திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வேறு- கவி
📖 பாடல் எண்: (1016) 📖
பூரணச்சந்திரன்போலொளிவீசிய
தாரணைத்தசதீட்சைதவறிடில்
காரணக்குருகண்டுமகிழ்ந்திடும்
வீரியத்தாதுவும்விந்துகட்டிடும்
காரியமாஞ்செந்தூரத்திற்காயமும்
தேரிடுமொருதிங்களுணர்ந்ததால்
மாறமாறமதியமிர்தம்மதுசேரச்
சேரச்செந்தூரமொழிவதே.
வேறு- விருத்தம்
📖 பாடல் எண்: (1017) 📖
முத்துடன் பவளம் பச்சையும் வயிர
முழுவயி டூரியங் கெம்பு
முற்பகப் புஷ்ப ராகமு மிவைகள்
முதிர்ந்திடா மரகதத் தோடு
சத்தெனு மஷ்டரத்தின மிதுகாண்
தனிவகை யொவ்வொன்று பலந்தரன்
தரணியில் வேதை சத்துக ளிலகுஞ்
சந்திர னுப்புவா லதிதம்
விந்தெனுங் குளிக்கல் தனிலுமொவ்வொன்றாய்
விளங்கிடு முப்புவின் சுன்னம்
இதுபண விடைகொண் டருள்பெற அமுரி
விந்துநீர் தனிலிரு சாமம்
கற்றவர் கமல பொற்பத மடியேன்
கருத்தில்வைத் தர்ச்சனை செய்து
காரண குருவின் கடாக்ஷமும் புரியக்
கனகவே தையுமருள் கூர்வாம்.
📖 பாடல் எண்: (1018) 📖
கனகவே தையுமா மெழுக்கதின் பதத்தில்
கண்டிடை வழித்துயில் லையதாய்க்
கருணைகூர்ந் திலகுங் கதிர்முகம் படவும்
காய்ந்ததை வட்டியில் தாக்கி
வினவிதைத் தனைமேல் மூடிச் செய்கை
விசிதமாய்ச் சீலைமண் ணேழு
விக்கிர மாய்ரவி தன்சுவாலை யில்வைத்து
மிகுபுட மைம்பது எருவில்
தனமிது வெனுமே புடமெனு மாறித்
தளையெடுத் தனுக்கிரகம் புரியச்
சத்துமுத் ததனில் தந்திர னொளிவாய்ச்
சங்கற் பமில் லாமலே
இனமதா யிலகு மிதுயுவ ரசமா
மெடுத்துட னுருக்கினா லுருகும்
எவர்செய லிதுகா ணமைப்பிருந் ததனாற்
செய்திடு மினியுரைப் பதுவே.
📖 பாடல் எண்: (1019) 📖
செழுங்கன லொளிவா மழகுதன் விசிதஞ்
செழித்திடும் பவளமோர் பலமாய்த்
தெளிந்தநற் கலுவ மதனிலிவ் வகையைத்
திருத்தமா யூட்டிமென் குருவில்
அழுந்தமுன் னிடைகொண்டமுரிவிட் டாட்டி
யருளிரு சாமமவ் விதமாய்
அதைவழித் திலது மெழுகுபோல் வருத
லருமு கம்பட வருளியே
தெளிந்ததோர் வட்டி யதினதை யூட்டிச்
சிரமுடி மேலதாய் மேவிச்
செய்கைமண் ணேழு சீலையுந் திரமாய்ச்
செப்பிடில் சந்தது மிசைவாய்
விடமெலு மருணன் கனவில்தாக் கிவிளங்
கிடீரெரு வுமன் பதனில்
மேலதாய்ப் புடம்போட் டியல்புசத் திறங்கும்
வெண்ணிற மதியொளி யிதுவே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 6️⃣9️⃣ ஞானவெட்டியான் (1020-1030) 👈