திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
கொச்சகம்
📖 பாடல் எண்: (0977) 📖
கண்டுகளி கூர்ந்துகுரு காரணத்தால் சித்திபெற
அண்டக்கல் லுப்பதனை யானறிந்தே னாதியுப்பை
விண்டுவிடும் ஞானவெட்டி மெய்ப்பொருளையானுரைக்க
எண்டிசையி னல்லோர்க ளிப்பொருளைக் காண்கிலரே.
வெண்பா
📖 பாடல் எண்: (0978) 📖
ஆனைக்கல் லாரறிவ ரம்புவியி லும்மனிதர்
சோனகரால் வந்தவித சொர்னஉப்பை-யானைக்கல்
பானமென்ற நீரமுரிப் பாண்டமதி லும்படினால்
தானதைக்கொண் டேசடலைத் தாக்கு.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0979) 📖
இவ்விதம் பிராணமது வேயிடித்து இப்படிதான்
அவ்விதநால் நீர்படிக்கு ஆனதுக்கால்லோர்படிதான்
கவ்வியபூ னீறதுகேள் கானகத்தி லும்விளையும்
எவ்விதமென றேயறிய இன்னீரில் தாக்கிடுமே.
கலித்துறை
📖 பாடல் எண்: (0980) 📖
அருள்மேவிக் கல்லு ஆனைக்கல் லுப்பு ஆதியுப்பு
திருமே வியவன்னி செங்கன லூட்டித் திருத்தமதாய்
உருவேறச் சுத்தி யுடன்கண்ட காய்ச்சியுற்பவமாய்ப்
பருவப் பதங்கொண்டு பானநீர் விட்டுப்பகர்ந்தலம்பே.
📖 பாடல் எண்: (0981) 📖
அனலுக்கு நீருக்கு மசையாது கல்லுப்பதையெடுத்து
முனைமே வியகுளி கல்வத்திலிட்டு முகுளிதமாய்
வினையேகு மண்ட கவண்கருவிட்டுவெகுண்டொருநாள்
இணையாட்டி மைப்பத மெழுகுபோல் வருஞ்செய்கை யியம்புவனே.
📖 பாடல் எண்: (0982) 📖
அலைமோ தியமேரு வுறையாகச் சேர்ந்து அருணன்பட
மலைமேவு யப்பு நிலவிந்து வீசி வாருதியால்
கலையாமீ ரெட்டுச் சலநீருங் கட்டிக் கல்லுப்பதாய்
விலைமேவி சோநகர் பெரியோர்கள் வாங்கும் விற்பனையே.
📖 பாடல் எண்: (0983) 📖
இந்திர னுப்பு இதுமெழு காட்டி யிரவிதனில்
சந்திர னுப்பைச் சதுர்பில்லை துட்டெடை தான்கொண்
டந்திர னுப்பு அதுசரக் காக அருணனதில்
பந்த னஞ்செய்து பரிவாக வட்டிப் பகர்ந்திடுமே.
📖 பாடல் எண்: (0984) 📖
கதிர்முக நாடி மேல்வட்ட மூடிக் கருணைபெற
மதிசீலை யேழு மண்செய்து வாலை வன்னிமுகம்
அதிவித மாக முயன்றெடுத்து ஊதி அதையெடுத்து
நதிமேவுஞ் சந்திர பனிசுத்த நீரில் நாடிடுமே.
வெண்பா
📖 பாடல் எண்: (0985) 📖
பனிவீசு மாசிதனில் பங்குனியி லும்மிறங்கும்
தனியாகச் சுத்தசலந் தான்பிடித்துப்- பனியதுநீர்
வெண்ணிறமாய் நின்றதொரு மேதினிபீங் கானதிலும்
நான்பெறவுஞ் சுத்தசல நாட்டு.
📖 பாடல் எண்: (0986) 📖
இந்திரன் தன்விந்தி லிட்டிடுங்கற் சுண்ணமது
வெந்தசுண்ணக் கல்லிரைந்து வேகுமே- இந்திரநீர்
பட்டுவிடு மேகரைந்து பாறையுப்பா மூன்றதனால்
இட்டிடுமஞ் சுன்னத்தி லெய்தும்.
📖 பாடல் எண்: (0987) 📖
நீரதுமே லும்படியும் நேர்மைநில வுப்பதுவாய்ப்
பாரதின்மேல் கத்திகொண்டு பாய்ச்சினால் – நீரதின்மேல்
கண்டதனைக் கீறிவிடக் கல்லுப்பு மேல்படியும்
மண்டலத்தின் பாறையுப்பா மறி.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 6️⃣6️⃣ ஞானவெட்டியான் (988-1002) 👈