திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
கொச்சகம்
📖 பாடல் எண்: (0946) 📖
சுத்திமுறை யானவிதஞ் சொன்னேன்பெருநூலிதனில்
அத்திமுத லெறும்புகடை அமைத்தவர லாறுகளைச்
சித்தியிந்த நூலதனில் சென்றுஓ ராண்டுபின்பு
வெத்தியெனு மாண்டதுபோல் வெண்மதியால் கண்டேனே.
📖 பாடல் எண்: (0947) 📖
காலைமுதல் விண்டமுரி கற்பங்கதி ருச்சமும்போய்
மாலைரவி சாய்ந்துகனல் மாறினதால் காலையினில்
சூலதுகா ணாவதென்ன சுரோணித மலப்புளியில்
ஆலவிட முட்டியபின் னருணனுத யத்தில்வைத்தே.
📖 பாடல் எண்: (0948) 📖
கதிருதய முன்புருவருங் காலைதனி லிவ்விதஞ்செய்
மதியுணர்ந்து பின்புவரு மாலைப்புளி யுண்பீராய்
விதிமெழுகு போல்வருதல் வேளைபுன்னைக் காயளவு
அதிவிதமாய் நாளுக்குநா ளதனஞ்சுண்டைக்காயளவே.
கலித்துறை
📖 பாடல் எண்: (0949) 📖
மூவாண்டில் மூலப் புளிவிந்துஞ் சேர்ந்து முடிக்கும்விதம்
துவாத சாந்த வெளியறி யாமல் சொக்கினர்காண்
சாவேது ஞான மெய்ஞ்ஞான வெட்டிச் சார்வறிந்தால்
தாவேது சார மாயிரத் தைந்நூறின் சத்தியமே.
📖 பாடல் எண்: (0950) 📖
சத்திக்குள் விந்து சாரமுள் பாய்ந்து சத்தியும் விந்
துத்தம னாச்செ னித்திடும் பிள்ளை யுவரதுபோய்ப்
பத்திய சுன்னம் பசைந்தமண் தண்ணீர் பாய்ந்திடுநாள்
உத்திய செம்பு உலக்கியந் நீரினி லூட்டிடுமே.
வெண்பா
📖 பாடல் எண்: (0951) 📖
உருக்கியீ ரேழுவிசை யூனீரில் சாய்த்திடவும்
சுருக்கி மணியதுவாஞ் சொன்னோம்- உருக்கிவிடக்
கழிம்பதுவு மூறலிலாக் காரமெனுஞ் சாரமதால்
அழும்புவரு காதிடிலு மாண்டே.
📖 பாடல் எண்: (0952) 📖
அயமுதலு நாக மதிக கருவங்கம்
சுயமதுகாண் வேணவங்கஞ் சுத்தி- அயமதுகேள்
வங்க மிருநாசம் வருதல்பதி னைந்திறங்
குங்கிமணி யாகுமதின் கூறு.
📖 பாடல் எண்: (0953) 📖
மலைப்புளியும் வாரி வருமுத்த நாளில்
உலையதனில் விந்துஅய மூதினால்- மலப்புளிநீர்
காய்ச்சிய நூறு காரமெனுஞ் சாரமதில்
தோச்சிவிடு வீரெனச் சொல்.
📖 பாடல் எண்: (0954) 📖
மூசை யதிலிட்டு முடிமண் சீலைகனம்
ஓசையிடுங் காண்துருத்தி யூதினால்- மூசையினில்
உருகி மணியாடு மூல ரசத்தினாலும்
சுருகியயச் செம்பதுவாஞ் சொல்.
📖 பாடல் எண்: (0955) 📖
இருவங்க நாக மிரும்பதுவுஞ் செம்பு
மருவு பணவிடைக்கு வாங்கு- முருகவுமே
குகையிலிட்டு ஊதக் குங்குமப்பூ வர்ணம்
மெழுகதுவா மூதிடுமாற் றேழு.
வேறு – விருத்தம்
📖 பாடல் எண்: (0956) 📖
குருமுனியால் மாற்றேழு வருதலது
குணங்குறியாய்க் குறித்துப் பார்த்தேன்
கருவிருவா யருளியதோ ராயிரத்து
ஐந்நூறின் கருவை யாய்ந்து
அருவுருவாய்க் குருவினுட அனுக்கிரக
மெனக்களித்த அருளி னாலும்
சுருபநிலை சூக்ஷமெல்லாஞ் சோதித்துப்
பார்த்தவர்கள் சொக்கஞ் சேர்வாம்.
வேறு – கவி
📖 பாடல் எண்: (0957) 📖
விந்துநாதம்விதித்தஅவ்வாழினால்
அந்தகாரமதுவெளியாச்சுது
சுந்தரக்கருசொன்னார்பேதாபேதம்
வந்ததாண்டேவழலைப்பிரகாசமே.
📖 பாடல் எண்: (0958) 📖
காரசாரங்கதிர்மதிவாழ்க்கையால்
வாருதிவரமாவெளிப்படும்
சாரங்கொண்டுசரமாறியேற்றினால்
தேறலாந்தசதீட்சையிதாச்சுதே.
📖 பாடல் எண்: (0959) 📖
பூதலம்புகழ்பூரணசற்குரு
நாதவிந்துநடத்தையையோதினால்
வாதஞானவழலைப்பெருமையை
மாதுவாலைவசனமிதாகுமே.
📖 பாடல் எண்: (0960) 📖
அந்தவானமளாவியமாமலை
யெந்தனாசானியம்பினாராதலால்
வந்துகாட்சிமகிழ்ந்துஅகத்தியன்
விந்துநாதம்விளங்கினாராண்டையே.
📖 பாடல் எண்: (0961) 📖
பூரசுண்ணபூனீர்புளிநாதமாம்
வீரம்விந்துவெள்ளைக்கல்லுப்பதாம்
காரசாரங்கதிர்மதிரெண்டினால்
தேறுஞானச்சிவபண்டிதர்களே.
📖 பாடல் எண்: (0962) 📖
அப்பும்உப்பும்அமுரிமூலப்புளி
உப்புமப்புமுன்னுக்குளறிந்தபின்
கைப்பும்உப்புக்கசிவுமுறிந்திடில்
முப்புசுண்ணமுடிந்ததுஆண்டையே.
📖 பாடல் எண்: (0963) 📖
சிவமுஞ்சத்திசிவத்திலிருப்பதாம்
கவனம்வேணுங்கனகமுன்னுக்குள்தான்
மவுனவாலைமதிகொண்டுவூட்டினால்
கவனமேதுசாரத்தினால்கட்டுமே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 6️⃣4️⃣ ஞானவெட்டியான் (964-976) 👈