திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
யோகசாதனை தரு
பூசித்தேன்பிராணாயவாசியோகம் – ரேசித்துஆண்டே
பூரித்துக்கும்பங்கண்டேன்பாகம்.
📖 பாடல் எண்: (0911) 📖
வாசித்துவாசியையூதிலங்கென்றுந்தம்பித்துலாவி
தூசித்துக்கருவிகளைத்தொடர்ந்துசுட்டறுத்துயான் – பூசித்.
📖 பாடல் எண்: (0912) 📖
கும்பித்துப்பூரகம்நாடி தம்பித்துக்கும்பகந்தேடி
நம்பித்துமூன்றாண்டுசென்று அம்பிகாயோகத்தில்நின்று
கெம்பிரமாகவுங்கண்ட தாரையில்வாசியையூதி
யெம்பிரான் கமலபதந் தும்பிமுகனைத்தொழுது- பூசித்.
📖 பாடல் எண்: (0913) 📖
நங்கென்றும்வினாடியூதி மங்கென்றுஞ்சாதித்துப்பேதி
சிங்கென்றுமூலத்துக்கெற்றி வங்கென்றும்பரத்தைப்போற்றி
அங்கென்றும்வாசிமேலகே வங்கெங்கும்பிரகாசமாகக்
கங்குல்பகனன்றாகத் திங்களுங்கதிரோனாகப்- பூசித்.
📖 பாடல் எண்: (0914) 📖
ஒவ்வெனுமூலத்திலோடி யொன்பதுவாசலுங்கட்டி
அவ்வெனும்உவ்வெனுங்கூட்டி அப்புவையுப்புவிலூட்டி
நாசியில்வாசியோடாமல் வீசியுஞாலம்பாயாமல்
தேசிகன்பொற்பதமேவி ஊசியின் முனைவாராமல்- பூசித்.
📖 பாடல் எண்: (0915) 📖
அகாரமப்புவுமூலமதின்கீழோங்காரமூலம்
பிதாவைத்தொழுதுமுத்திபிராணாய தீபத்தையேற்றி
கங்கைமதிமலர்தன்கமலபாதாரவிந்தம்
கெங்காஸ்நானங்கள்செய்துகெவனம்பாயவும்வாசி- பூசித்.
📖 பாடல் எண்: (0916) 📖
ஆசான்சற்குருநாதரருளாலாண்டையேகேளீர்
பாசாபாசமறுத்துப்பரிபூரணச்சந்திரனைத்
தேசியெனுங்கெவனம்வாசிக்குதிரைமீதில்
நாசிப்புருவநடுவீசித்தும்பாய்ந்து- பூசித்.
📖 பாடல் எண்: (0917) 📖
வினாடிகடிகைக்கொன்றுவிதமாச்சுழியில்நின்று
தினநாள்முப்பதும்வாசியினமிந்தப்படியேசிக்
கோசமெனுமக்ஷரங்குறித்துஓராண்டமுரி
நாசமதாகுமுப்பாழ்நசித்துவெண்ணீறதாக- பூசித்.
📖 பாடல் எண்: (0918) 📖
பதினெண்பேர்களுஞ் சொன்னபரிபாஷையுந் தோணாமல்
விதியின் வசமதென்று வெறுத்துமெய்க்குருகாணார்.
விதியை மதியால் வெல்லும் வேதசாரத்தையருட்
குருவின் வழியருந்துங் குறைவராது காண்.
📖 பாடல் எண்: (0919) 📖
விந்துநாதமேலு மேகங்கருவேசீலம்
அந்தமாரியஞ் சூட்சம் முரிப்புளியும்வாசம்
சிவமுஞ்சத்தியுஞ்சேர்ந்து செயநீர்திராவகமாச்சு
நவபாஷாணங்கள் நீறும் நவலோகங்கள் மாற்றேறும் – பூசித்.
📖 பாடல் எண்: (0920) 📖
தேவியெனுமம்பிகை சீர்பொற்கமலநாடி
ஆடியெனுஞ் சுவாசமண்டம் பாயவுந்தேடி
ஊதுந்துருத்தி வாசி ஓசை மூலத்தில் பாய்ந்தால்
வாதமுன்னுக்குளெய்துமதியால் ரவியுந்தோற்றும்-பூசித்.
📖 பாடல் எண்: (0921) 📖
இருவினை களுஞ்சுட்டுவிறப்பும்பிறப்பொழிந்து
கருவிதொண்ணூற்றாறுங்கனலல்லவந்துநீராக
வாசியென்றபிராணாயம்வாய்வைக்கும்பித்துமூலம்
நாசிவாராமல்ராசயோகஞ்செய்தேன்காண் – பூசித்.
📖 பாடல் எண்: (0922) 📖
பஞ்சாக்ஷரமமுரிதஞ்சானதுங்கொண்டாடு
அஞ்சாமலும்வயிராக்கியமெண்சாண்தேகத்தைச்சுட்டு
முக்கோணகேசரிவாலைமுனையமிடைபின்கலை
அக்கோணச்சுழிப்பிரகாசமாலையந்தனிலுநின்று-பூசித்.
📖 பாடல் எண்: (0923) 📖
வஸ்துவென்றபானத்தைமருவிமாறவுந்தேகம்
அஸ்திகள்தந்தங்கள்போலுமமிர்தசஞ்சீவியுண்டு
தன்னைத்தானுமறிந்துசடத்தைச்சுத்திகள்செய்து
அன்னையம்பிகைப்பாதம்அவ்வும் உவ்வாலறிந்து-பூசித்.
📖 பாடல் எண்: (0924) 📖
பூருவக்கியானகற்பத்தின்புகழையாரறிவார்காண்
பேறுபெறவும்பெற்றபிரபல்லியமீதாலும் லும்
தீட்சையென்றாலீரைஞ்சுதெசதீட்சைகளுங்காட்டி
நீச்சனென்றபேர்பாக்கிநிலைத்தேன்கருவூர்நாட்டில்-பூசித்.
📖 பாடல் எண்: (0925) 📖
அஷ்டாக்ஷரமாவது அமுரிபுளியெனும்பேர்
இஷ்டத்துடனுமுண்டுஎட்டெட்டுவித்தைகளாட
வங்குசிங்கென்றெழுத்தைவாவென்றழுத்திவாசி
யெங்கும்பிரகாசமாகஇருத்திக்கடிகைவரலாம்-பூசித்.
📖 பாடல் எண்: (0926) 📖
ஆனைமும்மதங்கொண்டாலடக்கலாமோஅடக்க
வானஞ்சுருங்கிவிடதோதானேதானுஞ்சுருங்கும்
பொங்குங்கடல்சூழ்வாரிபொழியப்பொழியப்புனம்
எங்கும்பிரகாசமாகுமெண்சாண்தேகமுந்தங்கம்-பூசித்.
📖 பாடல் எண்: (0927) 📖
அக்கரைமீனைப்பிடித்துச்சர்க்கரையாவடித்துச்
சொக்கநாதரைத்துதித்துநக்கவுந்தேனைமத்தித்து
அஞ்சுமூன்றுமிரண்டுமறியலாச்சுதுகற்பஞ்
செஞ்சடாதரர்மலஞ்சேவித்துச்சுழிமுனையைப்-பூசித்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 6️⃣1️⃣ ஞானவெட்டியான் (928-936) 👈