திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வேறு – விருத்தம்
📖 பாடல் எண்: (0863) 📖
பழக மூலமானது ஆமதசமும் பாயும்
பரீட்சைப்பார்த்த தருளிய வழக்கம்
அழகு முடைய அம்பிகைக் கமல
மனுதின மர்ச்சித்துப் பணிந்தேன்
மழைகன நடையும் ரவிஎனும் காற்று
மனிதர்கள் சாரமு மாய்கை
பிழையைப்பற்றி றிடவும் சோம்பலுந் தூக்கம்
பிதற்றலுங் கோபமா காதே.
📖 பாடல் எண்: (0864) 📖
தள்ளுவதன் பொருட்டு கஞ்சாவெனும் மதுவும்
தகர்ந்துமேற் கரிவகை சுவையும்
விள்ளுவதன் பொருட்டு கலவை, பால்
மிகவும் பச்சரிசி யுஞ் சமைத்து
எள்ளதோர் கரிய வேம்புடன் அமுரி
உப்பது மிளகுடன் தூளாய்ச் சேர்த்து
சள்ளையில் லாமலொரு போதுண்டு
முதுசாம்பல் மேலொரு போதுண்டு.
📖 பாடல் எண்: (0865) 📖
அன்புடன் மூன்றாண்டு வரை முதற்கொண்டு
அருளினேன் மகாராச யோகம்
இன்பதேனெற்ற மிது புளி சுன்ன
மிருதுவைக் கற்பங்கொண்டு அடைவாய்ப்
பின்பது செலுத்திச் சென்றது போகப்
புளிதனைப் பதனஞ்செய்திடவும்
தென்பெனுஞ் சேதஞ்செய்கையும் இலையார்
திருத்தமாய்ப் பாண்டத்தில் அடைத்தே.
📖 பாடல் எண்: (0866) 📖
உதகமென் றமுரி யுனதுள் நின் றிலகு
முவரச மூசிநீ ரிதுகாண்
பதமெனும் புளியோன் றமுரியா லுளதால்
பாகமாய்ப் பாண்டங்கொண் டடக்கி
விதமிது பாகஞ் சமாதிவைத் திருந்த
மிகுந்தமுப் பதுவய தண்டம்
சுதனரு ளாலும் பற்பஞ்செய் துணரச்
சூக்ஷமே சொல்லுவே னாண்டே.
📖 பாடல் எண்: (0867) 📖
மதுரத்தே னின்பா மலப்புளி யிரண்டு
மார்க்கமாய்க் கரைந்துநாள் மூன்றும்
பதனமா யில்ல மேல்மூடி செய்து
பதமதாய் நீர்தெளிந் ததுநீர்
விதமெல்லாங் குப்பி தனிலடைத் ததுபின்
மேருவென் றெனுமண்ட மதனைச்
சுதமதாய்ச் சுற்றித் தயமதின் கம்பால்
தூளதா யிடித்துமா வதுவே.
📖 பாடல் எண்: (0868) 📖
இடித்துமாக் கருவை வடித்துசூ ரணமா
யினியொரு சீலையில் கிழியாய்
முடித்தொரு படிநீர் தோண்டிகொண் டூட்டி
முக்கியமா யாண்டசூ ரணத்தைத்
தடுத்ததிற் பாய்ச்சி வன்னியிட் டெரித்துச்
சலமெலாந் தொக்கிச்சுண் டிடுமால்
படித்தொரு கல்வம் பாய்ச்சியே பின்பு
பழம்புளி யமுருநீர் விட்டே.
📖 பாடல் எண்: (0869) 📖
வரையிரு சாமம் வற்றவற் றதுநீர்
வார்த்ததில் மெழுகது பதமாய்ப்
புரையில்லா வழித்துச் சதுர்பில்லை கட்டிப்
புகழ்கதிர் முகந்தனில் காய்ந்தால்
நிரையடி யோடு உள்ளதாய் வைத்து
நின்றமே லோடது மூடித்
துறையதாய்ச் சிலை கவசமெண் ணேழு
சூட்டியே புடமுழ மாமே.
