சத்சங்க தலைப்பு : 🌻 வாசியோகம் 🌻
🌻 வாசி(யோகம்) :
🌻 போகம் என்றால் ஆண் பெண் கூடும் உணர்வு.
🌻 யோகம் என்றால் இறைவனிடம் ஒன்றிணைதல் அல்லது கூடுதல்.
🌻 (வாசி)யோகம் :
🌻 நமசிவாய என்னும் மந்திரத்தை,
🌻 (சிவா) என கீழிருந்து மேலே எழுதி,
🌻 (வாசி) எனமேலிருந்து கீழே வாசிக்கலாம்.
🌻 (வாசி) என்றால், ஐந்து பூதங்களில் இரண்டு பூதமான காற்றையும் நெருப்பையும் கொண்டு வாசிப்பதையும் சொல்லலாம்.
🌻 (வாசி) என்றால், புத்தகம் வாசிப்பதை சொல்லலாம்.
🌻 (வாசி) என்றால், கடம் அல்லது வீணை போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதை சொல்லலாம்.
🌻 அப்படி,வாசிப்பதை போல,
🌻 இந்த உடலைக் கொண்டும் வாசிக்க முடியும்.
🌻 அப்படி இந்த உடலைக் கொண்டு வாசித்து யோகம் அடைய (இறையடைய) முடியும்.
🌻 அதனால் தான் வாசியோகம் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள்.
🌻 என் குரு எனக்கு சொன்னது,
சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்,
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை,
சந்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்,
கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.
🌻 இதில், தாரை ஊதுவதை பயிற்சியாக கற்றுக் கொடுக்கிறேன்.
🌻 இது வாசியோகத்தின் ஒரு சாராம்சம்.
🌻 சுவாசம் என்பதுதான் கால்.
🌻 நீங்கள் கால்களால் வேகமாக ஓடும் போது, சுவாசம் என்ற கால்களும் வேகமாக ஓடுவதை நீங்கள் பார்க்கலாம்.
🌻 இந்த சுவாசத்தை கொண்டுதான் உடல் மீட்டப்படுகிறது.
🌻 இந்த சுவாசத்தை சீர்படுத்தினால் உடம்பு சீராகும்.
🌻 இந்த சுவாசத்தை நிறுத்தினால் மனதில் எழும் எண்ணத்தையும் நிறுத்தலாம்.
🌻 அதை ஆராய்ந்து பார்க்க உங்கள் மூக்கை பிடித்து சுவாசத்தை நிறுத்தி பாருங்கள்.
🌻 எப்போது சுவாசிப்போம் என்று மனம் முழுவதும் சுவாசத்தின் மீது கவனமாகி விடுவதை நீங்கள் உணரலாம்
🌻 மூக்கில் இருந்து எப்போது கைய எடுப்போம் என்பதை தவிர வேறு எந்த எண்ணமும் எழும்பாததையும் உணரலாம்.
🌻 அதனால், சுவாசத்தின் மீது கவனமாக இருந்தால் மனதில் எனும் எண்ணங்களை கட்டுப்பாட்டுக் கொண்டு வரலாம் என்றும்,
🌻 எண்ணம் இல்லாமலும் ஆகிவிடலாம் என்றும், நம் முன்னோர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
🌻 உங்களுடைய எண்ணம் மாறும்போது சுவாசமும் மாறுகிறது.
🌻 அதனால் தான், நீங்கள் கோபமாக இருக்கும்போது ஒரு சுவாசமும்,
🌻 மகிழ்ச்சியாக இருக்கும் போது ஒரு சுவாசமும்,
🌻 அமைதியாக இருக்கும் போது ஒரு சுவாசமும், நடந்து கொண்டிருக்கும்.
🌻 சுவாசத்தை கவனிக்கும் யுக்தி அறிந்த ஒருவரால் உண்மையான கோபம் கொள்ள முடியாது.
