திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
அரிதாரபற்ப முறை
தரு
தாரபற்பமிதுகாண் திருமாலின் தேவியிதுகாண்.
📖 பாடல் எண்: (1456) 📖
பற்பங்குன்றியெடைகாலையுமாலையும்
உற்பகமாயொருபக்ஷமுணர்வீராய்
அற்பதேகமசாத்தியநோய்களுந்
துற்பலமாவதுந்தூணதுவாகுமே- தார.
📖 பாடல் எண்: (1457) 📖
சீறுநாசியடைப்புநீர்பாய்ச்சலும்
சேருஞ்செவிதனில்சீழுமடைத்தலும்
தேறுங்கபாலத்தின்சூலையும்பாண்டுடன்
ஊரைவிட்டேகியுகாந்திரமோடுமே- தார.
📖 பாடல் எண்: (1458) 📖
காசரோகங்கனமேப்படைகளும்
நாசியடைப்புப்புண்புரைச்சீலைகளும்
வாசமாகிடுஞ்சீழுங்கிருமியும்
மாரியோடும்வலுவானநோய்களே- தார.
📖 பாடல் எண்: (1459) 📖
கெற்பகாசங்கிரந்தியுஞ்சூலைகள்
அற்பநோய்க்குஅவிழ்தங்கொடுத்திட
முற்பச்செய்கைமூலங்களுமறும்
மெய்ப்பொருள்காரபத்தாலாண்டையே- தார.
கொச்சகம்
📖 பாடல் எண்: (1460) 📖
மூலப்புளியமுரி முன்னேயுள் ளத்திலும்
வாலையது வாய்செனித்து வாசியினால்சுன்னமாம்
சூலதுவா வந்தமைத்த சூதறிந்து முப்பூவின்
காலத்திலும் கற்பமுண்ட காரணத்தினால்முடிந்தே.
📖 பாடல் எண்: (1461) 📖
முடிந்ததுகாண் தீட்சைபத்து மூலப்புளிசுன்னமதால்
படிந்ததுகாண் முப்புசுண்ணம்பார்தனிலுமார்முடிப்பார்
கடிந்தமுரி கற்பசுத்தி காயசுத்தி யானதினால்
வெடிந்ததுகாண் சற்குருவால் வெகுசரக்குநீற்றினமே.
கலித்துறை
📖 பாடல் எண்: (1462) 📖
ஆண்டுதச பத்து கற்பாதி கற்பத்தி னாதரவால்
பூண்டுத்தி றந்திந்த மூலப்புளியென்றபொக்கிஷத்தை
வேண்டிவா லாம்பிகை பாதார விந்தத்தில்மேவிடயான்
தூண்டி யெனக்குப தேசந்தந் தென்னைச்சோதித்தளே.
📖 பாடல் எண்: (1463) 📖
சோதி யானந்த பரிபூர ணானந்த சூக்ஷமதால்
வாத வயித்திய நானறிந் தம்பிகை மதுமலர்ச்
சாதனை செய்தொரு ஈராறு மாச்சுது தானறிந்தேன்
நீதிமெய்ஞ் ஞானத்தில்வெட்டியென்றேவேதநிர்மித்தனே.
வெண்பா
📖 பாடல் எண்: (1464) 📖
வேண்டு மரிதார வேதையிட பாதையது
தூண்டிதுகாண் மூலப் புளிசுண்ணம்-
கண்டால் கலகமது காசமறுஞ் சன்னிசுர
முண்டாலு மூழ்வினைபோம் போம்.
📖 பாடல் எண்: (1465) 📖
தேனுமனு பானஞ்சேத்து மந்தொண்ணூற் றாறுமது
மூனைவிட்டு வோடிவிடு மூழ்வினைபார் – தேனதனால்
நானுணர்ந்த ஞானவெட்டி நன்னூலது வாயருள
பானமதை யுண்டதுவும் பார்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 1️⃣0️⃣4️⃣ ஞானவெட்டியான் (1466-1480) 👈