திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
கலித்துறை
📖 பாடல் எண்: (0795) 📖
திங்களு மூன்றில் மதுவாரி நாதஞ்செழுங்கனல்போல்
பொங்குநீர்பாய்ந்து வருபோது வண்டுபொன்னுருவாய்த்
தங்கநிறந் திங்கள் நாலுக்குநாள் ளேவருஞ் சாரையது
மங்கைப் பருவமஞ் சாகிடுந் திங்கள் வளர்பிறையே.
📖 பாடல் எண்: (0796) 📖
வளர்பிறை யஞ்சில் புளியதும் வாங்கி வாலைரவி
குழையப் பிசைந்து நீர்விட்டுக் கூட்டிக் கொடுரவியில்
இழையவும் வைத்திரு சாமஞ்சென் றாகு மினியதுபின்
பழையப் படியுவர் மேலும் படித்து பகருவதே.
📖 பாடல் எண்: (0797) 📖
பார்க்க விப்பாகம் வரும்பதம் பார்த்துப் பிசைந்தமண்ணைத்
தீர்க்கமதா யுண்டு செய்வித மாறு திங்கள்தனில்
ஏர்க்க விவ்வாறு யிரவிசெம் மானிடு யிவ்விதங்காண்
ஆக்கறி யாமல் பசியாறி யுண்டு யறிந்திலனே.
📖 பாடல் எண்: (0798) 📖
உதிரம் பெருகிப் பசுமைய தாய்நரம் போடிருக்கும்
மதுரம் புளகித்துச் சத்தேழு திங்கள் வாருதியும்
விதுரம் பிறந்து தேகாதி தேக மினுமினுப்பாம்
மதுரமெல் லாஞ்செழுஞ் சூரியன் போல்வரும் பாரிதுவே.
📖 பாடல் எண்: (0799) 📖
எட்டினில் திங்க ளுருவாகிப் பிண்டமெண் சாணுடல்போல்
முட்டி விலாவு மிருபக்கஞ் சூழ்ந்து முடுகியுதைத்
திட்டுக ளோடி வயிறுதொந்துள் விம்மித் தேகமெல்லாங்
கட்டி யிழுக்கு மடமாதுக் கேயது காரணமே.
வெண்பா
📖 பாடல் எண்: (0800) 📖
சோர்ந்து மனம்வாடிச் சூழ்ந்துவரு நித்திரையும்
கூர்ந்துமிக நானிருந்த கொள்கைபார்- சேர்ந்துமிக
மாய்கை மசக்காகி வாந்திமிக வுண்ட அன்னம்
பாய்ந்துவிடும் வாய்வதும் பார்.
📖 பாடல் எண்: (0801) 📖
எட்டியடி வைக்கவென் மசக்கை யென்னுடம்பு
கட்டியிழுத் தேமறித்த காரணம்போல்- வெட்டி
மண்டையிடி சூழ்ந்து வலிவயிறு குத்தலுடன்
கண்டகண்ட நோய்கள் வருங்காண்.
📖 பாடல் எண்: (0802) 📖
அஷ்டதிங்கள் நாதமடிக் கடிநீர் பாய்ந்துடலில்
கஷ்டமது வாய்ச்செழுமை காணுங்காண்-அஷ்டதிங்கள்
வாருதியாம் விந்துமலப் புளியிலு முடம்போய்ச்
சேருமுப்பு உப்பதுகாண் சேர்ந்து.
📖 பாடல் எண்: (0803) 📖
சுன்னங் கடுங்காரஞ் சூலது காண்பிண்டம்
அன்னமய மானவர லாறுபோல்- சொன்னேன்
வீரியமாய் நாதவிந்து விந்தே நவாச்சாரங்
காரந்திங்க ளொன்பதில் காண்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 5️⃣3️⃣ ஞானவெட்டியான் (804-824) 👈