மூல கருத்துக்கள்:
எனது இன்றிய செய்தியே மனம் உனது, எண்ணம் உனது என்றால் ஏன் துன்பப்படுகிறாய்?
பாவ புண்ணியம் எல்லாம் இருக்குதா? என்றால் இருக்கிறது. அதனால் தான் பாவம் செயாதிரு மனமே என்று கூறுவார்கள்.
ஆனால் நாம் இதை ஒற்றுக்கொள்ள ஆரம்பித்தால் வேறு ஒரு இடதுக்கு கொண்டு போய் நிறுத்திவிடுவார். உதாரணமாக கொசு கடித்தால் தட்ட கூடாது என்ற அளவுக்கு சென்றுவிடுவார் 😜
சிலர் கருவாடு மாதிரி நாற்றம் இல்லை என்பர். சிலர் கருவாடு வாசனையாக இருக்கிறது என்பர்.
எனக்கு தெரிகிறது அல்லவா நான் செய்வது சரியா? தவறா? என்று. பிரீதியாருக்கு வலிக்குது என்றால் நான் அதை செய்ய கூடாது அல்லவா? இது சமூகத்தில் கற்றுக் கொடுத்தது அல்ல .
சிலருக்கு மட்டுமே வாழ்க்கை அற்ப விளையாட்டு என்று புரிகிறது. நாம் பிறவி எடுத்துக்கொண்டே இருக்கிறோம். அவர் தான் இவற்றை விட்டு விட்டு கடவுளை நோக்கி நகர சொல்கிறார்.
திருக்குறள் எழுதப்பட்டதே முதல் பத்து குறளுக்காகதான். கடவுள் இருக்கிறது, அதை அடைய முடியும். கடவுள் தெரிந்தவரை பனிந்தால் அவர் கற்றுக் கொடுப்பார். பிரவியின் நோக்கம் இறைவனை சேர்ந்து இந்த கடலை கடப்பது தான்.
அதில் துரவும் சொல்கிறார் இல்லறமும் சொல்கிறார். விருப்பம் உங்களுடயது.
நல்லது கெட்டது என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. பிரீத்தியாருக்கு கெட்டதாக தெரிவது உங்களுக்கு நல்லது என்றால் அது நல்லது தான். ஆனால் பிறருக்கு தொல்லை தர கூடாது.
மற்றவருக்கு கஷ்டம் தராமல் வாழவேண்டியது எல்லோரின் வேலை. அவர்களாகவே கஷ்டப்பட்டால் அது அவர்களின் சொந்த பிரச்சனை.
பிடிக்காதவர்களிடம் கூப்பிட்டு எல்லாவ்வற்றையும் சொல்வது தப்பு அல்லவா? கரி மீன் சாப்பிடுவது உனக்கு பிடிக்கவில்லை என்றால் தப்பில்லை சாப்பிடுவோரை சாப்பிடாதே என்று சொல்வது தப்பு தான்.
சிகரெட் பிடிப்பது தப்பு இல்லை. அதை மூஞ்சியில் ஊதுவேன் என்பது தப்பு.
பிறவி இருக்கிறது. அதில் துன்பம் இருக்கிறது. பிறவியை கடக்க வேண்டும்.
மறைவாக செய்ய வேண்டிய விஷயத்தை மறைவாக செய்யுங்கள்.
இந்த காணொளியில் யதார்த்தமான நகைச்சுவை கலந்த பேச்சு உள்ளது.