திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வான்குமரி லேகியம்
தரு
வான்குமரிலேகியங்காணும்- மேகாதிமேகந்
தான்பயந்தோடி யேபோங்காணும்.
📖 பாடல் எண்: (1562) 📖
தேனிதைமூன்றுநாள்வைத்துப்பானமுந்தெளியசலம்
ஆனதையேனத்திலிட்டுவூனெனுங்கற்றாழையின்வேர்
செருக்கித்தததுதரித்துத்திடிபிரித்தெத்தனைபடிபத்திடை
யினமுனசலமுடன்சேர்த்தினிபுனல்வைத்திடுவனல்சூழ்ந்திடு- வான்.
📖 பாடல் எண்: (1563) 📖
முன்னமேவன்னியைநாட்டியின்னமுங்கமலாக்கினை
பின்னமும்வராமலுந்தானென்னையுங்கசிந்துவிட
முறியாமலுமலைப்பட்டழிந்தொழியாமலுங்கொதித்தெத்துட
னிருந்துத்துதிமருந்ததன்றிவையறிந்துப்பதமதுபாகதும்- வான்.
📖 பாடல் எண்: (1564) 📖
கன்னலும்வரும்பாகதுநன்னயத்துடனேசீனி
தன்னினம்பலம்பத்ததுஉன்னிதமாகவும்விட்டு
கலந்துக்கிளரதுபாகுபோலிருந்துக்கனலடிபற்றிடா
மலர்ந்துப்பதம்வருமேவிடில்முறிந்துத்தணலறிந்திப்படி- வான்.
📖 பாடல் எண்: (1565) 📖
சாதிபத்திரிகிராம்புஞ்சோடசம்பதினாறெடை
ஏலமுஞ்சீரகம்ரெட்டியிதுக்குரெட்டிமிளகு
இயல்பாயெடுமிதுசூரணபலமாய்ப்பொறித்திடைமாறிடாப்
பதமாய்வருமிதுபாகுவில்கவரும்படியுடனேயிது-வான்.
📖 பாடல் எண்: (1566) 📖
பாகதுபோலும்வருதல்பதமாய்லேகியங்காணும்
மாவதுமடிபற்றாமல்மார்க்கமாயெடுத்தேனத்தில்
வைத்துபரிசுத்தத்துடனித்தம்மருள்முத்திப்பெற
சித்தத்தனுக்கிரகம்பதஞ்சித்திச்சிவஞானக்குரு-வான்.
📖 பாடல் எண்: (1567) 📖
தத்துவமெய்ஞ்ஞானநெறிசித்தர்களறிந்துசிவ
சத்தியைப்பூசித்துக்கற்பமுத்தியையறிந்துமோட்சம்
தனைப்பெற்றுடன்வினையத்துடல்கனசித்துகள்மனமொத்துடன்
நிலைவைத்துருபரசிததியிலருள்பெற்றனுக்கிரகப்பதம்- வான்.
📖 பாடல் எண்: (1568) 📖
குமரிலேகியந்தனில்குறித்துக்கழற்சியின்காய்
அமிர்தமெனவும்லிங்கமதிதசுண்ணங்குன்றியெடை
அதிக்குட்பதிந்திருவேளையுமிதுக்குப்பொருளரைமண்டலம்
விதிக்கும்பசுமமிர்தத்துடனுதிக்குங்கதிரொளிபோல்வரும்- வான்.
கொச்சகம்
📖 பாடல் எண்: (1569) 📖
வான்குமரி லேகியத்தில் வைத்துஅரைமண்டலங்காண்
தான்கருதி யுண்டிடவுஞ் சன்னிசுர தோஷமும்போம்
ஊண்வாயு வுளமாந்தை யோடும்விப் பிருதிமுதல்
தேன்மதுர மேகசயந் தித்திப்புநீர் காண்கிலனே.
📖 பாடல் எண்: (1570) 📖
கட்டியரை யாப்புகன்ன சூலையுடன் கர்ணிகமும்
ஒட்டியப்புண் வாழைசிலை யுட்பிரமி மூலமதும்
ஈட்டியது போலிகழ்ச்சி யெய்துஞ்செவி குத்தலுடன்
மேட்டியென்றே மேகமெல்லாம் விட்டொழிந்துவேகிடுமே.
📖 பாடல் எண்: (1571) 📖
மார்புத்து வாய்புத்து வாதபித்த சேத்துமங்கள்
நீர்ச்சுருக்கு நீர்க்கடுப்பு நீராமை நீர்ச்சுரப்பு
தூர்செயுங் குன்மங்களெட்டு சோகையுடன்காமாலை
பேரனந்த நோய்களெல்லாம் பிரிந்துவிடுங்காண்கிலனே.
கலித்துறை
📖 பாடல் எண்: (1572) 📖
விஷப்பாண்டு வீக்கமும் விக்கலுங் கக்கல்விரோசனமும்
சுழல்வாத பித்த சூரணமும் பஞ்சு வாசமுடன்
கழல்வாத சன்னி கறடு முறடுங் கட்டிகளும்
மழல்வா தம்வாய்வு சொரிகுஷ்ட மூலமடிபடுமே.
