திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
விருத்தம்
📖 பாடல் எண்: (0082) 📖
வீறான கையெலும்பு பிருதிவியின் கூறாம்
விதமான வுண்ணீரு பிரமன் கூறாம்
பேறான தசநாடி வாய்வு பத்தும்
பலமான நரம்பெல்லா மாலின் கூறாம்
கூறான வுதிரமெல்லாஞ் சத்தி கூறாங்
கூடி நின்ற வெலும்பெல்லாம் ருத்ரன் கூறாம்
சீரான நிணத்தோடு மச்சை சவ்வுஞ்
சிறந்தருளு மயேஸ்பரத்தின் கூறா மாண்டே.
📖 பாடல் எண்: (0083) 📖
ஆதார மானபர நாத விந்து
வாதிசதா சிவன் கூறா மாண்டே கேளீர்
பாதார முடியளவும் கணக்கதாகப்
பாலித்து விபரமதாய்ப் பகர யானும்
வேதாக மத்தில்நின்று நடனஞ் செய்யும்
விந்துநாதத் தின்செயல் விபரமாக
நாதாக்கள் கமலபதந் துதித்து யானு
நவிலவுமே யான்கண்ட நடத்தை யாண்டே.
📖 பாடல் எண்: (0083) 📖
முத்திதரு மூலத்தி லக்ஷரமே நாலு
முதலான சுவாதிஷ்டான மெழுத்தா றாகும்
பத்திதரும் பூரகத்தி லெழுத்தும் பத்து
பாங்கான வனாகதத்தி லெழுத்தீ ராறாம்
சித்திரமாம் விசுத்திதனி லெழுத்தீ ரெட்டாஞ்
சிறந்தவாக் கினையிலெழுத் திரண்டு மாகும்
சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொன் றாகச்
சார்வாகு மைம்பத்தோ ரக்ஷரங்கா ளாண்டே.
📖 பாடல் எண்: (0085) 📖
மும்மலமுந் தரித்தவொரு வாச லொன்று
முடிகாணா லிங்கமொரு வாச லொன்று
நன்மையறு சுவையறிந்த வாச லொன்று
நலமான கேள்விகொண்ட வாச லொன்று
வன்மையுள்ள வாசமறி வாசல் ரெண்டு
வளமான ரூபமறி வாசல் ரெண்டு
அன்னமெனு மம்பிகைப்பெண் ணருளி னாலே
யறிவாலே யெடுத்ததிந்தக் காய மாண்டே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0086) 📖
வட்டமதி லேறிவளர் மாமதியைத் தாண்டியொரு
திட்டவளை போட்டுநவ சித்திரமணி வாசலிலே
முட்டிநின்ற கம்பமுனை முதற்சுழி வீட்டினிலே
ஒட்டியது வளர்ந்து வொருமலராப் பூத்ததுகாண்.
📖 பாடல் எண்: (0087) 📖
பூவிருக்கப் பிஞ்சாகிப் பூவிலரும் பாகியுமே
மாவிருக்கத் தேனாகி வந்து சிறுவீட்டில்
மேவிருக்க வம்பரத்தே வேரோடித் தூறாகி
யாருவருக்கு மிங்கிதமா யரும்பாகி நின்றதுகாண்.
📖 பாடல் எண்: (0088) 📖
வடிவுகொண்ட வள்ளையுமாய் மந்திரஞ்சேர்
நாதமுமாய்
முடிவுகண்டு மூல முளைத்ததுகாண்-
வடிவதுவாய்க்
கால்வாங்கி வட்டமிட்டுக் கனகத் திருவீட்டில்
மேல்வாங்கி நின்றதுகாண் விந்து.
விருத்தம்
📖 பாடல் எண்: (0089) 📖
மாலயனும் பிரகாச மதிய தாகும்
வாழும்வளர் ருத்திரனு முருவ தாகும்
சேலான மயேஸ்வரனு முணுர்வ தாகுஞ்
செப்பரிய சதாசிவனுங் குருவ தாகும்
காலான நாடியொரு கைகா லாகுங்
கதிர்மதியால் வளர்ந்தசத்தி கருவதாகும்
மேலான விழிமடவா ளுந்திக் குள்ளே
விளைகின்ற கருவியெல்லாம் விதிப்பே னாண்டே.
📖 பாடல் எண்: (0090) 📖
எட்டுத்தூ ணாட்டியொரு விட்டம் போட்டு
வெழுந்ததின்மே லருகுவளை யொன்றாய்க் கூட்டி
மட்டற்ற மோட்டின்வளை யொன்று நாட்டி
வளமான துண்டும்வளை ரெண்டும் போட்டுக்
கட்டாகக் கையகத்தில் வளைத்துக் கொண்டு
கனமான வரிச்சல்விலாக் கொடியு மாக்கீ
முட்டமுட்ட நின்றகம் பத்து மேலாய்
முகப்புடனே சிங்கார வீடு மாச்சே.
📖 பாடல் எண்: (0091) 📖
பத்தியுடன் விரலுமிரு பதுவே யாச்சு
பதிந்தநக மதுவுமப் படியே யாச்சு
வெற்றியுள்ள ரோமமது மனேக மாச்சு
விதமான வீடுமெண்சா ணதுவே யாச்சு
அத்திபுர மதுவாச்சு வெளியு மாச்சு
வங்குலமுந் தொண்ணூற்றா றதிலே யாச்சு
சத்திவா லாம்பிகைப்பெண் ணாலே யாச்சு
சார்வான கருவியெல்லா மமைந்த தாண்டே.
