திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
விருத்தம்
📖 பாடல் எண்: (0880) 📖
ஜெகமேவியவாருலகுந்தனிலிலகும்பரி
யகவாரிதவானகிலம்புகழ்மதிசந்திரசுகவானுள
பூரணவம்பதிகதிர்சூழ்வட-மகமேரதில்வாழ்ந்திருவம்பல
சுடர்மாமணிகனம்பல- இடைபிங்கலை சுழியின்முனைதுரியாதித
தலமேவிய நான்கலையொத்துரு வலஞ்சுற்றினி- யிடபாரிசமாய் நடனம்புரி
அருள்சாதனை கருவூர்வளநா- டுடன்பாடுளநிருபங்களில்
அதிவானகர்வந் துதிபெற்றொரு மலர்பொற்பதம் விதிதன் செயலென்
தந்தைகூறதிதங்களையுதித்தவந்- தனனாந்.
📖 பாடல் எண்: (0881) 📖
மதுபாரமுரியவரிந்துசரீரந்தனிலலிவிந்துகூர்
களிவின்பதரசகெந்தியின்
தசதிங்களுமுண்டமுதேபசு
மமிர்தங்களும்விதபோசனமாம்
விரும்புங்கலைமதிசாரணை
அகங்கொண்டேபகிரண்டமுந்திருவம்பரயுகமண்ட நதிசூழ்கமலம்வரைசுற்றிதழ்
மணிபூரகமனைவாசியுமே
கரைகண்டுளனருள்தாவென
துரைகண்டுகையாய்தசவாய்வது- மொருமித்துடன்
அரியாசனமே-எவர்க்குமுயிரெனக்கும்பொருள்-அறுநீர்சுவை
செயநீர்கதிர்வருமேமதிமனோவேகமாய்-தனனாந்.
📖 பாடல் எண்: (0882) 📖
இகம்பரமேவெளியிற்கனிமதுரத்துடனிடராகிய
சஞ்சலத்துள் துடராபலங் கருவாகியபஞ்ச ரூபத்தினிலுற வக்கணை
கதிர்மேவிய பாலமிர்தம் பொழியமுதுண்டபின் கருணாலயஞ் சுழிமேல்சுடர்
சவியத்தசைகலை கொண்டந்திகாலையிலும் புளிநீருகை
அருநீர்சுடருசினாலுனது- கெதியென்னுடன் பசியத்தனை
யெருகும்பியினில் குடியேறிய முனைவாசியும்
பிரியாததுநங்கின வென்றுடன் முதலட்சரந்துடியாகவு
மொருமித்துடன் முடிசுற்றிவினாடித்தறி- தனனாந்.
📖 பாடல் எண்: (0883) 📖
வழிகண்டினி பாராதிதப்பெருந் துறையாகிய
மதவாகியதோகுசிகண்டதின் முனைதாரையில்
சுழியாலும் யான்விழிமாதனுக்கிரசம்பரி-
கரைவேதகமாய் ஒருநாளிலும்
பிரியாமலு மபிராமியின்- மலர்ப்பொற்பதம் விதியாய்ப்பணிந்து
தொழுதேயருள்- அறுநீர்புளியுமுறவாய்ரவிமூலந்தனி
லுருவேகமதா யரியுமரன் பிரமாதிகள்-இமையோர்களு மெவராலறி
புவனந்தனில் கருவாய்வெகு செந்தனைவோரின்முடலிப்படி
கருநெல்லியின் கனியுண்டு வெண்ணதிமாமதியருள் கண்டனர்- தனனாந்.
📖 பாடல் எண்: (0884) 📖
அனைவோர்களுமேஅறியாரறிந்- தவராகிலுமனவுற்பனமாய்
மதுரந்தனையமுதென்றுௗ- தெவராகிலுந்தெனமிக்கரு
சுழியென்றதுதவறாமலுநூல்- வழிகண்டுறைமவுனந்தனைக்
கெவனாதிகள்வெகுநாள்யுகஞ்சிவயோகஞ்செய்
தறியாமலும்சவமாகினர்கள்- தவஞ்செய்யகமவர்பெற்றுடன்
உவர்கண்டறியாருதகங்களி- மதபேதமாயிவர்ஞானிகளா
யிலகும்புவியுலகங்களில்பரதேசியதாய்சுகபோகிகள்- குகைசாதனைவயிறுசீவன்
கவனத்துடன்உடல்போய்ச்சுடுகாடேகினர்- தனனாந்.
📖 பாடல் எண்: (0885) 📖
தசவாய்வதுவும்வசமாய்க்கலைசுவாசங்களை
யசையாமலுமேஅடியாகிய- மூலந்தனில்
விசுவாகியதும்விதமாய்வயிராக்கியத்துட னிசவாக்கினைகொண்
டினசிங்கெனமவுனந்தனிலருள் பெற்றுடன்
யோகத்திரு- அருள்பெற்றனுக்கிரகத்துடன்
கெதியாகியதோர்- இருளத்துடன்வரமுத்தியில்
திருவாய்மதுரம்பதமேவியமோட்சத்
துறைகறைகண்டெனுமே – மதியும்
ரவிசிவரூபமும்- குருமந்திரமாய்ப்
புகழ்யங்கென-சுழியின்முனைமுதலட்சரமிதுபின்னிடு
கடையட்சரமறிவித்தனர்- தனனாந்.
📖 பாடல் எண்: (0886) 📖
சுகசீவனமாய்எருபோதமு- தமிர்தங்களில்
பெரியோர்களுமே- எரிகும்பிதன்வார்பாடொழிந்
துலகங்களிலும்கருவாளிகள்- அவர்மேவிய
தலவாசமதாய்மருவிப்புனல்- மதுரங்களை
மவுனம்பரி- துரியாதீதமிடைபிங்கலை
சுழியின்முனைகிரிசூழகமாய்- தச
தீட்சையிலதித்தவஞ்- ஜெகசூஸ்திரமாய்நடனந்
திருமடைவாயினிலுயிராகியதோர்
பறவைப்பட்சியடைவைப்போலு
மிவர்தன்னெறி- பார்மதிதன்னிடரவியின்
செயல்களைக்கொண்டுடன்- தசவரண்டினில்
புலனைம்புலன்முனையாந்தனர்- தனனாந்.
📖 பாடல் எண்: (0887) 📖
வாய்வோடனல்சேரசையாமலும் வசமாவது
தேய்போம்பிறைதான்- திறையாலுமலுமதிபூரண
பிறையாவதுமேமதிவன்னியில்- உருவாகிய
பின்னிறவாயுடல்- சேர்வம்பதிகெதியாகியபின்
சிவஞானிகளவர்பெற்றபேர்- துறவறமே
நிசமென்றிரு- பிறவாரிதுமூன்றிலட்சரம்
மீக்காற்றுணர்பழுதென்றிளையார்பத்மப்
பதங்கருணைப்பெறுமறவாதொருநாள்
மவுனந்தனில்- கவனம்விடாரருள்
பெற்றடைவாரமிர்தச்சிவயோகத்தினில்
திருவள்ளுவனுரைதன்மொழி- தமிழ்
வண்ணமுமருள்பெற்றெழும்- தனனாந்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 5️⃣8️⃣ ஞானவெட்டியான் (888-900) 👈