🌻 சுவாசத்தை கவனித்த நம் முன்னோர்கள் இந்த சுவாசம், வடகலை இடகலை என்று இரண்டு விதமாக ஓடிக்கொண்டிருப்பதையும்,
🌻 பத்து காற்று உடலில் இருப்பதையும், பத்து நாடி இருப்பதையும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
🌻 அதனால் தான் இந்த உடலை தசரதன் என்ற கதாபாத்திரமாக நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
🌻 ராமருடைய தந்தை தசரதன் என்றால்,
🌻 ராமர் என்றால், யார்? என்றால், நீங்கள் தான்.உங்களுடைய மனம் அல்லது ஆன்மா தான்.
🌻 சீதை என்றால், உடல்.
🌻 அந்த உடல் பெண்ணிடமிருந்து வந்ததால் அதை பெண்ணாக சொல்கிறார்கள்.
🌻 ராமரைப் போன்று ஏக பத்தினி விரதனாக இருக்க வேண்டும் என்று சொல்வதன் அர்த்தம் என்னவென்றால்,
🌻 மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து வேறு வேறு உடலை (பெண்ணை) (சீதையை) அடைவதை விட, இந்த உடம்பிலேயே ஞானம் அடைபவர் தான் ஏக பத்தினி விரதனான ராமர்.
🌻 வாசியோகம் என்றால், வாசித்து அதாவது சுவாசித்து இறைவனை புரிந்து கொள்ளுதல்.
🌻 சுவாசம் வலது பக்கம் சூடாகவும், இடது பக்கம் குளிர்ச்சியாகவும் போய்க்கொண்டிருப்பதை நம் முன்னோர்கள் அறிந்து இருக்கிறார்கள்.
🌻 அதனால்தான் தூங்கும்போது இடது பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
🌻 அப்படி படுக்கும் போது சுவாசம் வலது பக்கம் ஓடிக் கொண்டிருப்பதால் இரவு நேரங்களில் உடலுக்கு தேவையான சூடு கிடைத்துவிடும்.
🌻 அது மட்டும் இல்லாமல், இடது பக்கமாக தலை வைத்து படுக்கும் போது ரத்த ஓட்டம் எல்லாம் இதயத்திற்கு செல்வதால் இதயம் நன்றாக இயங்குவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.
🌻 அதனால் தான் தூங்கும்போது இடது பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
🌻 இப்படி படுத்து தூங்குவதும் வாசியோகம் தான்.
🌻 ஆனால் விழிப்பு நிலையில் சுவாசத்தை யோக பயிற்சியாக செய்பவருக்கு சுவாசத்தின் உச்சமாக சுவாசம் உபதேச பொருளில் போய் ஒடுங்கும்.
🌻 சுவாசம் அந்த இடத்தில் ஒடுங்கும் போது தான் நீங்கள் யோகம் அடைந்து விட்டீர்கள் என்பதே உங்களுக்கு புரியும்.
🌻 வலம் இடம் என்று ஓடும் இந்த சுவாசத்தை ஆராய்ந்த திருமூலர் சொல்கிறார்,
🌻 ஆறு மாதம் சுவாசம் தொடர்ந்து இடது பக்கம் ஓடிக் கொண்டிருந்தால் அந்த மனிதன் இறந்து விடுவான் என்றும்,
🌻 திங்கள், புதன், வெள்ளி (காலை 6 மணி முதல் 7 மணி வரை) சுவாசம் இடது பக்கம் ஓடுவதாகவும்,
🌻 செவ்வாய், சனி, ஞாயிறு வலது பக்கம் ஓடுவதாகவும்,
🌻 வியாழக்கிழமை வளர்பிறை என்றால் இடது பக்கமும், தேய்பிறை என்றால் வலது பக்கமும் ஓடுவதாகவும் சொல்கிறார்.
🌻 அதனால்தான் வியாழக்கிழமையை குருவுக்கு உரிய நாள் என்று தனியாக பிரித்து வைத்திருக்கிறார்கள்.
