ஒருவர் நான் என்பதை அழிக்க முடியுமா?
🌹 (நான்) என்பது ஒரு அழகு. அதை அழிக்க கூடாது.
🌹 அதை அழித்தால் என்னால் வாழ முடியாது.
🌹 (நான்) என்ற திமிரை தான் அழிக்க வேண்டும்.
🌹 (நான்) என்ற ஆணவத்தை தான் அழிக்க வேண்டும்.
🌹 (நான்) என்பதை அழிப்பதற்காக கடவுள் என்னை படைக்கவில்லை.
🌹 ஒரு ஆண் (நான்) என்பதை அழித்து விட்டால் எப்படி ஒரு பெண்ணால் சந்தோஷமாக இருக்க முடியும்.
🌹 ஒரு பெண் (நான்) என்பதை அழித்து விட்டால் எப்படி ஒரு ஆணால் சந்தோஷமாக இருக்க முடியும்.
🌹 ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து உறவாடுவதற்காக செய்யப்பட்டது தான் நான்.
🌹 அதனால் (நான்) என்பதை அழித்தால் என்னால் வாழ முடியாது.
🌹 (நான்) என்பதை கொண்டாட வேண்டும்.
🌹 (நான்) என்பதை அக அலங்காரம் செய்ய வேண்டும்.
🌹 என்னுடைய உண்மையால், என்னுடைய கொண்டாட்டத்தால், என்னுடைய மகிழ்ச்சியால் (நான்) என்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.
🌹 (நான்) மூன்றாக இருக்கிறேன்.
- (நான்) என்ற உடம்பாக இருக்கிறேன்.
- (நான்) என்ற மனமாக இருக்கிறேன்.
- (நான்) என்ற உயிராக இருக்கிறேன்.
🌹 உடம்பாக இருக்கும் (நான்), ஒரு நாள் உடம்பு அழியும் போது கட்டாயம் அழிந்துவிடும்.அதனால் அது நிலையான (நான்) இல்லை.
🌹 உடம்பாக இருக்கும் (நான்) அழிவதற்குள், சிந்திக்கும், பேசும், மனமாக இருக்கும் (நானை) தெரிந்து கொண்டு அது என்ன வடிவத்தில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விட வேண்டும்.
🌹 அதைவிட மேலானது, உயிராக இருக்கும் (நான்) அது நிலையானது. அதை அழிக்க முடியாது.எனக்கு உள்ளேயும் வெளியேயும் உயிராக இருக்கும் (நான்) தான் இருக்கிறது.
🌹 உயிராக இருக்கும் (நான்) என்ற புல்லின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த,
🌹 உயிராக இருக்கும் (நான்) என்ற மான்கள் படைக்கப்பட்டிருக்கிறது.
🌹 உயிராக இருக்கும் (நான்) என்ற மானின் எண்ணிக்கை கட்டுப்படுத்த,
🌹 உயிராக இருக்கும் (நான்) என்ற சிங்கங்கள் படைக்கப்பட்டிருக்கிறது.
🌹 அப்படி உயிராக இருக்கும் (நான்) ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டிருக்கிறது.
🌹 அது போலவே மனித உயிராக இருக்கும் (நான்) என்னுடைய பிறப்பின் நோக்கம் அறிந்து, அதை கொண்டாடிவிட்டு எங்கிருந்து (நான்) கொண்டு வந்தேனோ அதை அங்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
🌹 நான் அடிக்கடி சொல்வதுண்டு நீங்கள் எந்த பொருளை எடுத்தாலும் எடுத்த இடத்தில் வைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று.
🌹 அதுபோல இந்த நான் என்ற மனம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடித்து மீண்டும் அங்கேயே வைக்க வேண்டும்.
🌹 நீங்கள் நித்தம் நித்தம் தூங்கி நான் இல்லாமல் போவதற்கு கற்றுக் கொள்கிறீர்கள்.
🌹 அதாவது, கடவுள் நமக்கு ஏன் தூக்கம் என்ற ஒன்றை கொடுத்திருக்கிறார் என்றால், ஒரு நாள் நீங்கள் அமைதியாக வேண்டும் என்பதை புரிந்து கொள்வதற்காக தான்.
🌹 இதன் பெயர் அழித்தல் கிடையாது.தூக்கத்தின் உச்சம். கொண்டாட்டத்தின் உச்சம்.
🌹 (நான்) என்ற மனம் நிலையான ஒன்றோடு கூடிவிடும் அதன் பெயர் தான் யோக சாதனை.
🌹 அதனால் (நான்) என்பதை அழிக்க வேண்டாம். அதைக் கொண்டாடுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.
🌹 என்னிடம் ஆனந்த வாழ்வு என்ற வகுப்பு இருக்கிறது அதில் இன்னும் தெளிவாக கற்றுக் கொள்ளுங்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025