சிறு துரும்பும் பல்குத்த உதவுமா?
🌹 சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று சொல்வது எதற்காக என்றால்,
🌹 உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
🌹 அதாவது, வெளித்தோற்றத்தை வைத்து ஒன்றைப் பற்றிய முடிவுக்கு வரக்கூடாது.
🌹 சிறு துரும்பையும் மதிக்க வேண்டும். அதை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.
🌹 அது எனக்கு தேவை படாவிட்டாலும், தேவைப்படுபவருக்கு கொடுத்து உதவ வேண்டும்.
🌹 என்னுடைய பொருட்களை நான் பயன்படுத்தி கொண்டாடி விட்டேன் என்றால், அது எனக்கு தேவைப்படாது என்ற முடிவு செய்துவிட்டால், அதை தேவைப்படுபவருக்கு கொடுத்து உதவ வேண்டும்.
🌹 ஏனென்றால், இந்த உடலையே ஒரு நாள் வேண்டாம் என்று இந்த பூமிக்கு கொடுத்து விடப் போகிறோம்.
🌹 அதனால் எனக்கு தேவையில்லாததை, தேவைப்படுபவருக்கு கொடுத்து உதவ வேண்டும்.
🌹 நிறைய மனிதர்கள் ஏழ்மையில் இருப்பதற்கு காரணம், பலர் பொருட்களை பயன்படுத்தாமல் சேமித்து வைத்துக் கொள்வதால் தான்.
🌹 இயற்கையே (கடவுளே) உணவை சேமித்து வைக்க முடியாத மாதிரி தான் படைத்திருக்கிறது.
🌹 ஏனென்றால் அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கெட்டுவிடும்.
🌹 ஆனால் மனிதன் அந்த உணவையும் தன்னுடைய அறிவால் கெடாத மாதிரி மாற்றம் செய்து, அதை சேமித்து வைத்து சாப்பிட்டு தன் உடலை கெடுத்துக் கொள்கிறான்.
🌹 ஒரு உணவு இயற்கையாகவே கிடைக்கிறது என்றால் அதை எல்லோருக்கும் பகிர்ந்தழித்து சாப்பிடும் விதத்தில் தான் கடவுள் அந்த உணவை படித்திருக்கிறது.
🌹 ஒரு யானை இறந்து விட்டது என்றால் அந்த உடல் எறும்பு கூட்டங்களுக்கு ஆறு மாத உணவு.
🌹 சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்றால் ஒரு சோறு கூட வீணாக்காமல் அதை கவனமாக கையாள வேண்டும்.
🌹 ஏனென்றால் எவ்வளவோ ஏழை மனிதர்கள் உணவு இல்லாமல் இருக்கிறார்கள்.
🌹 நீங்கள் வசதியாக இருங்கள், செல்வந்தனாக இருங்கள், கொண்டாட்டமாக இருங்கள் தவறில்லை ஆனால் உணவுப் பொருட்களின் மீது அதிக அக்கறையோடு இருங்கள்.
🌹 அதை வீண் செய்யாதீர்கள்.
🌹அதனால் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்றால்,
🌹 எந்த பொருளையும் மதிக்க வேண்டும்.
🌹 எந்த பொருளையும் மதிப்பதால் அதை தேவையில்லாமல் சேமித்து வைத்து வீணாக்க கூடாது.
🌹 அதை என்னுடைய தேவைக்காக பயன்படுத்தி, தேவை படாத போது தேவைப்படுபவருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025