சுவாசம் உடலுக்கா? மனதிற்கா?
🌹 உடல் உயிர் மனம் என்று மூன்று இருக்கிறது.
🌹 நான் சுவாசிப்பது உடம்பிற்கா? மனதிற்க்கா?? இல்லை உயிருக்கு என்றால்
🌹 உயிருக்கு (இறைவனுக்கு) சுவாசிப்பது தேவை இல்லை என்று எனக்கு நன்றாக புரிகிறது.
🌹 உயிருக்கு எது தேவை என்றால் நான் தான் தேவை.
🌹 உடம்பும், மனதும் உயிருக்கு (இறைவனுக்கு) தான் சொந்தம்.
🌹 உடலும் மனதும் உயிருக்காக மட்டுமில்லாமல் கணவன், மனைவி, அம்மா, அப்பா என்ற சொந்தங்களுக்கும் சொந்தமாகிறது.
🌹 இப்போது உடல் சுவாசித்ததா இல்லை மனம் சுவாசித்ததா என்றால், மனம் சுவாசித்தால் அதன் வேலையை செய்ய முடியாது.( எண்ணத்தை எழுப்புவதை செய்ய முடியாது.)
🌹 அதனால் உடம்பு தான் சுவாசிக்கிறது.
🌹 உடம்பு ஏன் சுவாசிக்கிறது என்றால்
உயிரை(வெற்றிடத்தை, கடவுளை) உள்ளே தக்க வைத்துக்கொள்ள உடம்பு சுவாசிக்கிறது.
🌹 அதனால்தான் மனம் எண்ணத்தை எழுப்பாத போதும் (தூங்கிக் கொண்டிருக்கும் போதும்) சுவாசம் உடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
🌹 அதனால் உயிரை தக்கவைத்துக்கொண்டிருக்கும் சுவாசத்தின் மீது நான் (மனம்) விழிப்பு நிலையில் அக்கறை வைத்தால் நானும் அந்த உயிரை தக்கவைப்பேன்.
🌹 அதாவது விழிப்பு நிலையிலும் எண்ணமற்று போய்விடுவேன் அல்லது உயிரை (கடவுளை, வெற்றிடத்தை) தக்க வைத்து விடுவேன் எனலாம்.
🌹 உடம்பு ஒரு புத்திசாலி (Brilliant)
தன்னை தானே சரி செய்து கொள்ளும்.
தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும்.
தன்னைத்தானே வயதாக்கிக்கொள்ளும்.
எல்லாமே செய்துகொள்ளும்.
நீங்கள் மருத்துவரால் உயிர் வாழவில்லை.
உடம்பு தான் உங்களை வாழ வைக்கிறது.
🌹 நான் உடம்பிற்கு உணவு அளித்தாலும், அளிக்காவிட்டாலும் அதனால் தண்ணீர் மற்றும் சுவாசத்தால் வளர முடியும்.
🌹 உடம்பிற்கு உயிர் (இறைவன்) தேவைப்படுவதால் அது சுவாசத்தின் மீது அக்கறையாய் இருப்பது போல எனக்கும் (மனதிற்கும்) உயிர் (இறைவன்) தேவைப்படுவதால் சுவாசத்தின் மீது அக்கறை கொள்கிறேன் என்று சிவாகமத்தில் (திருமந்திரத்தில்) திருமூலர் கூறியிருக்கிறார்.
(உடல் வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே) – சிவாகமம் (திருமந்திரம்)
🌹 இது புரிந்தால் முதலில் உடம்பினை தான் விசேஷமாக்க வேண்டும் அதன் பின்பு தான் நான் சுவாசத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்று புரிந்துவிடும்.
🌹 அதற்காகத்தான் நான் உங்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறேன்.
🌹 அதில் உடம்பு விசேஷமாக ஆரோக்கியமாக மாறிவிடும் அதன் பின்பு சுவாசத்தின் மீது அக்கறை கொள்வதற்கான பயிற்சியில் உயிரை தக்க வைத்து விடலாம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025