சமாதி அடைந்தால் என் விருப்பத்தில் இருக்க முடியுமா?
🌹 சமாதி சாதித்தல் என்பது வேறு.
🌹 சமாதி சாதித்த பின்பு விருப்பத்திற்கு இருப்பது என்பது வேறு.
🌹 சமாதி என்றால் எண்ணமற்ற இடத்திற்கு போவது.
🌹 சமாதி சாதித்தால் நான் என்ற ஒன்று இருக்காது.
🌹 அதனால் எனக்கு விருப்பத்தேர்வு என்பதே இருக்காது.
🌹 எப்படி தூங்கும்போது ஒருவரால் தன் விருப்பத்திற்கு இருக்க முடியாதோ.
🌹 அதேபோல சமாதி சாதிக்கும் போது விருப்பத்தில் இருக்க முடியாது.
🌹 விருப்பமற்ற ,
🌹 நான் என்ற உணர்வற்ற,
🌹ஒன்றுமே இல்லாத இடத்திற்கு பெயர் தான் சமாதி.
🌹 எப்படி என்றால் தூங்குவதைப் போல,
🌹 தூங்கும் போது எப்படி நீங்கள் எந்த விருப்பமும் இல்லாமல் சும்மா இருப்பீர்களோ,
🌹 அதைப்போல, விழித்திருக்கும் போதும் இருக்கலாம் அதன் பெயர் தான் சமாதி.
🌹 அதைத்தான், இன்று வருமோ நாளை வருமோ சும்மா இருக்கும் சுகம் என்று சொல்கிறார்கள்.
🌹 சமாதி என்ற நிலையை அடைந்து விட்டு மீண்டும் திரும்பி சராசரி மனிதனாக விருப்பத்தேர்வில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.
🌹 தேவைப்படும்போது தூங்குவதைப் போல,
🌹 தேவைப்படும்போது சமாதி நிலையில் இருக்கலாம்.
🌹 தேவைப்படும்போது எண்ணமற்ற நிலையில் இருக்கலாம்.
🌹 தேவைப்படும்போது தியான நிலையில் இருக்கலாம்.
🌹 தேவைப்படும்போது அமைதியாக இருக்கலாம்.
🌹 தேவைப்படும்போது சராசரி நிலைக்கு திரும்பி விருப்பத்தேர்வில் வாழலாம்.
🌹 அதனால், விருப்பம், விருப்பமற்ற இருப்பது என்பது சமாதி நிலைக்கு கீழ் நிலையில் உள்ளது.
🌹 சமாதி சாதித்த மனிதன் அமைதியாக தான் இருப்பான்.
🌹 ஆனால் அவருடைய வாழ்க்கையை வாழும்போது விருப்பத்தேவில் தான் இருப்பார்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025