யார் சிறந்த ஆன்மீகவாதி?
🌹 மனம் இருக்கிற ஒவ்வொரு மனிதனும் ஆன்மீகவாதி தான்.
🌹 அதாவது, மனம் என்ற ஒன்று இருக்கிறது. என்பதை, புரிந்து கொண்ட ஒவ்வொரு மனிதனும் ஆன்மீகவாதி தான்.
🌹 யார் சிறந்த ஆன்மீகவாதி? என்றால்,
🌹 மனதை மிகவும் செம்மையடைய செய்தவர்தான் சிறந்த ஆன்மீகவாதி.
🌹 தானும் வாழ்ந்து, பிறரும் வாழ வேண்டும் என்று நினைக்கின்ற ஒவ்வொரு மனிதனும் சிறந்த ஆன்மீகவாதி.
🌹 ஒருவர் பிறருக்கு உதவி விட்டு,
🌹 உதவி விட்டேன் என்ற ஆணவம் இல்லாமல்,
🌹 கடவுளுக்கு நன்றி சொல்கிறார் என்றால் அவர்தான் சிறந்த ஆன்மீகவாதி.
🌹 கடவுளின் பெயரில் ஏமாற்றுபவன்,
🌹 கடவுளின் பெயரில் பொய் சொல்பவன்,
🌹 கடவுளின் பெயரில் அசிங்கப்படுத்துபவன்,
🌹 கடவுளின் பெயரில் மதச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன்,
🌹 தான் வாழ வேண்டும் என்பதற்காக ஆன்மீகவாதியாக வந்தவன் எல்லாம்,
🌹 ஆன்மீகத்தை அசிங்கப்படுத்துவதற்காக வந்த ஆன்மீக வியாதிகள்.
🌹 சிறந்த ஆன்மீகவாதிகள் நம்முடன் நெருங்கி இருக்கிறார்கள்.
🌹 குழந்தை பால் குடித்து என்னுடைய வலியை போக்குகிறது என்று அம்மா நினைத்தால்,
🌹 நல்ல குழந்தைக்கு அம்மா ஒரு சிறந்த ஆன்மீகவாதி.
🌹அம்மா எனக்கு பால் கொடுத்து, என்னை மகிழ்வித்திருக்கிறாள் என்று வளர்ந்த பின் குழந்தைக்கு புரிந்தால்,
🌹 நல்ல அம்மாவுக்கு, குழந்தை ஒரு சிறந்த ஆன்மீகவாதி.
🌹 யார் தலைசிறந்த ஆன்மீகவாதி? என்றால்,
🌹 நான் இந்த உலகத்திற்கு வந்திருக்கிறேன்.
🌹 என்னை ஒன்று படைத்து மகிழ்ச்சியாக இருக்க சொல்லியிருக்கிறது.
🌹 அதனால் நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு,
🌹 தானும் மகிழ்ச்சியாக இருந்து, பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவன் தான்
🌹 இந்த உலகத்தின் தலைசிறந்த ஆன்மீகவாதி.
🌹 அதனால்,
🌹 உதவி செய்து, உதவி பெறுகிற,
🌹 தன்னை புரிந்து கொண்டிருக்கிற,
🌹 தனக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர்கிற,
🌹 ஒவ்வொரு மனிதனும் தலைசிறந்த ஆன்மீகவாதி தான்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025