திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
விருத்தம்
📖 பாடல் எண்: (0988) 📖
மண்டலந்தான் கழிந்தபின் எடுத்துப் பீங்கான்
வாருதியென் றசிற்சுண்ண கல்லுப் பாகும்
கண்டஉப்பு இவ்வளவும் பாரை யுப்பாம்
கல்லுப்பு இதையறியார் கண்கெட் நீதிச்
சென்றாட்ட மாய்ச்சிலபேர் நாய்போல் சுற்றிச்
செகமெலா மலைந்தலைந்து தியங்கி னார்கள்
குண்டலியின் கமலமலர் தொழுது போற்றிக்
குறுமுனியி னருள்தெளிந்து கூறு வேனே.
📖 பாடல் எண்: (0989) 📖
அந்தபரி பூரணமாய் விளங்குஞ் சோதி
அகண்டபரி பூரணத்தி னருளைப் போற்றி
சுந்தரமா யெனையீன்ற மாது வாலைச்
சுகாதீத மெந்நாளுமடி தொழுது போற்றி
யிந்தவிதி விட்டகுறை யெய்து மாகில்
விந்துவிட்டோ னவர்பதத்தில் மிகவும் போற்றிச்
சிந்தையெனும் மனம்புத்தி சித்த மூன்றும்
சிறந்ததித ஆங்கார நாலும் போச்சே.
📖 பாடல் எண்: (0990) 📖
தத்துவமென் றுதித்ததொண்ணூற் றாறுஞ் சுட்டுத்
தசவாய்வு மொருமித்துத் தானொன் றாகிப்
பெற்றபிற விக்கடலைத் தாண்டி யேறப்
பெரியோர்கள் வெகுகாலம் பிராணா யத்தால்
குற்றமொன்றும் வாராமல் குறுக்கல் சுண்ணம்
கொண்டுஅனு மானமெனு மமுரிதன்னில்
வித்தென வும்விளங்கும் பாரை யான
வெள்ளைக்கல் லுப்பதுவும் உதித்த தாண்டே.
📖 பாடல் எண்: (0991) 📖
பூருவத்தி லுதித்தகடல் கல்லுப் பாகும்
பூனீறி னுப்பதுவு மமுரி யுப்பும்
வாறறிந்து முப்பொருளு மூன்றுப் பாகும்
வகைவகைக்குப் பலமதுவாய் வகுத்துப் பின்பு
சருகாமல் பறங்கிவைப்புப் பலன்தான் சூடன்
தனையெடுத்து குலிக்கல்லி சமையத் தானும்
கருதாமல் வெண்கருவா லிரண்டு சாமம்
கணக்காக மையதுபோல் கருதி டீரே.
கட்டளைக் கலிப்பா
📖 பாடல் எண்: (0992) 📖
கருதி யும்வழித் தேயெடு பில்லைகாண்
கதிர வன்தனில் காய்ந்தே வட்டியில்
சுருதி மேல்மூடி யொன்று புடமதில்
துரித மாய்க்கன லாறியெ டுத்திடும்
குறுமு னியருள் திருவள் ளுவனுரை
கூறி டும்பெரி யோர்கள் மகத்துகள்
தொழுது வாலைப் பதம்பணிந் தர்ச்சனை
தொழுத தால்பணிந் தாண்டே யுணருவார்.
வேறு
📖 பாடல் எண்: (0993) 📖
பூநீறாவதும்பூதலந்தன்னிலும்
வானிலும்மாசிபங்குனிமூன்றினில்
காணிரோகதிர்சந்திரன்விந்தினால்
சோனைபாய்ந்துசுகாதீதநீறதாம்
பாணியோடிபருதிமுகம்படத்
தானினிவெண்மைதாரணிதன்னிலும்
கோனினிபூமிநாதமெழும்பிடும்
வேனினிவிந்துநாதமீதாண்டையே.
📖 பாடல் எண்: (0994) 📖
பூமிநாதம்பூநீறெனும்பேரதாம்
வாமியோகிகள்வந்து அந்நாளினில்
நேமமாகநெறிய நேமமாகநெறியதுவாகவும்
பூமிசுற்றிப்புனலடியாமலும்
தாமேவேலிதனித்துச்சோடித்துடன்
ஆமேசாணொருஅந்தமணவெட்டியும்
நாமேசொன்னோம்நாளுக்குநாள்மூன்றதும்
சோமன்விந்துநீர்சொல்லியெரித்திடே.
📖 பாடல் எண்: (0995) 📖
மூன்றுநாளைமுனைதெரியாமலும்
மூன்றுமுச்சாண்பூநீர்விட்டெரித்திடும்
வேன்றுங்கம்பியிதுநீலவர்ணமும்
தோன்றுநாலுதினத்திலெரித்திடும்
ஆண்டுபத்துமடுத்துகற்பங்கொளும்
தூண்டிடும்புளிசுன்னம்பூநீறதும்
மூன்றிடும்மிதுபூநீர்க்கெதிரிலா
ஏன்றிடுங்கரவித்தையிதாண்டையே.