📖 பாடல் எண்: (0870) 📖
அந்ததோர் புடமிட் டக்கினி மூட்டி
யதுதண லாறிய பின்பு
இந்ததோ ரண்ட மெடுத்துடன் பார்க்க
இந்திர னொளிவதுக் கதிதம்
சந்திரபுஷ் கரணி சாரையி னாட்டஞ்
சாரணை சதகோடி தேர்ந்த
மந்திர சுரூப மவுனமந் திரங்காண்
மகத்துகள் மறைந்தது மிதுவே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0871) 📖
சுன்னங்கடுங் காரமிது சுக்கிலசு ரோணிதத்தால்
விண்ணமில்லா தண்டபற்பம் வெகுபதன மாய்க்கருதித்
தன்னையறிந் தேமதியால் தானறிந்து கற்பமதில்
சொன்னேன்குருபஸ்பமதைத் தொடுத்தேன் பணவிடையே.
📖 பாடல் எண்: (0872) 📖
காரமதில் சாரம்விட்டுக் கற்பமிதையிலேகியமாய்ச்
சீருடனே பஸ்பமிட்டுச் செய்விதமா யுண்டேன்காண்
மாறஅதி காலையிலு மாலையிலு மிவ்விதமாய்த்
தேறவுங்கா னுண்டுதச திங்கள்நிறை வேறினதே.
கலித்துறை
📖 பாடல் எண்: (0873) 📖
சூதா மாய்கை யடராமல் வாசியைத் தூக்கிவிட்டு
ஊதாம லூதிப் பிராணாயமூல முள்ளடங்க
வேதாக மத்தின் விதியை யறிந்துகற்ப வேகமதாய்
ஆதாரங் காண விராஜாங்க யோக மறிந்திட்டனே.
📖 பாடல் எண்: (0874) 📖
மூன்றாண்டு மாச்சுது மூலப் புளியிந்த முக்கியத்தால்
ஆண்டாண்டு மாண்டு மருள் நாலு மாண்டி லறியும்விதம்
காண்டா புரமெரித் தானந்த மூலக் கதிர்மதியில்
தூண்டா மணிவிளக்கேற்றிவிட் டேன்திரு வள்ளுவனே.
📖 பாடல் எண்: (0876) 📖
திருவான சோதி கருவூரு நாட்டில் தேன்பொழியும்
பொருளான வாலாம் பிகைமலர்ப் பொற்பதம் போற்றிசெய்தேன்
அருளா மதிமலர் சிவராஜ போக மறிவித்தனள்
குருவபய கத்தி னுபதேசத் தாலுங் குறைவில்லையே.
📖 பாடல் எண்: (0876) 📖
தனமே வியகரு காரசா ரத்தினில் தான்மருவித்
தினமுமைம் பாச மவுனங்கொண் டேன்திரு வள்ளுவனும்
மனமே வியகுரு வாக்கியத் தாள்மூல வாசிகொண்டு
புனலா வதுங்கணை சரமாற்றி யேற்றிப் பொழிந்திட்டேனே.
வெண்பா
📖 பாடல் எண்: (0877) 📖
கல்லுப்பின் வாறு கருத்தறியா துண்டுமனு
வல்வினைக்குள் ளாகிமனம் வாடினார்- கல்லுப்பு
வெள்ளைக்கல் லுப்பு வெகுவிதமா யாய்ந்தாலும்
உள்ளமதி லுண்டென்று உன்.
📖 பாடல் எண்: (0878) 📖
என்று மிந்துப்பு எண்சா ணுடலிருக்கக்
கண்டுவறி யாதென்ன காரணமே- என்றுமதி
வாரி யமுரியதை வன்னியிட்டுக் காய்ச்சியபின்
வீரியமா பானுணரு மெய்.
📖 பாடல் எண்: (0879) 📖
உப்பின் கசடதுபோய் ஊறலது மாறினதால்
முப்புசுன்ன மாமதற்கு மூன்றுபேர்- உப்பதனால்
கற்பாந் தரங்கோடி காய மிதுவலுத்துச்
செற்பாயும் வாசியினால் தேகம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 5️⃣7️⃣ ஞானவெட்டியான் (880-887) 👈