திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
யோகசாதனை
தரு
ஆனந்தபூரணதிவ்யபரிமௗகெந்தம்- சுழிமுனை
ஆதாரமூலச்சுகந்தசுரோணித அந்தம்.
📖 பாடல் எண்: (0783) 📖
ஞானசுகாதீதசூக்ஷசடாதார- பீடம்
செகநாதப்பிரகாசப்பிராணலயமேவியமாடம்-கதிர்
வானஞ்சூழ்சாகரமேருதீவாந்தர நாடு- புவி
மதிதலங்கருவூர்வளர்நாட்டினில்வீடு- மலை
சோனையருவிசூழ்பானமளாவியசீலம்-மதிவளர்
சோதிமணிசித்திரக்கூடமளாவிய மூலம்- புனல்
கானலுலாவியசிவசிங்காதனமேரு- சத்தி
காரத்தினாலளவில்லாச்சரக்கெல்லாநீறு- ஆனந்த.
📖 பாடல் எண்: (0784) 📖
அந்தத்திலுமூல ஆக்கினைமேவம்பிர்மாண்டம்-அனல்
அக்கினிசூழும்ரவிகதிர்வன்னியைக்கண்டோம்-இவை
சுந்தரநாதச்சுரோணிதசூரியகாந்தி- எங்குஞ்
சுடரொளிவெளிபிர்மகபாலமுமேந்தி- நாபி
உந்தியின்கீழ்வரை கந்தமூலவர்க்கக்கனிதான்-உப்பு
உவரென்றால்மூலப்புளிநவநீதமினிதான்- வர்னஞ்
செந்தூரஞ்சோதிஅமுதுவிளங்கியதங்கம்- திரு
மாலுடன்தங்கைசரஸ்வதிமேவிய அங்கம்-ஆனந்த.
📖 பாடல் எண்: (0785) 📖
அம்பிகைவாலையபிராமியென்றும்பிரசங்கம்- திரு
அண்டரண்டபகிரண்டமளாவியசிங்கம்- திரு
நம்பியிருந்துலகாதீதம்புகழ்நாதம்பிருதிவி
நாட்டத்திலுங்காயகற்பமுண்டோரசவாதம்-இன்பங்
கும்பிதனிலிருந்தேநடனம்புரிவாசி- ஏமங்
கோரக்கர்மூலிசடையென்றுமேபரதேசி- பழம்
வெம்புங்கனியென்றுஎங்கும்பிரகாசமாம்வீசும்-இந்த
வீடுதனில்ரெண்டுவெளிதனிலொன்றுநேசம்-ஆனந்த.
📖 பாடல் எண்: (0786) 📖
சங்கப்பிரசங்கசிங்காரமாயெங்கும்பிரசங்கம்- புவி
தனித்துபார்க்கசவுக்காரமாம்பொங்குமேவங்கம்-கோசம்
லிங்கத்தின்கீழடிவாரத்திலும்பின்னாக்கீசம்-உண்ட
நிர்மலநிர்க்குணபாரையென்றும்நிருவாசம் – அருள்
அங்கத்திலுமெண்சாண்கும்பிதனில்மலக்கூடு-அதை
ஆராய்ந்துபார்க்க அனேகங்கண்காட்சிதான்காடு-பரி
தங்கமெனும்வடிவானவாலாம்பிகைசுரூபம்-இதைச்
சார்ந்துகொண்டுபரிசோதிக்கும்எங்கும்ரூபம்-ஆனந்த.
📖 பாடல் எண்: (0787) 📖
மானுமழுவுமதிமலர்சூடியவாசம்- சத்தி
வாறுவென்னால்சொல்லஎட்டலையிப்படிநேசம்-மூலம்
நானுமென்னாண்டையுன்பாகங்தகதியென்றுநம்பி வாசி
நானறிந்திப்படிஞானயோகந்தனில்- கும்பி
ரசந்தேனுமேமதுபானமதுரமோராண்டு – கற்பஞ்
சென்றுஈராண்டினில்தோகக்கசடுபோம்கண்டு-செடம்
ஊனெனுமையத்துறக்கமற்றுச்சிவயோகம்- வாசி
உற்பகமூலசிவராச அம்பிகாயோகம்- ஆனந்த.