வெண்பா
📖 பாடல் எண்: (0092) 📖
அங்குலமுந் தத்துவமு மதிலே வளர்ந்தவகை
இங்கிதமா யானுரைப்பே னீசனே- எங்கள்குலம்
மந்துதந்த மூலம் வளர்ந்தவுயிர் போம்பொழுது
வெந்துதந்த மூல வெளி.
கலித்துறை
📖 பாடல் எண்: (0093) 📖
கதிரே சிறந்து கார்கொண்ட வட்டக் கனகிரிமேல்
மதுரம் பொழிந்து வழியே நடந்துயர் வாசலிலே
உதிரந் திரண்டுவுடலாகி யேவந்த
வுண்மையெல்லாம்
சதிரம் பிறந்த விபரஞ்ச பைநின்று சாற்றுவனே.
📖 பாடல் எண்: (0094) 📖
நாடித் திரிந்துயர் நாதாந்த விந்துள நாட்டத்திலே
கூடிக் கலைந்து விருகாலை வாங்கிக்
கொடிமுடிமேல்
ஆடித் திரிந்து வளவற்று நின்ற வறையதுக்கு
ளோடிக் கலந்து வொருமல ராகி யுதித்ததுவே.
விருத்தம்
📖 பாடல் எண்: (0095) 📖
நாற்சதுர மேலும்வளர் கணேச னுக்கு
நல்லருளைத் தந்தருளும் பிரமா வுக்கும்
பாற்கடலிற் பள்ளிக்கொண்ட திருமா லுக்கும்
பன்னிரண்டின் மேலுநின்ற ருத்தி ரற்கும்
மேற்சதுர மானமயேஸ் பரனா ருக்கும்
விந்துவதி னின்றிலங்குஞ் சதாசி வற்கும்
தீர்க்கமுட னவரவர்க்குக் கட்டும் வீடு
செப்புகிறேன் ஜெகச்சோதி செயல்தா னாண்டே.
📖 பாடல் எண்: (0096) 📖
நாதமென்றுஞ் செகமெல்லா நின்ற நாத
நல்வினையுந் தீவினையு மாண்ட மூர்த்தி
வேதமென்ற கடலுக்கு மெட்டா நின்ற
வெளிகடந்து ஆறுதலந் தாண்டி யப்பால்
பாதமடி முடியாகி நின்ற சோதி
பதினாலு லோகமதுக் கொருவ னான
சூதமது வானதிரு மூலந் தன்னில்
சுரூபமாய் நின்றவகை சொல்வே னாண்டே.
தரு
வீடுகட்டிக்கொண்டேன் நானொரு
வீடுகட்டிக்கொண்டேன்
📖 பாடல் எண்: (0097) 📖
வீடுகட்டினேன் விண்ணோடுமண்ணையுங்
கூறதாச்சுக் குறியிது
ரெண்டினால் பாடுபட்டுச்சலத்தைத் தெளித்துடன்
பற்றிநெருப்பை யுங்காற்றையுஞ் சேர்த்துமே
கூடுண்டான குறிமண்ணுந் தண்ணீருங்
கூட்டிப்பி சைந்துறவாடி யந்தமுடன்
நீடுலகும்புக ழாவியதுக்குள் எண்சாணுடல்
நேர்த்தியைப் பார்த்திரும்- வீடு.
📖 பாடல் எண்: (0098) 📖
தச்சமுழங் கொண்டிரு காலை நாட்டிச்
சதிராக வட்டப் பலகையுஞ் சேர்த்து
உச்சிதமாக வொருமர நாட்டியே
உள்ளே பழுவரிச்சல்களுங் கோத்துடன்
முச்சுடர் வன்னிக்குழை யொன்று நாட்டியே
முட்டுத்துண்டு முனையது வாகிப்பின்
மச்சூடுகட்ட வகையறி யாதாண்டே
மகிழ்ந்துட னாதாரவாசியைக் கொண்டுமே- வீடு.
📖 பாடல் எண்: (0099) 📖
ஒட்டுப்பலகையு முட்டுபலகையும்
ஓங்கியசிங்கார மோட்டுவளையுடன்
வட்டத்திருகாணி விட்டத்தின்மேல்நின்று
மாயாமல்கைமரஞ் சாயாமல்நாட்டியே
முட்டுக்கால்வட்ட முக்காணியைப்பூட்டி
முறியாமல்தச்சு முயற்சியதாகவும்
நட்டுக்காலாணிகள் முட்டியேதாங்கிட
நாதவிந்தாலும் வேதாந்தவீடாச்சுது- வீடு.
📖 பாடல் எண்: (0100) 📖
கைமர நாலுகணக்காகச் சேர்த்துக்
காலாணிகொண்டு மேலாணிபூட்டியே
மெய்யுறவாகும்போதிக் கைரெண்டூட்டி
வேடிக்கைநாலு கொடியுந்திருப்பியே
துய்யநடுமூலக் கம்பமதாகிய
சூக்ஷக்கால்நாட்டிச் சுகாதீதமாகவும்
மையத்திலேசுருள் மேருவைக்கூட்டிப்பின்
வச்சிரப்பலகை ரெண்டச்சுழல்மூட்டியே- வீடு.
Next Post