திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
கொச்சகம்
📖 பாடல் எண்: (0825) 📖
தந்தைமதி யாலுதித்துத் தாரணியி லுஞ்சிலநாள்
வந்துபிறந்துபுவிமாய்கைதனி லேயுழன்று
அந்தமதியாலெனது அகமக் குருக்களினால்
விந்தைசில நான்கிரியை மெய்யென் றிருந்தேனே.
📖 பாடல் எண்: (0826) 📖
பொய்க்குரு வினாலெனது பொக்கிஷமெலாஞ்சிறந்து
கைப்பொருளெல் லாமிழந்தேன்காரியகுருக்களினால்
இப்படியாய் மேதினியில் யான்சிலநாள்போனபின்பு
மெய்க்குரு முனியருளால் மெய்ஞ்ஞானப்பெற்றேனே.
📖 பாடல் எண்: (0827) 📖
எண்சாணுடல்தனி லெய்ந்தொண்ணூற் றாறுவிதங்
கண்ணாரத்தத்துவத்தின் காட்சியெல்லாங்கண்டுணர்ந்து
மண்ணாசை பெண்ணாசை மாய்கைபொரு ளாசைவிட்டு
விண்ணாசை கொண்டுநெறி மெய்ஞ்ஞானம்பெற்றேனே.
📖 பாடல் எண்: (0828) 📖
கற்பமென்றால் லற்பமல்ல காயசித்தி யாவதற்கு
உற்பனமே யானறிந்து வுண்டேன் மதியமிர்தம்
தற்பரத்தா லெண்சாண் சரீரமதைச் சுத்திசெய்து
முற்பவமோ ராண்டுசென்று
முதல்தீட்சைபெற்றேனே.
வெண்பா
📖 பாடல் எண்: (0829) 📖
முதலிருந்த வூழ்வினையை முப்பாழைச் சுட்டுமனம்
பதறாம லுதியாமல் பாடுபட்டேன்- முதலிருந்த
நல்வினையுந் தீவினையு நாடாம லும்பறந்து
வல்வினையைப் போக்கிவிட்டேன் வாறு.
📖 பாடல் எண்: (0830) 📖
காயசித்தி யாலெனது கர்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே- காயசித்தி
மூலப் புளியதனால் முதல்தீட்சை யாச்சுதினிக்
காலமென்ன ரெண்டாண்டில் காண்.
கலித்துறை
📖 பாடல் எண்: (0831) 📖
பானத்தைக் கொண்டு மூலத்தை யூட்டிப் பழுதுவரத்
தேனத்தை யுங்கிளி யாகவுஞ் செய்து விதுபதமாய்
மோனத்தை யுண்டு யதிகாலை வாசி யோகத்திலும்
ஞானத்தில் நின்று மவுனம்வைத் தேன்சுழி நானறிந்தே.
📖 பாடல் எண்: (0832) 📖
சுழிமுனை யோகஞ் சதுர்நாலு சாமந் தொடுசரமாம்
வழியும் பேரின்ப மதுவாரி யுண்டு வனமதுவாய்ச்
சுழியாமல் காலையு மாலையு முச்சி கண்டத்திலும்
அழியாப் பதவியில் வாசிகொண் டூதி யருள்பெற்றேனே.
📖 பாடல் எண்: (0833) 📖
தினமொரு வேளை யதிகாலை மூலப் புளிதெளிவாய்
மனமிக்க வுண்டு வருங்கால மாண்டு வருஷமதும்
கனமிப் படியினங் காலையி லுண்டு மாலைவிட்டேன்
இனமிந்தத் திங்கள் தசபத்து மிவ்வித நெஞ்சகமே.
📖 பாடல் எண்: (0834) 📖
ஆண்டிது மூன்று தீட்சைரெண்டாகு மளவறிந்தேன்
வேண்டிய மாது ரதியெனக் காக விரும்பி நின்றாள்
தூண்டிப் பூராகம் பூட்டி யிழுத்திடுஞ் சொற்பமதாய்
ஊன்றிச் சுழிமுனை வாசியைக் கொண்டு ஊதினனே.
📖 பாடல் எண்: (0835) 📖
முன்னா ளமுரி தசபத்துத் திங்கள் முதற்கொண்டுயான்
அன்னாள் முந்நூறு மமுரியுண் டேனது யென்னவிதம்
சொன்னாள் சடச்சத்தி முன்னா ளிருந்தசுகவினையை
என்னால் மதிகொண்டு சுட்டுநீ றாக்கி யினம்பிரித்தே.
📖 பாடல் எண்: (0836) 📖
இருவினையாகிய கர்மதுர்ப் பாதக மெய்திடினும்
கருநீ றாக்கிப்பா னத்தினாற் சுட்டுக்கணைதொடுத்தேன்
உருகியெண் சாணுடல் பிர்மாதி கற்ப முண்டிடவும்
சுருக்கிக் கறியுப்பமுரியும் பானதின் சூதறிந்தே.
விருத்தம்
📖 பாடல் எண்: (0837) 📖
கர்த்தனருள் சிவதீட்சைப் பதினொன் றுந்தான்
காயசித்தி யோகசித்தி வாதஞ் சித்தி
வர்த்திகமாய்ச் சித்திசெய்து மாவின் பாலு
மன்னது மிரண்டளவால் பற்றோ யில்லை
வெற்றியெய்தாக் கறிவகைகள் மூலஞ் சேர்ந்தால்
வெறும்பாழு கல்மசத்தால் வேக மில்லை
புத்தியில்லாப் பழுப்பேறும் வெண்மை யில்லை
புளியில்பழு துண்டாகிப் புழுக்க ளாண்டே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 5️⃣5️⃣ ஞானவெட்டியான் (838-862) 👈