திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
ஆனந்தக்களிப்பு
தனனத்தனனதந்தனானா-தான-தனனத்தந்தனன
தந்தனாதந்தனானா.
📖 பாடல் எண்: (0937) 📖
மூலாதாரச்சுழிமுனையில்- வாலை
மும்மதவாரிமுச்சுடரினின்றிலகும்
ஆலகாலவிடமுண்ட- அரசன்
பாதத்தைநம்பினேன்- அம்பிகைபாதம்
பாலன்கணபதிகந்தன்- கமல
பாதபங்கயத்தையான்பணிந்துமேதொழுதேன்
தூலவுடல்சூக்ஷதேகம்செடஞ்- சுத்தியோ
ராண்டினில்சுகாதீதமாண்டே- தனன.
📖 பாடல் எண்: (0938) 📖
கட்டுப்படாதுசெம்பதுகாண்- மூல
காரத்தினால்கருசேர்ந்தல்லோகட்டும்
வட்டுப்போலிறுகியும்வலுவரஞ்- சோதி
வஸ்துவென்னவாசிமயமதுஞ்சேர்ந்தால்
எட்டிரண்டும்பத்துவயதாம்- அது
இங்கிதநாதச்சுரோணிதத்தாலும்
பட்டுவிடுஞ்சரக்கதீதம்- நவ
பாஷாணமுதற்கொண்டுபரிசவேதியதாம்- தனன.
📖 பாடல் எண்: (0939) 📖
நமசிவாயமென்றதஞ்சு- விந்து
நாதமூன்றெழுத்தையுங்கிலியும்ஓம்சவ்வு
அமிர்தங்கொண்டுவாசி- யூது
அடங்காதுஅம்உம்மென்றுஅக்ஷரம்ரெண்டு
சமரசமாகும்பத்தெழுத்துங்- குரு
சாமிகடாட்சத்தால்சாதித்தேன்காணும்
எமலபியகற்றுமிவ்வெழுத்து- எந்தன்
ஆசான்சொல்லவுமினியான்கண்டேனாண்டே-தனன.
📖 பாடல் எண்: (0940) 📖
பத்தெழுத்தும்பரியேமம்- சித்தர்
பதினெண்பேர்பாதபொற்கமலமும்போற்றி
வித்தில்லாப்பூமியுமுண்டோ- விந்து
நாதமில்லாவிடில்வாசியுமுண்டோ
சித்தில்லாச்செந்துகளுண்டோ- சிவ
னில்லாவிடில்தேவர்களுமுண்டோ
கர்த்தனிவராச்சுதாண்டே- கதிர்
மதியுமிவர்க்கேவல்காணலாச்சுதுகாண்- தனன.
📖 பாடல் எண்: (0941) 📖
முப்பூவுமூன்றல்லோகாணும்- மூல
வாசிசேரவுநாலுமுடிவல்லோதோணும்
அப்பும்உப்பும்வெடியுப்பும்- அசு
வானதும்வாய்மறந்துசெப்பார்
இப்பொருள்கண்டுணர்ந்தேன்காண்- எவரும்
இந்நூல்போலொருநூலுமியம்புவாரெவர்காண்
செப்பார்கள்சிவஞானமூலந் – திரு
வள்ளுவனாய்ந்துதெளிந்தவிம்மூலந்- தனன.
📖 பாடல் எண்: (0942) 📖
மதியைக்கொண்டுதேகஞ்சுத்தி- முன்னாள்
வரும்வழலைகளெல்லாமண்ணென்றுங்கொற்றி
நதியைவிட்டுச்சேடையாக்கி- வழலை
நாளுக்குநாள்வரும்நரகத்தைப்போக்கி
விதியிந்தமலக்கூடு- முன்னாள்
வினையிருந்தால்சலநீர்கொண்டுசாடு
சதியனந்தகாமவீடு- ஆண்டு
சாரத்தையுண்டுசாதித்துமேதேடு- தனன.
📖 பாடல் எண்: (0943) 📖
அலைகடலாவதுசமுத்திரம்- அலை
கடலையுண்டுகலக்கியகற்றிடும்முபத்திரம்
மலசலப்பெருமையைப்போக்கும்- அந்த
வாருதிசலத்தினால்வழலையைவிலக்கும்
பலபலகஸ்திகள் தோன்றும்- பாண்டம்
பழமலம்போக்கினால்பரீட்சைபார்கண்டும்
உலைவாயின்மெழுகதுபோலாம்- மனம்
ஒருமித்துஜடசுத்திநிலைகொள்ளாமேலாம்- தனன.
📖 பாடல் எண்: (0944) 📖
கர்மசாகரமலக்கூட்டை- தந்தை
கட்டினான்மாங்கைப்பெண்கருவியால்வீட்டை
வர்மமில்லாக்கருநாடு- திரு
வள்ளுவன்செய்கையால்வச்சிரவீடு
பிர்மாதிகற்பத்தையுண்டு- அமிர்த
பேரின்பநதிசுத்தப்பிராணாயங்கண்டு
நிர்மித்தேனகத்தியன்வரத்தால்- நெறி
தவறாதெனுஞானவெட்டியின்கருத்தால்- தனன.
விருத்தம்
📖 பாடல் எண்: (0945) 📖
இந்திரனதி யுண்டுரவி மலத்தைப் போக்கி
யிருந்தகர்மக் கசடதனை எல்லா நீக்கித்
தொந்தமெனும் தேகசித்தி சுயமாய்ச் செய்து
சுகதுக்க மிருவினையைத் தொலைத்து மேவி
அந்தஓ ராண்டுசென் றெடுத்துக் காலை
அமிர்தநதி சுத்தசல மறிந்து சாரம்
தந்தைவிதி முந்திமுன்னா ளமைத்த கூறைத்
தானவனா யகற்றியருள் சமைந்த வாறே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 6️⃣3️⃣ ஞானவெட்டியான் (946-963) 👈