பெண்ணுக்கு எது சுதந்திரம்?
🌹 முதலில் எது சுதந்திரம் என்று கேட்டாலே நான் அடிமையாக இருக்கிறேன் என்று அர்த்தம் .
🌹 சுதந்திரம் என்றால் நான் என் சுய விருப்பத்தில் வரையறுத்துக் கொண்டு வாழ்வது.
🌹 என்னுடைய ஒழுக்கத்தை நான் உருவாக்க வேண்டும்.
🌹 காலையில் எத்தனை மணிக்கு எழும்ப வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும்.
🌹 என்னுடைய சுய விருப்பத்திற்கு யாராவது தடை செய்கிறார்கள் என்றால் அவர்கள் என்னை அடிமைப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்.
🌹 அதனால் பெண்ணுக்கு எது சுதந்திரம் ? என்று கேட்பதை விட பெண்ணை யார் அடிமைப்படுத்துகிறார்கள் ? என்று தான் கேட்க வேண்டும்.
🌹 பெண் என்று குறிப்பிடாமல் பொதுவாக மனிதனை யார் அடிமைப்படுத்துகிறார்கள் என்ற கேள்வி தான் சரியானது.
🌹 மனிதன் அடிமையாக இருப்பதற்கு காரணம் அவன் தான்.
🌹 கணவன் மனைவி குடும்பம் வேண்டும் என்று நினைக்கும் போது அவர்களுடன் ஒத்திசைந்து அவர்களுடைய விருப்பத்தின்படி இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
🌹 சமூகத்தில் சுற்றி இருக்கும் மனிதர்களுடன் வாழும் போது அவர்களுடைய விருப்பத்தின்படி இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
🌹 இவைகள் எல்லாம் என்னை அடிமைப்படுத்துகிறது என்று சொல்வதை விட என்னுடைய வரையறைக்குள் ஒத்து வருவதால் குடும்பத்துடனும் சமூகத்துடனும் ஒத்திசைந்து நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
🌹 என்னுடைய வரையறைக்குள் ஒத்து வரவில்லை என்றால், அடிமைப் படுத்துகிறார்கள் என்று நான் சொல்கிறேன்.
🌹 கடவுள் உங்களை அடிமைப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ இல்லை.
🌹 வாழும் வரை நீங்கள் கொண்டாட்டமாக இருந்து விட்டு போகலாம்.
🌹 ஏன் இல்லை என்றால், என்னுடைய வரையறைக்குள் இல்லாததால் சமூகத்துடன் ஒத்துபோக முடியாமல் அடிமையாக இருப்பது போல் நினைக்கிறேன்.
🌹 உங்களுக்கான வரையறை, ஒழுக்கமாகவும் அன்பாகவும் சரியாகவும் இருக்கின்ற பட்சத்தில் ஒத்திசைந்து தான் போக முடியுமே தவிர அடிமையாக இருக்க முடியாது.
🌹 என்னுடைய கணவன் மேன்மையானவன்.
🌹 அவன் எனக்கு சம்பாதித்து கொடுக்கிறான்.
🌹 நான் வீட்டிலிருந்து அவனுக்கு தேவையான பணிவிடைகளை செய்கிறேன்.
🌹 என்று அன்பினால் வரையறுத்துக்கொண்டால் அடிமையாக இருக்கிறோம் என்று நினைப்பே வராது.
🌹 கட்டுப்படுத்தக்கூடிய கணவனாக இருந்தால்,
🌹 என்னை வாழ விடாமல் செய்யும் கணவனாக இருந்தால்,
🌹 பேசி புரிய வைக்கலாம் அல்லது விட்டுச் செல்லலாம் என்று உங்களை வரையறுத்துக் கொள்ளுங்கள். அடிமைத்தனம் என்பது இருக்காது.
🌹 அதனால் சுதந்திரம், அடிமைத்தனம் என்பதெல்லாம் கிடையாது.
🌹 வாழ முடியாதவர்கள் பொய் சொல்கிறார்கள்.
🌹 வாழ்க்கை உங்களுடையது அதை நீங்கள் கொண்டாடுங்கள்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025