திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
அரிதாரபற்ப முறை
தரு
தாரபற்பமிதுகாண் திருமாலின் தேவியிதுகாண்.
📖 பாடல் எண்: (1441) 📖
தாரந்தனில்திருமாலின்தேவிபலஞ்
சீராய்காலங்கல்லுசுன்னத்தில்தாளித்து
நீரமுரிபடிநாலுக்கொன்றுகாரம்
நேரத்துடன்மூன்றுநாள்கரைத்துபின்பு
தாரமூன்றுநாளில்தெளியுஞ்செயநீரதில்
வேறொருபடிவெண்காரசாரமும்
பூரம்பலஞ்சரியொக்கத்தூளாக்கிப்பின்
தூறிடுநீரினில்தூள்செய்துபோடுமே-தார.
📖 பாடல் எண்: (1442) 📖
சாரகாரசெயநீரதும்பீங்கானில்
வீறதாரவிடுமெய்ப்பொருள்முப்புவும்
காரநீரினில்கழஞ்சிடைபாய்ச்சியு
மேறநீருமிறுத்துங்கடிகைதான்- தார.
📖 பாடல் எண்: (1443) 📖
புரசையாவதும்பூமுருக்கநிறம்
வரிசையாச்சட்டியில்தாரமும்
சுரநீர்செயநீரதுஞ்சாமனால்
துருசமாகச்சுருக்கிட்டுப்பாருமே- தார.
📖 பாடல் எண்: (1444) 📖
சுருக்கேறவுவந்துய்யவெண்ணரிதாரமாம்
மிருகுங்கட்டிமினுமினுப்பேகிடும்
இறுகுமுப்புக்கழஞ்செடைவிந்துநீர்
இரண்டுமிழைத்துக்கவசமுஞ்செய்திடே- தார.
📖 பாடல் எண்: (1445) 📖
தாரங்கட்டிடுஞ்சத்துக்கள்வெட்டையாம்
ஈரம்வற்றஇனிரவியின்முகம்
நீறுந்தாரம்பத்திராட்சியரைத்துமேல்
சோரச்செய்துமேசுன்னநீர்ச்சீலையே- தார.
📖 பாடல் எண்: (1446) 📖
சீலைமண்ணுடன்செய்வதருவஞ்சினில்
வாலையம்பிகைமாது அருளினால்
சாலமாமலர்தாயைப்பணிந்துடன்
நீலமேதிருமாலைப்பூசித்தேனே- தார.
📖 பாடல் எண்: (1447) 📖
வன்னியிட்டுப் பார்க்கவாசம்புகைவரா
துன்னிதமாய்ப்பொன்னரிதாரநீறிடு
மன்னையருள்திருமாலின்தேவியெனுஞ்
சொர்னபற்பந்துடிசொன்னோமீதாண்டையே-தார.
📖 பாடல் எண்: (1448) 📖
அதிதாரமதுநீறும்பரிசவேதை
யாதலால்தேயுவினதுபத்துக்கொன்றிது
காரியமாமெனும்பொன்னரிதாரத்தில்
வீரியமென்னவிதமறியார்கள்காண்- தார.
📖 பாடல் எண்: (1449) 📖
கூறறியுமாவின்கிருதமுந்தேனுடன்
சீர்மேவுந்திப்பிலிசிறுமிளகுமது
வாறறியுங்கிராம்புவாதமடக்கிவேர்
சாருஞ்சுக்கதுவம்பலமதாகுமே- தார.
📖 பாடல் எண்: (1450) 📖
வகைவகைக்குச்சரிசமனாய்த்தூளாக்கிப்பின்
அறியும்பற்பமதுகுன்றிதன்னிடைத்
திகையில்லாமல்தேன்கூட்டிகற்பத்தினில்
பகையில்லாதொருபக்ஷங்கொண்டுணருமே- தார.
📖 பாடல் எண்: (1451) 📖
வகையிந்தப்படிகாலையுமாலையும்
புகையுமேபுளிபொட்டெனத்தள்ளிடுந்
துகையதாஞ்சயகாசமிருமலுஞ்
சுவாசத்தோடிரைப்பாவதுநீங்குமே- தார.
📖 பாடல் எண்: (1452) 📖
சாதமிந்தப்படிமேவும்பட்சத்தினில்
தாரபற்பமுஞ்சடந்தனிலூறினால்
வாதம்விக்கலுடன்பித்தரோசிகம்
வாந்திசந்திசுரசன்னியுமேகுமே- தார.
📖 பாடல் எண்: (1453) 📖
சூதத்தினால்வயிறுவலியுடனுஷ்ணமும்
வாதத்தினால்பெருவயிறுந்துர்க்குணம்
நாதத்தினால்பிரமூலப்பிரமியங்
காசத்தினால்தொண்ணூற்றாறுசயம்விடும்- தார.
📖 பாடல் எண்: (1454) 📖
பரங்கிப்பட்டைச்சிற்றரத்தைசுக்குடன்
சிறந்தவாதமடக்கித்திப்பிலியும்
நிறைந்ததோர்கொடிவேலிவேர்பட்டையுங்
குறைந்திடமிளகருணையேழுமே- தார.
📖 பாடல் எண்: (1455) 📖
ஏழுவகைக்குச்சரியெடைப்பாகம்
இடித்துத்தூளதாயினிப்பதனத்துடன்
வாழுமாமலைத்தேன்பசுங்கிருதஞ்சரி
வார்த்துமத்தித்துமதிபற்பங்குன்றியே- தார.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 1️⃣0️⃣2️⃣ ஞானவெட்டியான் (1441-1455) 👈