திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
விருத்தம்
📖 பாடல் எண்: (0838) 📖
புழுக்கள் செனித் துயிர்களதும் புளியைக்கொல்லும்
புளிப்பாழு உவர்ப்பாழு துவர்ப்புப் பாழு
களிப்பாழு கருவிகற்பங் காயம் பாழு
காரமதுஞ் சாரமதுஞ் சயிலம் பாழு
அளியாது புளியருந்த ஆண்டே சொல்லும்
ஆவின்பா லன்னமது மிரண்டும் போதும்
வெளிப்பாழாய்ப் போகாமல் புளிதா னுண்டேன்
வேகமென்ன அதிவேகம் விரும்பி னேனே.
கற்பமுண்ணும் முறையும் பத்தியமும் தரு
கற்பமுண்டேன்கான்- மூலப்புளி-
கற்பமுண்டேன்காண்.
📖 பாடல் எண்: (0839) 📖
கற்பமென்றமதிசாரையைக்கொண்டேன்
சத்திநாதமூலப்புளியதுங்கூட்டி
உற்பவமாகமூன்றாண்டிற்காலைமாலை
உண்டுமகாராஜயோகந்தனில்நின்று- கற்ப.
📖 பாடல் எண்: (0840) 📖
அன்னம்மாவின்பாலும்பின்னம்வராமலும்
ஆக்கைதனில்வேகஞ்சேர்க்கையில்லாமலும்
முன்னேமூன்றேமுக்கால்கற்பஞ்சாதித்துப்பின்
அண்டமுண்டேன்வாசிஅப்பியாசஞ்செய்துயான்-கற்ப.
📖 பாடல் எண்: (0841) 📖
கதிரவன்முகங்கண்டதிகாலையில்
மதிதனில்மலப்புளியதுமூட்டி
விதியதுவிட்டகுறையிந்தப்படி
துதிசெய்துமூலச்சுழியில்நின்றுநான்- கற்ப.
📖 பாடல் எண்: (0842) 📖
பானத்தினால்வெகுபழக்கஞ்செய்திட
ஞானசித்திக்கொருகளிப்புண்டாச்சுது
ஊனிருந்தாலுயிர்யோகம்நிலைத்திடும்
நானிருந்ததிவ்விதநாட்டத்திலுஞ்சுழி- கற்ப.
📖 பாடல் எண்: (0843) 📖
காலைதன்னில்புன்னைக்காயளவுரெண்டு
மாலைதன்னில்பதமாகுமதிலொன்று
சீலம்பொழிந்திடுந்தேனருவிபாயும்
ஞாலத்திலும்வாசிநாட்டம்புரிந்துயான்- கற்ப.
📖 பாடல் எண்: (0844) 📖
அண்டத்தில்வாசியகண்டத்தில்பாய்ந்திடக்
கண்டத்தில்தாரைகடகத்திலூதியே
மண்டலமூன்றும்வலமாகச்சுற்றியே
தெண்டனிட்டுச்சிவசத்தியைப்பூசித்து- கற்ப.
📖 பாடல் எண்: (0845) 📖
சண்டப்பிரசண்டசராசரந்தாண்டியான்
குண்டலிவாசியைக்கும்பித்துஸ்தம்பனம்
நின்றுகண்டதாரை நிர்ப்பந்தமாகவும்
உண்டுமூலச்சுழிஊதிமேல்நோக்கியே- கற்ப.
📖 பாடல் எண்: (0846) 📖
தந்தைவிதிதலைசுற்றிச்சிமிட்டவும்
இந்தவிதமிகுஇரண்டுவினாடிகாண்
அந்தராசயோகமாண்டுநாளுக்குநாள்
எந்தனொருதிங்களிவ்விதமாண்டையே- கற்ப.
📖 பாடல் எண்: (0847) 📖
வாசியென்றால்பிராணவாய்வுமெழுந்துடன்
வீசியெழுந்துமேல்மூலஆக்கினையினால்
பூசிதமாயண்டரண்டமளாவியும்
நாசிதனில்பனிரெண்டங்குலம்பாய்ந்து- கற்ப.
📖 பாடல் எண்: (0848) 📖
ராஜயோகந்தசதிங்கள்வாலாம்பிகை
நேசத்துடனின்றுநிர்மலரூபமாய்
வாசிநிலைத்திடமூலாதாரத்தினில்
பாசமேன்மேல்வைத்துப்பூசிதமாகவும்- கற்ப.
📖 பாடல் எண்: (0849) 📖
உண்டபின் கற்பமுள்ளவிந்துவிசாரணை
கண்டத்திலூதிக்கலைபிறழாமலும்
இன்றுமூலத்தின்வினாடிகள்ரெண்டுமே
ஒன்றசைவாய்நவத்துவாரமொடாமலும்- கற்ப.
