திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வேறு- கவி
📖 பாடல் எண்: (1003) 📖
மாய மாய மயன தாகிடும்
வாய்வும் வன்னி வருணனுங் கூடினால்
தேய தேயசெம் பொன்னிற மாயிடும்
பாய பாயபகி ரண்டம ளாவியே.
📖 பாடல் எண்: (1004) 📖
நின்று நாடி நிகழ்த்த மயனமாய்
அன்று நாளுமன் னாள்முழு தாட்டினால்
கண்டி சாடிக ணக்கொரு வீதமாய்ப்
பண்டு எங்கனி பார்க்கப் பழமதே.
📖 பாடல் எண்: (1005) 📖
கடலுப் பாவது கடல்நுரை கட்டினால்
கல்லுப் பாவதுங் காணும கத்துகள்
செடல வுப்பு சிவகங்கை கூடினால்
அவனீ மீதினி லஷ்டசித் தாடுமே.
📖 பாடல் எண்: (1006) 📖
மாதுவா லைவா லாம்பிகை தன்பதம்
ஏது நாதமு மேகத்தின் வாறுகாண்
ஊதுந் தாரை யுயிர்காண முரியால்
வாத முன்னெதிர் வந்தெதிர் நிற்குமே.
வேறு – கவி
📖 பாடல் எண்: (1007) 📖
வெண்மதிநிலவுப்பையறிந்திடும்
வேகமென்னவிதுவீரசுன்னமாம்
நண்பெறுமெழுகேவழித்தங்ஙனே
நாடிபில்லைரவியினில்காய்ந்ததால்
அண்ணல்தன்பதமர்ச்சித்துவட்டியில்
அடியிருக்கமேலோடுதன்மூடியும்
மண்ணதீதமண்சீலைமண்ணேழுமே
வண்ணியாங்கதிர்வாலையில்வைத்திடே.
📖 பாடல் எண்: (1008) 📖
வைத்துச்சாவல்புடம்போட்டெடுத்துடன்
வானில்குப்பிருவந்தியத்திற்குள்தான்
சித்துவாதச் செகவசியம்மதாஞ்
சீனச்சரக்கறுபத்துடனாலதும்
பற்றுமில்லாப்பளிங்கதுபோல்நிறம்
பாரும்பாரும்பரீட்சைதன்வேதைகாண்
கற்றுமுப்பொருள்காட்டினார்நூல்வகை
காணாதொன்றுங்கருதினேனாண்டையே.
📖 பாடல் எண்: (1009) 📖
ஆண்டுநூறுமடுத்தென்னபாக்கியம்
ஆயிரத்தைந்நூறில்வாறுகாண்
கண்டுநூல்கள்கல்லுப்பறியாமலும்
காணுங்காணாகருத்தழியார்காண்
மண்டலம்வலிவோடுதிரிந்ததால்
வண்டர்காணும்வகையறிந்தாரில்லை
ஒன்றுமொன்றுஉருவறிந்தாலல்லோ
ஓகோஒகோபாருமுனதருளாண்டையே.
📖 பாடல் எண்: (1010) 📖
வான்புவிகடல்மண்ணும்விண்ணும்மது
ஏனதுக்கிதுக்கேவல்செய்யும்மதாம்
நானருள்ஞானவெட்டுக்கெதிரொரு
நாடியாடியநான்மறைநூல்களும்
பானுமாலிபரையென்றறிந்திடார்
ஞானமோதுவர்கியானசுகாதீதம்
மானுபாவரெனுஞ்சிவமுத்தர்கள்
ஆனதால்நற்பொருளறிந்தோதினார்.
📖 பாடல் எண்: (1011) 📖
முப்புமுப்புவென்றோதியநூல்கள்தான்
அப்புமப்புவென்றாரறிவார்களோ
செப்பினார்பதினெண்பேர்மகத்துக்கள்
தப்புமோசுத்தசாகரநீரெலாம்
அப்புவினருளான அவ்வாறினால்
கைப்பையேகளிம்பற்றுக்கசடறும்
இப்புவிஜெகவீணாசைகொண்டுவர்
கைப்பையுண்டுங்கருத்தறியார்களே.
📖 பாடல் எண்: (1012) 📖
வாரிவாரிமகராசமாவதால்
நீறிடும்நவலோகமும்ரத்தினம்
தேறுந்தேறும்வெண்வங்கமொருபலம்
சீரதாய்முப்புசுன்னங்களஞ்சிடை
சாரிசாரிசாரித்துநீறதால்
ஆரபாரமதின்கீழ்மேல்பூசியின்
நீறிநீறியநீற்றினமாகிடும்
ஆறியுங்கதிர்வாலைரவியதே.
📖 பாடல் எண்: (1013) 📖
அந்தரத்தலர் தாமரைமூலிதான்
அங்ஙனே அரைத்தங்கியும்பூட்டிமேல்
இந்திரக்கவசங்களுஞ்சீலைமண்
ணேழுஞ்செய்துஇரவியில்வைத்தெடுத்
தந்திரப்புடங்குக்குடபுடமாமதில்
அந்தவங்கமதிநிறவெண்மைதான்
சந்திரனொளிபோலும்பிரகாசமாய்
விந்தையாமிதுவெள்வங்கம்நீறுமே.
📖 பாடல் எண்: (1014) 📖
நீற்றினால்நவலோகமுநீற்றிடும்
நேர்மைநேர்மைநிகரிதுக்கொக்குமோ
சாற்றினார்குருவெள்வங்கச்சுன்னமாம்
தாம்பிரபற்பஞ்சாஸ்திரவேதைகாண்
சூத்திரமிதுசொன்னாரகத்தியன்
தொட்டதெல்லாந்தொடுகுறியாமிது
பார்த்துபார்த்துப்பலபேர்மயங்கினார்
பாடுபட்டால்பலனுண்டுஆண்டையே.
📖 பாடல் எண்: (1015) 📖
இந்தசுண்ணமெடுத்துக்களஞ்சிடை
யெந்தெந்தசரக்கெல்லாமிசைந்திடத்
தொந்தங்கோடி தொடுத்துமிழ்நீரதால்
அந்தந்தசரக்காவதுமோர்பலம்
அந்தமாய்க்குழைத்தந்தசரக்கின்மேல்
இந்தப்பாகமிதுகவசஞ்செயில்
கந்தப்பூமலரம்பிகைப்பொற்பதம்
சிந்தைவைத்துத்தெரிசிந்துப்போற்றிடே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 6️⃣8️⃣ ஞானவெட்டியான் (1016-1019) 👈