இந்த வாரம் சீடனுக்கு நீங்கள் கூறும் அறிவுரை - 8
🌹 நீ நீயாக இரு, உனக்கு நீ உண்மையாக இரு.
🌹 நான் உன்னை உன் பக்கம் திருப்புறேன். அவ்வளவுதான்
🌹 உன்னால் உன் பக்கம் திரும்ப முடியவில்லை ஏனென்றால் நீ வளர்ந்த விதமும் , வாழ்ந்த விதமும் உன்னை ஆட்டி வைக்கிறது.
🌹 ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் தேவை என்ற ஒன்று இருக்க வேண்டும் தேவையில்லாதவன் வாழ முடியாது.
🌹 பசி இல்லை என்றால் வாழ முடியாது பசி எடுப்பது ஒரு பெரிய வரம்.
🌹 அது எப்போது தெரியும் என்றால் பசி எடுக்காமல் இருக்கும்போது தான்.
🌹 நான் சீடர்களுக்கு சொல்வது உங்களுக்கு பசியோ, தாகமோ, கஷ்டமோ வந்தால் அதை எல்லாம் வரமாக நினைத்துக் கொள்ளுங்கள்.
🌹 உங்கள் உணவு ஒழுக்கமோ, உடை ஒழுக்கமோ அல்லது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை காட்டுகிற மாதிரியான உங்கள் ஆடை அலங்காரமோ உங்களை நிறைவு செய்யாது.
🌹 கடவுளைப் பற்றிய புரிதல் தான் நிறைவு செய்யும்.
🌹 நான் அடிக்கடி சொல்கிறேன் கடவுள் ஒரு வெற்றிடம், அதை உங்கள் கண்களால் பார்க்க முடியும் என்று
🌹 அந்த வெற்றிடத்திற்கு நீங்கள் போகும் போது சத்தம் ஒன்று கேட்கிறது.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.
🌹 நீங்கள் எவ்வளவு பணம் எவ்வளவு பொருள் வைத்திருந்தாலும் அது செல்வம் கிடையாது.
🌹 நாதம் என்ற ஒரு சத்தம் எப்போதும் உங்களுக்கு கேட்டுக் கொண்டே இருக்கும் அதுதான் செல்வம்.
அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்பிருக்கும் என்னுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம்வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே.
🌹 நீங்கள் கடவுளை தேடிக் கொண்டிருந்தால் தேடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
🌹 உங்களுக்கு எளிமையான வழி என்னிடம் வேலை செய்தோ, பணம் கொடுத்தோ, 12 வார சத்சங்கத்தில் கலந்து கொண்டோ உபதேசத்தை ( கடவுளைப் பற்றிய தெளிந்த ஞானத்தை) பெற்றிடலாம்.
🌹 நீங்கள் எனக்காகவோ அல்லது என் மீது அக்கறை வைத்தோ இதை பெற்றுக்கொள்ள வேண்டாம்.
🌹 உங்கள் மீது உங்களுக்க அக்கறை இருந்தால் மட்டும் இதை கற்றுக் கொள்ளுங்கள் இல்லை என்றால் நீங்கள் பாவம்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : February – 2025