திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
யோகசாதனை தரு
பூசித்தேன்பிராணாயவாசியோகம் – ரேசித்துஆண்டே
பூரித்துக்கும்பங்கண்டேன்பாகம்.
📖 பாடல் எண்: (0928) 📖
விதியைவெல்லும்மதியால்மதியைவெல்லும்சுழியால்
பதியையறியஞானவழியிதாண்டையே
மதியன்னுக்குள்ளிருக்கும்வாரிசவாரிமேலாய்
விதியும்வாசிக்கப்போமோவிந்துநாதத்தின்கூறால்-பூசித்
📖 பாடல் எண்: (0929) 📖
மாய்கையற்றுமூலமலமுஞ்சலங்கழியப்
பயமதுவுங்கிலேசம்பாழாமிந்திரியமாண்டே
இந்தமதியைக்கண்டுவந்தவிதியைப்போக்கிச்
சொந்தமனையில்நின்றுசுந்தரர்க்குமுரைத்தேன்-பூசித்.
விருத்தம்
📖 பாடல் எண்: (0930) 📖
பூதலத்தில் மகத்துகள்தான் பொறிபுலனும் வெளியில் விடாப் பூசித்தார்காண்
வாதசித்தி வரும்வரலால் மதிரவியைப் பணிந்துமிக மகிழ்ந்ததாலும்
வேதமெனுஞ் சாரமுண்டு விரும்பியுமா தருமேவிந் ததனைப்போற்றிப்
பாதமடி மூலமெனும் பச்சையுவ ரகற்றிமிகப் பாலித் தாரே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0931) 📖
காரமெனும் பூநீறு காயமதி லும்மிருக்கச்
சாரமதைக் கொண்டுசவுக் காரமதைக் கூட்டறியார்
பூரமென்றால் தாரமிது பூநீறது வும்புளிகாண்
வீரமென்ற விந்தமுரி வெளியில்வெடி யுப்பறிந்தே.
📖 பாடல் எண்: (0932) 📖
பிருதிவி நகாரமதாம் பிராணனும் காரமப்பு
இருதயத் திலுமிருந்த இந்திரிய மாமமுரி
அறியப்போ மோவெளிகா ணம்புவியிலெங்குமுண்டு
சுருதிமுடி வானசுடர் சூக்ஷமறிந் தேமுடிப்பார்.
கலித்துறை
📖 பாடல் எண்: (0933) 📖
கலிகாலந் தன்னில் மாய்கைப் பெருங்குழி கடந்துமென்மேல்
நலியாது தேகம் வலுவாகும் விந்து நாதமதாய்ச்
சலியாது காய மழியாது தேக சாகவில்லைகாண்
மெலியாது உள்ளம் வாசியை வாவென்று விரும்பினனே.
📖 பாடல் எண்: (0934) 📖
அப்புகொண் டாண்டு ஐயஞ்சு திங்க ளானபின்பு
சுப்பிரம தாகுஞ் சுயம்பாகுந் தேகஞ் சுத்திசெய்தால்
இப்புவி தாம்பிர மிருபத் தொருதிற மிருபலங்கொண்
டுப்பரக் காய்ச்சி யுருக்கியப் பூவி னுடன்விடுமே.
வெண்பா
📖 பாடல் எண்: (0935) 📖
இப்பரிட்சை காண எளிதல்ல தேகம்
அப்பதுநீர் சுத்தி யானதால்- இப்புவியில்
சுத்தசல மான சுயம்பது செம்பாகும்
உற்றவிதி சுற்றியறிந் தூட்டே.
📖 பாடல் எண்: (0936) 📖
அம்புவியில் செம்புகளிம் பற்றுவிடும் மூறலறும்
நம்புவதா ரப்புவியால் யானறிந்து அம்புவியில்
தன்தேக மூறல்விடத் தாம்பிரமு மூறலறும்
தென்பொதிகை நாயனருள் சீர்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 6️⃣2️⃣ ஞானவெட்டியான் (937-945) 👈