🌻 மூக்கு மட்டும்தான் சுவாசிக்கிறது என்பது கிடையாது. தோல் முழுவதும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறது.
🌻 அதனால் அதற்கு ஏற்றபடி துணிகளை அணிவது நல்லது.
🌻 பயிற்சி என்ற பெயரில் சுவாசத்தை அடக்க கூடாது. அடக்கினால் உடல் உபாதைகள் ஏற்படும்.
🌻 என்னிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு நான் சொல்ல வருவது,
🌻 நான் சுவாசிக்கிறேன்.அதை அழுத்தமாகவும் திருத்தமாகவும் சுவாசிக்க போகிறேன் என்று சுவாசிக்க வேண்டும்.
🌻 அதாவது, சுவாசத்தை தன் வசப்படுத்தி விருப்பத்தில் இழுத்து விருப்பத்தில் விட வேண்டும்.
🌻 ஒருவர் இரவில் தூங்கும் போது அவருடைய மனம் அடங்கி, அவருடைய சுவாசம் நீண்டு குறட்டை விட்டு இயல்பாக தூங்குவதை பார்க்கலாம்.
🌻 அப்படித்தான் பகலிலும் இருக்க வேண்டும் அதுதான் வாசியோகம்.
🌻 அதான் உங்களை நீங்களே வாசிப்பது.
🌻 உங்களுக்கு லிங்கம் தெரிந்து விட்டால் அதைக் கொண்டே வாசியோகம் செய்யலாம் அதற்குத்தான் கண்ணப்ப நாயனார் கதை சொல்லி வைத்திருக்கிறார்கள்.
🌻 அதனால் வாசியோகம் என்பது வடகலை, தென்கலை, பூரகம், கும்பகம், ரேசகம் என்பதுடன் மட்டும் முடிவது அல்ல அதையும் தாண்டி விசேஷமான ஒரு இடத்தில் அது இருக்கிறது.
🌻 (ய) என்ற இறைவனை அடைவதற்கு (சிவா) நெருப்பு காற்று என்ற இரண்டு பூதமும் துணையாக இருக்கிறது.
🌻 நெருப்பையும், காற்றையும் அதிகப்படுத்தி கனல் கொண்டு எழுப்புவது தான் வாசியோகம்.
🌻 நீங்கள் தங்கம் உருக்கும்போது பார்த்திருக்கலாம்.
🌻 உமியில் நெருப்பிட்டு, அதை ஊது குழலால் ஊதி கனல் எழுப்பி அதில் தங்கத்தை பொறுக்கி தனக்கு தேவையான வடிவத்திற்கு எடுப்பார்கள்.
🌻 அதேபோல், உங்களுக்கு உள்ளேயு காற்றால் கனல் எழுப்பி மனதை செம்மை அடைய செய்ய முடியும்.
🌻 அப்படி கனலாக மாறிய மனதிற்கு எந்த பிரச்சனை வந்தாலும், கனல் கொண்டு தங்கத்தை உருக்கி தேவையான வடிவத்திற்கு மாற்றுவதைப் போல,
🌻 மனதிற்கு வரும் எந்த பிரச்சனையையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளலாம்.
🌻 அதுதான் யோக சாதனை.
🌻 ஒரு இறை உணர்ந்த யோகி சொல்வது என்னவென்றால்,
🌻 சுவாசம் விசேஷமானது.
🌻 அதை சாதாரணமாக இழுத்து விடக்கூடாது.
🌻 ஒவ்வொரு கணத்தையும், ஒவ்வொரு சுவாசத்தையும், இறைவனுக்கு அர்ப்பணித்து நன்றியோடு இரு என்பார்.
🌻 வாசியோகம் தெரியாத ஒரு மனிதன் உபதேசம் தெரியாத ஒரு மனிதன் லிங்கம் தெரியாத ஒரு மனிதன் யோகம் அடைவது கடினம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : April 2025