மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
மக்கள் பழக்கத்தினால் கோயிலுக்கு செல்கிறார்கள்.
🌹 கோயிலுக்கு மட்டும் கிடையாது.
🌹 church-க்கும், மசூதிக்கும் கூட சென்று கொண்டிருக்கிறார்கள்.
🌹 ஒவ்வொருவரும் எதற்காக செல்கிறார்கள் என்று தெரியாது.
🌹 ஆனால் பழக்கத்தினால் செல்கிறார்கள்.
🌹 கோவிலிலோ சர்ச்சிலோ மசூதியிலோ ஏதாவது ஒரு விசேஷம் என்றால்
🌹 எறும்பு ஊர்வது போல கூட்டமாக மத கூடாரங்களில் ஊறிக் கொண்டிருக்கிறார்கள்.
🌹 மனிதன் பழக்கப்படுத்தப்பட்ட விலங்காக இருக்கிறான்.
🌹 மற்ற விலங்குகளை விட மனிதனுக்கு அறிவு இருப்பதினால்,
🌹 பழக்கினால் சரியாக செய்வான்.
🌹 அதாவது, மனிதனை ஒரு செயல் செய்ய பழக்கினால் நாம் கண்காணிக்கவில்லை என்றாலும் அதை அவன் செய்து கொண்டிருப்பான்.
🌹 தாயோ, தந்தையோ அல்லது உறவினரோ ஏதோ ஒரு மத சடங்கை செய்து வாழ்ந்து வந்தார்கள் என்றால்,
🌹 அதை பார்த்து வளர்ந்த ஒரு மனிதன் அவர்கள் இல்லை என்றாலும் அந்த மதச் சடங்கை செய்து கொண்டிருப்பான்.
🌹 அதனால் மனிதன் ஏன் கோயிலுக்கு செல்கிறான் என்றால்
🌹 எங்கு பழகினானோ,
🌹 எப்படி பழகினானோ,
🌹 அந்த பழக்கத்திற்காக செல்கிறான்.