத மூலாதாஸ்தானத்தி
லுறுதிபெற்றிலகு மிவ்விதத்திலுதித்தவாறு
தத்துவந்தொண்ணூற்றாறுஞ் சரீரந்தனிலுதிக்குந்
தகைமையறிந்துவந்தென் தாய்சொல்லயானறிந்து
வித்திலுதித்தவாறும் விளங்குங்கருவின்வாறு
மிகுத்த தத்துவந்தொண்ணூற்றாறை விதிக்கும்வாறும்
கர்த்தனருளாலுடல் கருதரித்தநேர்மையுங்
கருவிகரணாதிகள்கண்டு ஆய்ந்தவனாண்டே – வசை.
📖 பாடல் எண்: (0188) 📖
சித்தாதிகள்மகிழும்பெரியோர்களும் புகழுஞ்
ஜெயம்பெறவேயுலகில் செந்துக்களெல்லாந்தழைக்க
உத்தமயோகிகளெந்தனுறுதி மிகவுங்கண்டு
யோகவான் திருவள்ளுவனுலகி லவனேஞானி
வித்துவானெனமகிழ்ந்து வேதவேதாந்தசாரம்
விளங்கினவர்கள மிர்தவிசித ரத்னபீடம்
உத்தமரெனுமுனிவர் சிவசிங்காதனமீந்து
வுரையறிந்துமொழிந்த வுவமையீதெனுமாண்டே – வசை.
📖 பாடல் எண்: (0189) 📖
கர்த்தன்செய்கைவிதிகாண் கருவிலமைத்தபடி
காரணசற்குருவாக்கியங் கண்டல்லோதெளியும்
பெற்றபேர்களிப்படிவித்தின் சம்பிரதாயங்கள்
பேசும்பேசினாலென்ன பிராணாயமறியலாமோ
தத்துவந்தொண்ணூற்றாறுந் தானேநீறுநீறாக்கி
சாதித்தால்காயாதிகற்பஞ் சாயுச்சியமறியலாகும்
நித்தம்நித்தம்வாசிகொண்டுய்த்து வூதினாலல்லோ
செத்தபிணமெழுந்து சத்துஞ்சித்தறியலாம் – வசை.
விருத்தம்
📖 பாடல் எண்: (0190) 📖
விரிவான துருவமெனு மூல வீட்டில்
வேதமதுக் கெட்டாத ரூப மாகிக்
கருவாகித் தெவிட்டாத கனியு மாகிக்
கதிராகி மதியாகிக் காற்று மாகி
உருவாகி யுடலாகி யுயிரு மாகி
யொளியாகி யலகையெனு முடலுக் குள்ளே
மருவாகி யருள்ஞான சொரூபி யாகி
யங்கமதி லிங்கமதா யமைத்தே னாண்டே.
Next Post