திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
சாதிலிங்க பற்பம்
தரு
சாதிலிங்கபற்பங்காண்பஞ்சபூதத்தில்
சோதியானந்தப்பிரகாசங்காண் .
📖 பாடல் எண்: (1554) 📖
அருள்வந்தெய்தும்வன்னியதன்மிகச்சோராமல்
விதியாயக்கமலாக்கினைவிளங்குகடிகையேழு
விடம்விட்டுப்பிரியாவொருநிலைகொண்டனல்சுற்
முறியாபதனமாகஎரித்துஆறவுமறுநாளெடுத்து
வைத்துமேகாலைபிரித்துச்செய்கையின்படிபிசகாமலுமெடுக்க
சிவசிவசம்போசெம்புலிங்கேசஅரகரசம்போகத்துவலிங்க
சற்குருநாதாஅகத்தியருள்சித்திமகத்துவலிங்கந்
தவத்திலடியனுந்தன்சபத்திமறவாமலும்
சாதிலிங்கந்தான்அதிதசுண்ணமதியந்தடங்காணும்
நாதவிந்திதால்வீரசெயபூபதிவேதைகளுக்குங்கெடி
சூரனெனுஞ்சவ்வீரந்துரைபூபதிக்குப்பெட்டி
தாம்பரவேதைவிஜயமன்னால்சாற்றவுமெளிதா-சாதி.
விருத்தம்
📖 பாடல் எண்: (1555) 📖
பிருதிவி யப்புடனுந் தேய்வு வாய்வும்
பலத்தஆ காசமொடு பஞ்ச பூதம்
அறிவித்தேன் சரக்கிதுகா ணஞ்சு மாச்சு
அகிலபுவ னங்களினி லார்தான் செய்வார்
உருதிமன தொருமையினா லோகோ தீட்சை
ஓராண்டு அமுரியுண்டு உடல்வே றானால்
குறிபடுமென் னாண்டைதச தீட்சை பத்துங்
குருவருளால் முடிந்ததனால் யோக வானே.
📖 பாடல் எண்: (1556) 📖
யோகமொரு வருஷம்பனி ரெண்டாண் டென்னில்
உதகமது மிறங்குமிட லழிவோ இல்லை
தேகமழி யாதுயிர்காண் சடமே வச்சிரம்
சித்தர்க ளினொருவன் தேவ னாச்சு
சாகாம லிருந்திடலாம் வினைதான் போச்சு
சத்திசிவ தீட்சையினால் சாக்கா டில்லை
ஆகமத்தி லொளித்துவைத்த பொருள்தா னாண்டே
அகத்தியரால் யானறிந்து அருபெற் றேனே.
📖 பாடல் எண்: (1557) 📖
அறிவித்தே னீற்றினமுங் கார சாரம்
அதினளவால் சரக்குஅறு பத்து நாலும்
விரிந்திடுமே நவலோக நவரத்தி னங்கள்
வெண்ணீறாஞ் சுண்ணமொடு பற்பந் தானும்
தெரியவுமே செந்தூர மனுபா னங்கள்
செய்தொழிலும் வேதையொடு திறமாய்க் காணும்
பரியாச மாயுலகோர் பழியா மற்றான்
பதினெண்பேர் மறைத்தகற்பம் பகர்ந்திட் டேனே.
📖 பாடல் எண்: (1558) 📖
சாம்புவனென் றேயெடுத்த பேர்தன் னாலுந்
தந்தையெந்தன் பிர்மசரஸ் வதியுந் தாய்தான்
நாமெனுமே விரித்துவிட்டகுறையா லெய்தும்
நாதவிந்து உற்பகத்தால் ஞானி யானேன்
வாமெனுமே வஸ்துவுண்டு யோக வானாய்
மதிரவியின் பிரகாச ஒளிவி னாலுந்
தேனெனுஞ்செங் கமலமலர் பூத்த வாசம்
ஜெகமெல்லாம் பரிமளிக்கச் செய்தே னாண்டே.
📖 பாடல் எண்: (1559) 📖
பரியாச மாகவுமே பழிப்பார் நூலைப்
பழித்ததனா லெலுவாய்க்கும் பலனோ வில்லை
குறிப்பாகக் கும்பமுனி பாதம் போற்றிக்
குருவருளால் குண்டலியே தொழுதேன் காணும்
துரியதுரி யாதீத நிலையுங் காட்டித்
துவாத சாந்தவெளி சுழிமுனை காட்டி
நெறிபிசகா மூலமென்ற புளிசுண்ணத்தால்
நீற்றினமும் கண்டறிந்து நிலைபெற் றேனே.
📖 பாடல் எண்: (1560) 📖
பலிதமாய் வான்குமரி லேகி யத்தைப்
பக்குவமா யானருளப் பாரில் மாண்பர்
மெலிந்தசடம் வலுத்திடுங்காண் வினைதானில்லை
மேதினியோர்க் காகவுமே விளம்ப லானேன்
சலியாதே நீமனதே கெர்வம் வேண்டாம்
சாஸ்திரத்தைப் பொய்யென்று தள்ள வேண்டாம்
கலியெது கற்பமுண்டால் காயஞ் சித்தி
கனகமுன துள்ளமதில் காண லாமே.
வான்குமரி லேகியம்
தரு
வான்குமரிலேகியங்காணும்- மேகாதிமேகந்
தான்பயந்தோடி யேபோங்காணும்.
📖 பாடல் எண்: (1561) 📖
நான்மகிழ்ந்துலகருக்குவான்குமரிலேகியத்தை
யானுணர்ந்துணரவின்பஞானவெட்டியான்விதிக்கும்
நதிசூழ்ந்திடு அருள்மேவியமதிசாரநீரெடைநாலது
மலமூலமிதொருகானெடைகுடமுட்டகரைத்தேவடி-வான்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 1️⃣1️⃣1️⃣ ஞானவெட்டியான் (1562-1581) 👈