மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம்
மனிதர்கள் எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
மனிதன் தன்னை பிறருக்கு நிரூபிப்பதில் ஆர்வம் கொண்டவன்
🌹 சர்க்கஸில் இருக்கும் ஒரு புலி , குச்சியின் முனையில் இருக்கும் கறித்துண்டிற்காக,
🌹 தன்னை பழக்கியபடி எல்லாம் செய்து காட்டும்.
🌹 ஆனால் மனிதனுக்கு அந்தக் கறித்துண்டு கூட தேவையில்லை.
🌹 பிறரிடம் நிரூபிப்பதற்காக தன் சுயத்தை மறைத்து வேடமிட்டுக் கொள்வான்.
அப்படி,
🌹 தன்னை நல்லவனாக,
🌹 தன்னை அறிவாளியாக,
🌹 தன்னை புனிதமானவனாக,
🌹 தன்னை தெய்வீகமானவனாக,
🌹 தன்னை சரியானவனாக,
🌹 பிறருக்கு காட்டுவதற்காக போடும் வேசத்தில் ஒன்று தான்,
🌹 அமாவாசை, வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் நான் அசைவம் சாப்பிடமாட்டேன் என்று சொல்லி.
🌹 தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது.
🌹 இயல்பாகவே கறி சாப்பிட பிடிக்கவில்லை என்றால்,
🌹 கறி சாப்பிடாமல் இருக்கலாம்.
🌹 அது குற்றமும் கிடையாது.
🌹 உங்களுக்கான உணவை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களிடம் இருக்கிறது.
🌹 அம்மாவாசை, வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சாப்பிடமாட்டேன்.
🌹 என்று சொல்வது தான் வேடிக்கையாக இருக்கிறது.
🌹 அவர்களை திருத்த வேண்டிய அவசியம் இல்லை.
🌹 அவர்களை, திருத்தினால் அமாவாசை வெள்ளிக்கிழமைகளில் மலிவாக கிடைக்கும் கறியின் விலை அதிகமாகிவிடும்.