📖 பாடல் எண்: (0788) 📖
காயந்ததனில்கசடானநீர்களெல்லாமொழிந்தேன்-கற்பச்
சாதனையாலெமனவனென்றவினையொழிந்தேன்-வாசி
தேய்பிறையென்றசுவாசத்தினால்வெகுகாலம்-சிவ
யோகஞ்செய்துமுத்திமோக்ஷமடைவுஞ்சீலம்- இனி
மாயாசத்திகிரியாசத்தியினால்வளர்பிறைதான்-மூல
வாசிவசமாகநாதசத்திகற்பத்துறைதான்- கக்கும்
நாயிலுங்கடையாகியவள்ளுவனாண்டே- ஞான
சித்திதனில்முத்திமோக்ஷவடையவுங்கண்டேன்-ஆனந்த.
📖 பாடல் எண்: (0789) 📖
வேதத்திலும்பொருள்மாதுவாலாம்பிகைநாதம்-சத்தி
யோகத்திலுஞ்சிவஞானசுகாதீதபோதம்- பஞ்ச
பூதத்திலுமூலகுண்டலியாதியனாதி- ஞான
போதத்திலும்பேரானந்தமகாராஜயோகம்- கியான
போதத்திலுஞ்சத்திபொக்கிஷசூத்திரங்காணும்-இந்தப்
புகைப்பொருள்திறவாதென்னவாகிக்கவேணும்-இது
காதற்றவூசியறியுமகத்துகள்- பேதம்
கைகாட்டத்தொடுகுறிகண்டப்புளிநாதம்- ஆனந்த.
📖 பாடல் எண்: (0790) 📖
காயமென்றமதுபானமமுரியில்தானும்- ரவி
சத்தியெனும்மூலப்புளியதிலூட்டியானும்- கற்பந்
துறையெனப்படிகடிகையிரண்டுபத்தஞ்சில்- அந்த
சுகந்தமாமலர்மூலப்புளிகற்பமென்சொல்- பரை
உரையெனப்படிஅந்திவருநிகழ்காலம்- உப
முணர்ந்துஇவ்விதவாண்டுவருமதிகாலம்- இருள்
திரைவிலக்கிரிபாயமாயுண்டிடுங்கற்பம்- தினந்
தெசதிங்கள்வரும்பருவத்தில்கற்பமுவர்ப்பே-ஆனந்த.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0791) 📖
அருணனுத யத்திலதி காலைமுதல் கொண்டமுரி
வருணசல புஷ்கரணி வாருதியை யான்மறவாத்
தருணமிது பத்துமஞ்சுற தாண்கடிகை மேலதிதல்
கருனையுட னுண்டுமிக்க காரமதைக் கண்டேனே.
📖 பாடல் எண்: (0792) 📖
காரமுடன் சாரமதுங் காலைதள்ளி மாலைதனில்
பூரமென்ற மூலமிந்தப் பூரணத்தைக் கூட்டியேநான்
நேர்வுரு வாக்கிபதம் நேர்மைதவ றாமலுமே
சீரதுவா யுண்டுவரத் தேகமொளி வானதுவே.
📖 பாடல் எண்: (0793) 📖
சூரியன்போல் காந்தியொளி சோதிமின்னல் போலுமுடல்
வீரியமா யானுணர வேகமொரு திங்களிலும்
ஏறிவிடுஞ் சுன்னமர மிந்திரிய நீர்வரும்போல்
தேறிமன் னீரதுவாய்த் தேகமிந்தக் கூறாமே.
📖 பாடல் எண்: (0794) 📖
பச்சைப் பசைந்துமண் பாருஞ்சல நீர்ப்பசுமை
உச்சிதமென் னாலுரைக்க வொன்றுவிட்டு ரெண்டுதிங்கள்
வைச்சபொரு ளெய்தும்பசு மஞ்சள்நிறமாய்வருதல்
மச்சமிதை யானறிந்து மார்க்கமினிச் சொல்வேனே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 5️⃣2️⃣ ஞானவெட்டியான் (795-803) 👈