திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
விருத்தம்
📖 பாடல் எண்: (1466) 📖
இந்தமதி யாலெடுத் துரைத்தேன் காணும்
எண்டிசையுங் கீர்த்திபெற விந்நூல் பாடிச்
சந்தயமெல் லாம்வெளியாய்த் தானே தோற்றும்
சங்கையென்ற மர்மமெல்லாஞ் சார்வாய்த்தோன்றும்
கந்தமலர்ப் பூங்குழலா என்னை பாதங்
கருத்தில்வைத்துக் கருவியெல்லாங் கணக்காய்ச்சொன்னேன்
இந்தமதி யெய்தினதா லாண்டே கேளீர்
இனியுரைப்பேன் சவ்வீர சுண்ண மாண்டே.
சவ்வீரசுண்ணம்
தரு
அதிவீரசுண்ணங்காண்-
சவ்வீரமாலகாலவிஷங்காண்.
📖 பாடல் எண்: (1467) 📖
விதியிருந்ததினாலிந்தசுண்ணமு
மதிவிதவீரசவ்வீரபற்பங்காண்
மதிரவிராசகெம்பீரபூபதி
கெடிரணசூரமகிபதிராச- அதி.
📖 பாடல் எண்: (1468) 📖
கட்டுமறுபத்துநாலுசரக்கையும்
வெட்டியெறிந்துவெண்ணீறதுபோலவும்
கெட்டிகாரசாரசிஷ்டையினால்வீரம்
பட்டுப்போய்மர்த்தனம்பற்பமதாகிடும்- அதி.
📖 பாடல் எண்: (1469) 📖
வீரம்படநவரத்தினமர்தனம்
வேகமிதால்வச்சிரங்களுமர்த்தனம்
காரம்படநவலோகமுமர்த்தனம்
காலனென்றஎமன்கற்பத்தால்மர்த்தனம்- அதி.
📖 பாடல் எண்: (1470) 📖
தாரத்தினால்செம்புவங்கமுமர்த்தனம்
தங்கமுதல்ரசிதங்களுமர்த்தனம்
சாரத்தினால்சரக்காதீதமர்த்தனம்
சத்துருமித்துருவறிந்துசெய்மாரணம்- அதி.
📖 பாடல் எண்: (1471) 📖
வீரந்தனிலொருமேலும்பலமறிந்
தேனுமறுவகைநீரிலொருபடி
பானந்தனில்முப்புநானறிந்தோர்களிச்
சேனத்திலுமயச்சட்டிக்குளிட்டுமே- அதி.
📖 பாடல் எண்: (1472) 📖
காரநீராலுஞ்சவ்வீரஞ்சுருக்கிட
காரசாரசெயநீரினில்கட்டிடு
மூரலற்றுமுழுக்கட்டுமிருரெண்டு
சாமத்திலுஞ்சுத்தபேதியாமாண்டையே- அதி.
📖 பாடல் எண்: (1473) 📖
முப்புசுண்ணந்தனில்மூன்றுபணவிடை
கற்பூரமுங்காடிக்காரமுமைந்திடை
உற்பகநாபியுமுரவெங்காரமும்
இப்படிச்சூதமினமரிதாரமே- அதி.
📖 பாடல் எண்: (1474) 📖
மடையன்புனுகுமனோசிலையந்தெடை
எடைபிசகாமலுமிந்திடைபூரமும்
நடைகுருவண்டுநாதவிந்துநீரில்
உடனேமூலப்புளியூட்டியரைத்திடே- அதி.
📖 பாடல் எண்: (1475) 📖
விந்துநாதத்தினால்விட்டொருசாமமு
மந்தமரக்குமதுமைபோலாகவும்
சந்தயமில்லாசவ்வீரத்தின்மேலெழு
விந்தையெனும்ரவிவேகம்படப்பட- அதி.
📖 பாடல் எண்: (1476) 📖
காயக்காயக்கதிர்காணசவ்வீரமு
மாயும்படியதுமாறிமாறியிடச்
சாயமேறிசரகாயுலர்ந்தாகிடில்
வேகங்கண்டுவீரமேவிடுமாண்டையே- அதி.
📖 பாடல் எண்: (1477) 📖
தனியமூலப்புளிதான்சரகானதி
லினியதூளாக்கிடுமொருசட்டினில்
கனியஓரஞ்சதுகாரமதுபலம்
இனியகீழ்மேலுமிவ்வீரத்தையூட்டிடே- அதி.
📖 பாடல் எண்: (1478) 📖
ஊட்டிமேலோடுஒரெழுகவசமும்
நாட்டிரவிவன்னிநாடிகடியில்
நீட்டியனலுமூலாக்கினைபாய்ந்திடில்
வேட்டியாகுமிதுவீரசுண்ணமிதே- அதி.
📖 பாடல் எண்: (1479) 📖
வேகம்படவிந்தவீரசுண்ணத்தினா
லோகங்கள்நீறுநுழைந்ததில்பாய்ந்திடில்
சாகுமறுபத்துநாலுசரக்கது
மேகமிருபத்துஒன்றறுமாறுமே- அதி.
📖 பாடல் எண்: (1480) 📖
ஆலகாலவிஷமானஅவ்வாறினால்
காலனேதுபின்கலிவருகாதுபார்த்து
மூலமெட்டுமுறித்ததுமோடியும்
பாலையாவதும்பாருஞ்சவ்வீரமே- அதி.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 1️⃣0️⃣5️⃣ ஞானவெட்டியான் (1481-1500) 👈