தங்களின் உடற்பயிற்சியின் பலன்கள் என்ன?
🌹 பொதுவாக உடற்பயிற்சி என்று GYM க்கு சென்றாலே,
🌹 உங்களுக்கு வியர்வை வரவேண்டும்.
🌹 உங்களுடைய கலோரிகள் எடுக்கப்பட்டு உங்களுடைய உடல் இறுக்கமான வடிவத்திற்கு வர வேண்டும்.
🌹 என்னுடைய உடற்பயிற்சி வியர்வை வருவதற்காகவோ அல்லது உடல் இறுக்கமான வடிவத்தை பெறுவதற்காகவோ கிடையாது.
🌹 முதலில் நீண்ட சுவாசம் சுவாசிப்பதால், நிதானமாக சுவாசிக்க கற்றுக் கொள்வீர்கள்.
🌹 உடலில் உள்ள எல்லா Joint – களுக்கும் வேலை கொடுப்பீர்கள்.
🌹 உணவிலிருந்து கிடைக்கக்கூடிய எல்லா போஷாக்குகளையும் சுவாசத்தின் மூலம், எல்லா Joint – களுக்கும் கொண்டு போய் சேர்ப்பீர்கள்.
🌹 நீங்கள் சாப்பிடும் உணவு, சுவாசத்தால் பத்து வாய்களாக பிரிக்கப்பட்டு, வாசி (சுவாசம்) வழியாகத்தான் சக்தி உடலின் அனைத்து இடத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது.
🌹 அதனால் என்னுடைய உடற்பயிற்சியும் சுவாசத்தை மையப்படுத்தியே இருக்கும்.
🌹 என்னுடைய பயிற்சி இரண்டு கைகளை சேர்த்து வணங்குவதைப் போல் ஆரம்பித்து. வணங்குவதைப் போலவே முடியும்.
🌹 இரண்டு கைகளை சேர்த்து சுவாசிக்கும் போது சுவாசம் உள்ளே மட்டும் செல்லாமல் கைகளையும் கவனிப்பதால் அதற்கும் கொண்டு செல்லப்படும்.
🌹 அதைப் போல ஒவ்வொரு நிலையிலும் அதை நீங்கள் கவனிக்கும் போது சுவாசம் அந்த இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.
🌹 அதனால் இந்த பயிற்சியை ஒழுக்கமாக செய்தால் உடல் முழுவதுமே புத்துணர்ச்சி பெற்று விடும்.
🌹 உடல் ஆரோக்கியத்தை உணர்வீர்கள்.
🌹 வயதானவர்களுக்கு வரக்கூடிய தசை பிடிப்பு, குறுக்கு வழி,முட்டி வலி எல்லாம் சரியாகிவிடும்.
🌹 உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் மெலிவு ஏற்படும்.
🌹 யோக பயிற்சி செய்பவர்கள், வாசியோகம் மட்டுமே செய்யும் போது அவர்களுக்கு குதத்தில் புண்ணோ ரத்தக்கசிவோ ஏற்படுகிறது.
🌹 காரணம் நிறைய சுவாசம் செய்யும்போது உஷ்ணம் அதிகமாகி மலவாய் சூடாகி அதில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
🌹 அப்படி, உஷ்ணம் ஒரே இடத்தில் தேங்கி விடக்கூடாது என்பதற்காகத்தான், ஐந்து யோக பயிற்சிகளையும் செய்ய வேண்டும் நான் சொல்கிறேன்.
🌹 உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களுக்கு, மற்ற உறுப்புகளுக்கு போஷாக்கு கொண்டு செல்லப்படாமல் இந்த பிரச்சினை ஏற்படலாம்.
🌹 அதனால்தான் பொதுவாக உடற்பயிற்சியை youtube ல் பதிவிட்டுள்ளேன்.
🌹 அதில் ஒவ்வொரு நிலைக்கும் ஆறு சுவாசம் என்று சொல்லப்பட்டிருக்கும்.
🌹 வீடியோவை போட்டுவிட்டு ஒவ்வொரு நிலைக்குமான நேரத்தில் கூட எவ்வளவு சுவாசம் செய்ய முடியுமோ அவ்வளவு சுவாசம் செய்யலாம்.
🌹 நீண்ட சுவாசம் செய்வதை போல் பயிற்சியை உருவாக்கி இருப்பேன்.
🌹 நீண்ட சுவாசத்தால் உங்கள் மனம் ஒடுங்கி, தேவையில்லாத எண்ணங்கள் எல்லாம் குறையும்.
🌹 அதனால் தான் சுவாசத்தோடு ஒத்திசைவு கொள்ளும்படி அந்தப் பயிற்சியில் ஒரு யுக்தியை செய்து வைத்திருக்கிறேன்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025