விருத்தம்
📖 பாடல் எண்: (0996) 📖
சாணுயர மண்களைந்து எரிந்து மேலும்
தனித்துஅந்நாள் மறுநாள்கொண் டருணன் தன்னில்
காணுமொரு படியொருசாண் வெட்டி மேலும்
கண்டுமறு நாளதிதன் காலை தன்னில்
வேணுமந்தப் படிமூன்று நாளுஞ் செய்து
விளங்கவுமே நாலாநா ளிதனைப் பார்க்க
மூன்றுநாள் சென்றதின்பின் கம்பி யோடும்
முன்னாளில் மிதிக்கவிட்டுப் பின்னா ளாண்டே.
📖 பாடல் எண்: (0997) 📖
பின்முன்னாள் கடைநாலு மெரியல் வேகம்
பேதித்திரு கால்கொண்டு உதைத்து மேலாய்
உன்னிதமாம் மெரியலிடப் பூதான் பூக்கும்
ஓரங்குலப் பிரமாண முயர மென்னில்
இன்னமினி நாலாநாள் கிளிஞ்ச லாலும்
எடுத்துவெகு பதனமாய்க் கும்பிக் கேற்றி
சொன்னகுரு நாலுமெழு பதமா யாட்டிச்
சூக்ஷமதா யைம்பதெருப் புடத்தில் நீற்றே.
📖 பாடல் எண்: (0998) 📖
நீற்றிடவுஞ் சுன்னமதாங் கொடிய வேகம்
நிறமென்ன சந்திரனுக் கொளிபோ தாது
வீற்றிடவுங் கல்லுப்புச் சுன்னந் தன்னை
விளங்கவெகு பெரியோர்கள் விரித்துச் சொன்னார்
நாற்றிசையில் நவகோடி முனிகள் சித்தர்
நடனசூஸ் திரஞான வெட்டி மேலாம்
மாற்றியே பிறந்திடவும் வாசி யோகம்
மாறுகலை பதினாறும் வகுத்தா ராண்டே.
📖 பாடல் எண்: (0999) 📖
இப்படியாய் நவகோடி கோடா கோடி
யிலகுபதி னெண்பேர்கள் மகிழத் தானும்
கற்பகமே திருவருளே கருணை ஞான
கமலவித மாயிரத்தெண் மலரின் மேலும்
உற்பவமே முன்னோர்கள் மோட்சம் பெற்ற
மூலசுழி முனைநடுவில் நடனஞ் செய்யும்
தற்பொருளே சடாதரத் திலகுஞ் சோதி
சாம்புவனென் றேஜெகமும் புகழ்ந்தா ராண்டே.
📖 பாடல் எண்: (1000) 📖
திரிமூர்த்தி வம்மிசத்தில் தோன்று ஞான
திருவள்ளுவ னாயனெனுஞ் செகமும் போற்றக்
கருவூரு விளங்குநகர் கமல பீடம்
கருணையா னந்தவர்க்கத் தமிழால் ஞானம்
தருமேசிவக் கியானவெட்டி பதவி நாலும்
தரணிதனி லறிவுள்ளோர் சாகாக் கல்வி
வருமமிசைப் பெரியோர்கள் தீட்சை யாலும்
வள்ளுவனா ருரைத்தமொழி வாறு ஆண்டே.
📖 பாடல் எண்: (1001) 📖
ஜெகமாய்கை யண்டபிண்ட மமைத்த வாறும்
ஜெகதலமீ ரேழுபதி னாலுங் கூடி
அகமாய்கை ஆண்பெண்ணா யுதித்த வாறும்
அவனியிலெண் பத்துநான் குயிராய் நின்ற
பகவனரு ளாலுதித்துப் பாரில் செந்து
பலப்பலவா யுயிரதுவாய்ப் படைத்த வாறும்
சுகவசிய செகரமா யெங்குந் தானாய்ச்
சுகாதீத மெனவிளங்குஞ் சூக்ஷந் தானே.
📖 பாடல் எண்: (1002) 📖
முப்பொருளாய் நின்றிலங்கு மதியே விந்து
முறையான நிலவுப்புக் கடல் நீருப்பு
இப்பொருளாய்ச் சமைத்தவிதச் சுன்னம் வாங்கி
யிசைந்துகுளி கல்லதனில் நன்றா யாட்டிக்
கைப்பொருளென் றிதையறிந்து வீரம் பூரம்
கருவினிலும் புழுகுகுரு வண்டு நாபி
செப்பதித வகைவகைக்கோர் களஞ்சு கூட்டிச்
சிதையசம் பழத்தினிட ரசத்தால் மாய்த்தே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 6️⃣7️⃣ ஞானவெட்டியான் (1003-1015) 👈