🌹 சிவம் எங்கே சக்தி எங்கே சிவசக்தி எங்கே எங்கே
🌹 என்று ஒரு பாடல் உண்டு.
🌹 அதில்,
🌹 பூவை நாம் காண்பதுண்டு.
🌹 பூவிலே மணத்தை உண்டு.
🌹 பூவை நாம் பார்ப்பதைப் போல்,
🌹 மணத்தை பார்ப்பதுண்டோ ..
🌹 என்ற வரிகளே சிவசக்தியை புரிய வைத்துவிடும்.
🌹 சிவம் என்ற ஒன்றுமற்றது பார்க்கின்ற சக்தியாக வெளிப்பட்டுள்ளது.
🌹 அந்த ஒன்றுமற்ற சிவத்தை (நான்) உணர வேண்டும் என்றால் எனக்கு ஒரு பொருள் தேவைப்படுகிறது.
🌹 அந்தப் பொருள்தான் எனக்கு சக்தியாக இருக்கும் உடலாக இருக்கிறது.
🌹 இதை புரிய வைப்பதற்கு தான் காளி சிவத்தை மிதித்து நிற்பது போன்ற உருவம் இந்து மதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
🌹 அதாவது, சக்தியான, காளியான, உடம்பானது,
🌹 தன்னுள் சிவத்தை அதாவது வெட்டவெளியை மிதித்து அல்லது பிடித்து வைத்திருக்கிறது. என்பதை காளி சிவத்தை மிதித்து நிற்கும் வரைபடத்தின் மூலம் தத்துவார்த்தமாக சொல்ல வருகிறார்கள்.