மதம் மறப்போம் ! ⭐ மனிதம் வளர்ப்போம் !!
இறைமை உணர்வோம் ! ⭐ இன்பத்தில் திளைப்போம் !!
என்னுடைய நோக்கமெல்லாம் மனிதர்கள்
எல்லோரும் ⭐ மகிழ்ச்சியாக ⭐ இருக்க வேண்டும்.
🌹 ஏன் ஒரு மனிதன் இயல்பாகவும் ,
இயற்கையோடு ஒத்திசைந்தும் ,
கொண்டாட்டமாககவும் ,
மகிழ்ச்சியாகவும் இல்லை என்றால் ,
🌹 அவன் ஏதோ ஒன்றை சரி என்று பிடித்து வைத்திருக்கிறான் .
🌹 அதனால்தான் அவனால் இயல்பாக இருக்கவோ, சிரிக்கவோ, அழவோ, எல்லா உணர்ச்சிகளையும் கொண்டாடுவோ முடியவில்லை.
உதாரணமாக,
🌹 குழந்தை ஒரு காணொளியை பார்த்து சிரிக்கிறது.
🌹 ஆனால் அந்த காணொளி நடைமுறைக்கு பொருந்தாதது என்று நான் புரிந்து வைத்திருப்பதால் எனக்கு சிரிப்பு வரவில்லை.
🌹 அதைப் போன்று மரணம் அடைந்தவர் ஒருவர் வீட்டில் எல்லோரும் அழுது கொண்டிருக்கிறார்கள்.
🌹 நடைமுறையில் மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று நான் புரிந்து வைத்திருப்பதால்,
🌹 எனக்கு அழுகை வராமல் இருக்கலாம்.
🌹 அப்படி இருப்பது தவறும் கிடையாது.
🌹 ஆனால் இவர்களெல்லாம் சிரிக்கிறார்களே, என்னால் சிரிக்க முடியவில்லையே,
🌹 இவர்களெல்லாம் அழுகிறார்களே, என்னால் அழ முடியவில்லையே,
🌹 என்று நினைத்து வெறுப்பாவது தான் தவறு.
🌹 என்னைப் பொருத்தவரை சிரிக்கவும் துக்கப்படவும் முடியவில்லை என்றாலும் நன்றி உணர்வில் இருப்பதே சிறந்தது.
🌹 நன்றி உணர்வில் இருப்பதற்கான புரிதலை பெற்றிருப்பதே சிறந்தது.
ஏனென்றால்,
🌹 இயல்பின் உச்சம் நன்றி உணர்வு
🌹 கொண்டாட்டத்தின் உச்சம் நன்றி உணர்வு
🌹 ஒரு யோகியின் இருப்பு நன்றி உணர்வு.
🌹 அதனால் ஒரு இயல்பான கொண்டாட்டமான மனிதனால் அதிகபட்சமாக நன்றி உணர்வு கொள்ள முடியும்.