திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வேறு – கவி
📖 பாடல் எண்: (0964) 📖
சாரமாண்டுசரமாறியேற்றினால்
காரஞ்சத்தியுங்கைவசமாகிடில்
தேறினான்திருவள்ளுவனிவ்விதம்
ஏறதாகுமிருவினையில்லையே.
📖 பாடல் எண்: (0965) 📖
விந்துநீரு விளங்கிய பானமும்
அந்தநீரு மமுரி யுண்டாண்டுகாண்
இந்தப்பாதை யிரவி தினந்தினம்
வந்த வழக்கை மருவிச்சாதித்தணே
📖 பாடல் எண்: (0966) 📖
மாயாசத்திமலப்புளிவந்தவா
றாயுநூல்களனேகம்விதித்தனர்
ஓயும்நாய்போலுழன்றலைவார்கள்தம்
மாய்வதில்லைமகத்துகளாண்டையே.
📖 பாடல் எண்: (0967) 📖
மானமுமபிமானிகள்வாறுகாண்
சோனைபாயுஞ்சுகாதீதசுக்கிலம்
வீணுரைத்துவிடுகிறீர்பானநீர்
தேனையுண்டுதெளிந்தனராண்டையே.
📖 பாடல் எண்: (098) 📖
உண்டநீருஉன்னுக்குள்ளேபாய்ந்திடில் அக்குள்ளேட
சண்டனில்லைசாக்காடெய்வதில்லைகாண்
அண்டார்கோணத்தீசர்தெரிசனங்
கண்டபோதுகலிவராதாண்டையே.
📖 பாடல் எண்: (0969) 📖
கார்மதிக்கதிர்சோதிவிளங்கிய
சீர்புகழ்திருவள்ளுவனேனான்
பார்விளங்கியபாடல்மூவைந்நூறு
பேர்வளம்பெரியோரறிவார்களே.
📖 பாடல் எண்: (0970) 📖
ஞானவெட்டிநன்னூல்பதினைந்துநூறு
தேனெனுமொழிசெப்பியவாறினால்
வானஞ்சூழ்கடல்வாரிப்பொழியவும்
மோனஞானவிதியைக்கேளாண்டையே.
📖 பாடல் எண்: (0971) 📖
வேதஞானவிதிவிளங்குமகத்துள்
பாதபங்கயப்பன்மலர்சூடயான்
வாதபண்டிதமாமுனிவாறினால்
சூதவாலைச்சுழிமுனை காணுமே.
📖 பாடல் எண்: (0972) 📖
பஞ்சரத்தினம்பன்மலர்சூடியான்
நெஞ்சறிந்துநிகழ்த்தவெள்ளேட்டினில்
செஞ்சடாதரத்தெய்வசிகாமணி
கஞ்சமலர்கண்டபேர்சொல்வாரரோ.
📖 பாடல் எண்: (0973) 📖
பதினெண்பேர்கள்பரிபாஷையாய்ந்துயான்
விதியறிந்துவிளங்கும்ரகசியம்
மதிரவிமலர்வாரிச்சொரிபடம்
கெதியறிந்துகிருபைக்கடல்மூழ்கினோர்.
📖 பாடல் எண்: (0974) 📖
தத்துவந்தொண்ணூற்றாறுஞ்சுடர்விடில்
கற்றுஞானக்கருவறியார்கள்காண்
பெற்றும்பேறுபிறப்பொழியாமலும்
சித்துமாய்கையில்தேகமழிவதே.
📖 பாடல் எண்: (0975) 📖
சுத்தஞானசுகாதீதமென்பது
வித்துபானம்விளைவினுதிப்பதாம்
வத்தர்சுத்தர்பண்போர்பதினெட்டுபேர்
கர்த்தனுங்கருவாய்ச்செனித்தார்களே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0976) 📖
கருணையா னந்தசிவ காமியருள் பாதமலர்த்
திருவடியும் போற்றிசெய்து செங்கமலமேவிவளர்
குருமுனியால் தீட்சைபத்துங் கோணாமல் கூர்ந்துமிக
அருள்புரிந்து காயசித்தி யனுக்கிரகம் பெற்றேனே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 6️⃣4️⃣ ஞானவெட்டியான் (964-976) 👈