மூல கருத்துக்கள்:
நான் மகிழ்ச்சியாக தான் இருக்க வேண்டும் ஆனால் பிரித்தியாருக்கு தொல்லை தராமல் இருக்க வேண்டும். தொல்லை தருபவர்களோடு இருக்க கூடாது.
மகிழ்ச்சியாக இருக்கேன் என்பதற்காக பாதி ராத்திரியில் எழுந்து ட்ரம்ஸ் வாசிப்பாயா? ரோட்டில் வண்டியை தாறுமாறாக ஓட்டுவாயா?
சில வீடுகளில் பெண்கள் சிரித்தால் கணவங்களுக்கு பிடிக்காது.
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
குறிப்பாக கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் இப்படி நடந்து கொள்ள வேண்டும்.
சத்சங்கத்தில் நான் கொண்டாடமாக பேசும் பேச்சு கூட சிலருக்கு பிடிப்பதில்லை.
அம்மாவையும் மனைவியையும் ஒரே மாதிரி நடத்த முடியாது.
மகிழ்ச்சியாக இருக்க தான் வந்தாய்.
எதை கொண்டு வந்தாய், இழப்பதற்க்கு?
இந்த உடலை கொண்டு வந்துள்ளாய். இது ஒரு பரிசு. இதை கொண்டு சரியாக வாழ்ந்து விட்டு போக வேண்டும். உடலின் மேல் கவனமாக இரு. அழகாக பயன்படுத்து.
சாராயம் அளவாக குடி . இருக்கிறது என்பதற்காக குடித்து கொண்டே இருந்தால் லிவர் வெந்தது விடும்.
சிகர்ட் பிடிக்கலாம் ஆனால் சிகர்ட் வாயில் வைத்து பொது இடத்தில் (பேக்கரி) காமிகாதே. அப்படியே சிந்தனை செய்து கொண்டு இருக்காதே.
மகிழ்ச்சியாக இரு ஆனால் உன்னை கெடுத்து கொள்ளாதே. முடிந்தவரை மற்றவர்ருக்கும் தொல்லை இல்லாமல் இரு. அவர்களே தொல்லையாக நினைத்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை.
இந்த காணொளியில் நகைச்சுவை கலந்த உண்மை பேச்சு உள்ளது. முழுமையாக அனுபவிக்க இந்த காணொளியை பார்த்து கொண்டாடுங்கள்.