பொருளாதார விடுதலை என்றால் என்ன?
🌹 நான், ஒரு டீ சாப்பிட வேண்டும் என்று நினைத்தால்,
🌹 அதை சாப்பிடுவதற்கான தகுதி என்னிடம் இருந்தால் நான் பொருளாதாரத்தில் இருந்து விடுதலை பெற்றவன்.
🌹 டீ சாப்பிடுவதற்கு என்ன தகுதி வேண்டும் என்றால்,
🌹 அதை செய்வதற்கு தகுதியான மூலப் பொருட்கள் என் வீட்டில் இருக்க வேண்டும்.
🌹 அல்லது, கடையில் சாப்பிடுவதற்கு தகுதியான பணம் என்னிடம் இருக்க வேண்டும்.
🌹 பொருளாதார விடுதலை என்றால் பணம் மட்டுமே போதுமானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
🌹 பொருளாதார விடுதலை அடைவதற்கு உடல் ஆரோக்கியமும் மறைந்திருக்கிறது.
🌹 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வதுண்டு.
🌹 ஒருவர் பணம் நிறை வைத்திருக்கலாம்.
🌹 அவருக்கு டீ சாப்பிட வேண்டும் என்று எண்ணம் வரலாம்.
🌹 அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், டீ சாப்பிட கூடாது என்று மருத்துவர் சொன்ன காரணத்தால் அவரால் டீ சாப்பிட முடியாது.
🌹 அதனால், அவரை பொருளாதார விடுதலை அடைந்தவர் என்று சொல்ல முடியாது.
🌹 அதனால், பொருளாதார விடுதலைக்கு உடல் ஆரோக்கியமும் அவசியமானது.
🌹 உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் எனது தேவையை சந்திப்பதற்கான பணத்தை நான் வைத்திருக்க வேண்டும்.
🌹 தேவைக்கு அதிகமான பணம் சில மனிதர்களிடம் இருக்கிறது.
🌹 தேவையை சந்திக்க முடியாத அளவுக்கு சில மனிதர்களிடம் பணம் இருப்பதில்லை.
🌹 பணம் எல்லோருக்காகவும் செய்யப்பட்டிருந்தாலும்,
🌹 அது எல்லோரிடத்திலும் போய் சேரவில்லை.
🌹 எல்லோரும் அதை எடுத்துக் கொள்ளவும் இல்லை.
🌹 எல்லோரும் எடுத்துக் கொள்வதற்கான வழிமுறையை கையாளவும் இல்லை.
🌹 இதற்கு அரசாங்கம் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.
🌹 ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளவும், கையாளவும் தெரியவில்லை.
🌹 பணத்தைப் பற்றிய ஒரு தெளிவும் இல்லை .
🌹 அதனால், யார் பொருளாதார விடுதலை அடைந்தவர்? என்றால்,
🌹 எனக்கு தேவையான பணமும்,
🌹 எனக்கான உடல் ஆரோக்கியமும்,
🌹 பணத்தை அடைவதற்கான முயற்சியும்.
இருப்பவர்தான் பொருளாதார விடுதலை அடைந்தவர்.
🌹 பொருட்களை அடைந்து அதை அனுபவிக்கத் தெரியாமல் இருந்தால் அவர் பொருளாதார விடுதலை அடைந்தவர் கிடையாது,
🌹 அதனால், எனக்கு தேவை இருக்க வேண்டும்.
🌹 அந்த தேவையை சந்திப்பதற்கான தகுதி இருக்க வேண்டும்.
🌹 அந்த தகுதிக்கு பெயர் பொருளாதார விடுதலை.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025