📖 பாடல் எண்: (0850) 📖
மனம்புத்திசித்தமாண்மையொன்றாகவும்யான்றாகவும்
இனமிந்தவாசியேறியண்டத்தினில்
தினமூன்றுவேளைசாதனைசெய்துயான்
முனைசுழியில்மூதண்டம்பாயவும்- கற்ப.
📖 பாடல் எண்: (0851) 📖
வங்கென்றுவூதிவாலாம்பிகைமூலத்தில்
வாசிவாவாவென்றுமார்பிலிருத்தியுஞ்
சிங்கென்றுவூதிசிவரூபத்தினால்
மங்கென்றுமேற்றியும்வாசிசுபாரினில்- கற்ப.
📖 பாடல் எண்: (0852) 📖
இவ்விதமாகஇருத்திமேல்நோக்கிடக்
கல்விச்சுழியில்கதவுந்திறந்திடும்
பல்லிப்படர்ந்தபரஞ்சுடர்காணவும்
அவ்விதமாகரகசியமாண்டையே- கற்ப.
📖 பாடல் எண்: (0853) 📖
மூலச்சுழிமுனைமுடிவிலிருந்து
பாதத்திலேறியும்பானுவினால்வாசி
யாலத்தினாலிந்திரஜாலமதாகவும்
தூலத்திலும்வெகுசூக்ஷத்தைக்கண்டுயான்- கற்ப.
📖 பாடல் எண்: (0854) 📖
நித்திரைசோம்பல்நிகழ்த்தமதிதனில்
சுத்தவயிராக்கியஞ்சூக்ஷசுகாதீதம்
சத்திநாதமூலசைதன்யத்தில்
கர்த்தனருள்பதங்கண்டு மகிழ்ந்துமே- கற்ப.
📖 பாடல் எண்: (0855) 📖
தேகமெனுமெண்சாண்சித்திதருஞ்சுழி
யாகமதுதனிலமுரியுங்கொண்டதால்
வேகமதுமீறிமிக்கனலால்சடம்
யோகசித்தியோராண்டினிலாண்டையே- கற்ப.
📖 பாடல் எண்: (0856) 📖
அமுரிமூலப்புளிஐந்தோராண்டினில்
அமிர்தசூதவிந்தாலும்வலுவதாய்க்
குமுறிடுமலைசாகரநீரெல்லாம்
அமுரிமாறிஅதுசுத்தநீரதாம்- கற்ப.
📖 பாடல் எண்: (0857) 📖
காயாதிகற்பக்கரிசைத்தாலுமே
ஞாயாதிஞாயஞானம்வந்தெய்திடில்
வாய்த்திடச்சலமலமுமாறினால்
காயாதிகற்பங்காணுவோர்ஞானியே- கற்ப.
📖 பாடல் எண்: (0858) 📖
பாழ்வினைபோக்கிமுப்பாழ்கடந்தானந்தம்
சூழஞ்சூடாமணிசோதிப்பிரகாசத்தில்
ஆழிதிரைகடந்தண்டத்திலேறியான்
வாழிமேன்மேலும்மணிவிளக்கேற்றியே- கற்ப.
📖 பாடல் எண்: (0859) 📖
சூழும்வாலை சுரூபமெடுப்பதும்
வாழுமூப்புமயத்தையறுப்பதும்
வேள்விதொண்ணூற்றறுவரும்நீறினால்
பாழும்பாழுமுப்பாழும்போம்நீறியே- கற்ப.
📖 பாடல் எண்: (0860) 📖
யானைசெந்நாயதுக்குள்மரணமும்
பூனையெலிபுழுக்குள்மரணமுந்
தேனைபானந்திசையுண்டவர்க்கொரு
ஞானபேதமெய்ஞ்ஞானிகளாவரே- கற்ப.
📖 பாடல் எண்: (0861) 📖
ஈனருக்காயெடுத்ததுஞானமோ
ஏனோவேனோவியம்புறீர்மானுகாள்
ஆனதாலுமறிந்துபாரங்ஙனே
ஞானமுஞ்சுழிநாட்டமறிவரே – கற்ப.
📖 பாடல் எண்: (0862) 📖
அன்னைதந்தையருளாலறிவதோ
உன்னும்பாதியிற்பத்தியமைப்பதால்
வின்னம்வாராவிதியிருந்தால்மதி
சொன்னேன்கற்பச்சுகாதிதசுகமதே- கற்ப.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 5️⃣6️⃣ ஞானவெட்டியான் (863-879) 👈