திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
ரசபற்பம்
(தரு)
சூதரசபற்பங்காண் – ரசசூத-
வாலைரசபற்பங்காண்.
📖 பாடல் எண்: (1431) 📖
மாதவிடாய்சருங்கேற்றவாலைரச
மேலுமேன்மேலும்வெகுவலுவாகிடும்
நாதசத்திமூலநாடிப்புளிக்குளே
சூதவாதசித்திகுகைமலப்புளிசீலையே- சூதரச.
📖 பாடல் எண்: (1432) 📖
மலப்புளிசரக்கானதுகுக்கிடம்
வன்னியிட்டு அனலாறிசூதபற்பம்
பலமிந்தஎடைமாறாதொருபலம்
பார்க்கப்பார்க்கப்பளிங்காகும்பிரகாரமாம்-சூதரச.
📖 பாடல் எண்: (1433) 📖
நலமிந்தவுடலெமனென்றநோய்வினை
நாடிடுமேபதினெட்டுகுஷ்டத்துக்கும்
வலையதுவும்வீசும்பஞ்சதாரைக்கிருதமெனும்
அதில்குன்றியிடைவைத்தரைமண்டலமுண்ண-சூதரச.
📖 பாடல் எண்: (1434) 📖
வாதமடக்கிவேர்க்கொம்புபறங்கியும்
இரவுமேகொடிவேலிவேர்தோளதும்
வீதஞ்சரிஎடைசூரணமாய்ச்செய்து
மேருதேன்கூட்டிக்குழைத்தந்தபற்பத்தில்- சூதரச.
📖 பாடல் எண்: (1435) 📖
வேதஞ்சொலும்படிமேகவாய்வுகுத்தல்
பேதமானகடிமுடக்குப்பிடிப்பதும்
சூதபற்பங்குன்றிகாலையுமாலையும்
நாதனருளரைமண்டலநல்கிடே- சூதரச.
📖 பாடல் எண்: (1436) 📖
மூலமெட்டுமூலகிராணியெட்டுவாய்வு
குன்மமெட்டுசுரதோஷத்தோடேழதும்
நீலமேகங்களிருபத்துஒன்றுடன்
காலையோடிகடல்புக்குமாறுமே- சூதரச.
📖 பாடல் எண்: (1437) 📖
வாலைசூதமகிமைமகத்துகள்
பேதபேதமாய்ப்பேசினார்நூல்களில்
நாதவிந்துகாரசாரமகிமையால்
சூதபற்பமுஞ்சூட்டினேனாண்டையே- சூதரச.
📖 பாடல் எண்: (1438) 📖
ஊழ்வினைப்பயனோடிப்பறந்திடும்
மைவிழிமடமாதுசூதகம்போம்
பையவினைப்பழிபாண்டுரோகம்விடும்
மெய்யிதுஞானவெட்டியிதுண்மையே- சூதரச.
📖 பாடல் எண்: (1439) 📖
கர்மாந்தரநோய்கருதிப்பறந்திடும்
மர்மமேதுவழலைமகத்துவந்
தர்மநோய்க்குத்தகுந்தவிழ்தமிட
கர்மநோய்கள்காணாதுசுபஸ்தமே- சூதரச.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 1️⃣0️⃣2️⃣ ஞானவெட்டியான் (1441-1455) 👈