📖 பாடல் எண்: (1573) 📖
கடுவன் சிலந்தி கரையானு மீளையுங்கண்ணெரிவும்
வடுவன் பவுத்திர மணிகண்ட மாலை பரபரப்பும்
விரியனுந் தேளு மறுபத்தோ ராயிர விஷங்களதும்
பருசிக்க டல்புக்கி புகைபோலும் பற்றிப்பறந்திடுமே.
📖 பாடல் எண்: (1574) 📖
தீராத நோய்கள் தெளியாத பித்தந் தினவுடனே
வாராது காணும் வழலைப் பெருமையும்வாழ்க்கையினால்
பேரா லெடுபடு மமுரியுண் டால்வினைபேர்ந்திடுங்காண்
சாராது மாய்கை நமனென்ற தீவினை மாறிடுமே.
வெண்பா
📖 பாடல் எண்: (1575) 📖
பெண்பா லமிர்தம் விதித்தமதி பானத்தை
உண்பா ருலகுதனி லுண்டோ- வெண்பால்
மூலப் புளியருந்த முப்புரத்தைச் சுட்டிடுங்காண்
காலனில்லை யெப்போதுங் காண்.
📖 பாடல் எண்: (1576) 📖
மதனப்பா லுண்டு மாய்ந்திடுவ தில்லை
மிதமாய்க் கற்பம் விரும்பினால்- மதனப்பால்
லகரியது வேக நிராமயத்தை யுண்டு
சுகம்பெறலாங் காயசித்தி சொல்.
📖 பாடல் எண்: (1577) 📖
சொல்லார் பெரியோர் சொன்னால் வெகுசூக்ஷம்
வெல்லா ருலகத்தோர் விதியிருத்தால்- சொல்லார்
கண்டாலுங் காரங் கருத்தி லதைக்கண்டால்
உண்டாலு முத்தி யுணர்.
நாகபற்பம்
தரு
தனனாந்தனதனனாந்தன-
தன-தத்தனாந்தனதனதனனாந்.
📖 பாடல் எண்: (1578) 📖
திருப்பெருந்துறையிலகுமெய்ஞ்ஞானஒளி
திருமருவியமதிமலர்சூழும்
பொருப்புனல்நதிபெருகுந்தில்லையனந்த
புருவச்சுழியிடைபின்முனையில்வளர்
அருவுருநாதவிந்தின் அமைத்துவரலாறுகளின்
சூக்ஷமெல்லாம்யானுரைத்தேன்காண்
குருமுனியுரை தவறாமெய்ஞ்ஞானகுருவின்மலர்க்கமலம்
அடிதொழுதடியதுமர்ச்சனைசெய்து
கற்பகக்குண்டலியின் பதங்கருணையருள்
காரமுஞ்சாரமுங்கண்டுகருதினோம்பார்
தற்பரசிகாமணியின் சற்குருபரன்
தாளிணைபொற்பாதமலர்நான்மறவேன்
பரப்பிர்மசிஷ்டையினால்சாம்புவனெனும்
பாடுகிறேனாகபற்பம்வேகமிதுகாண் – தன.
📖 பாடல் எண்: (1579) 📖
பாகமதாய்நாலுபலங்காண் இடைபிசகா
பானுமதிசாரையது நாலுபடிதான்
சேகரமாம்புளிசரக்குக்கடுங்காரமது
சேர்த்தொருபடியிடித்துச்சூரணமதாய்
வேகமென்றஅமுரிதனில்காரத்தையூட்டி
விருப்பமுடன்கரைத்துமேலதுமூடி
யாகமப்படிதனைமூன்றுநாள்வைத்து
அமுரிதெளிவிறுத்துஅத்தெளிவினில்
கம்பியுப்புச்சீனக்காரம்வெங்காரஞ்சாரங்
கடல்நுரையுப்பதஞ்சுவகைக்குச்சமன்
ரம்மிதமாய்ப்பலமதுகாண்குளிக்கல்லினில்
நாட்டியரைத்தேமூடியதனிலடக்கி
கும்பமதிலுங்கரைத்துமூன்றுநாள்வைத்துக்
குடத்திலிருக்குஞ்சலத்தெளிவிறுத்தி
அம்பகமில்லாமலுமேகமலாக்கினி
அக்கினியைமூட்டியனல்தெட்டிமையதாய்- தன.
📖 பாடல் எண்: (1580) 📖
தொக்காகிசுண்டிடும்பதமாய்எடுத்துஆறச்
சூட்டிடும்பீங்கானதனில்சொல்லுவேனாண்டே
உக்கிரமதாய்ரவிதனில்எடுத்துவைத்து
உலரஉலரக்கதிர்முகந்தனிலும்
விக்கிரமெனும்வெண்ணிறமதாய்உப்பதுவேகம்
வெளுத்தசர்க்கரைநிறமென்னசொல்வேன்
அக்கரைகரங்கள்படவும்அதிதசுண்ணம்
ஆலகாலவிடமதுக்கெதிரில்லை காண்
ஆதியில்முன்னண்டைபற்பம்கழஞ்சியது
அதிதமுப்புசுன்னமதிலொருகழஞ்சு
நீதியாய்ச்சவ்வீரம்பூரம்வகைவகைக்கு
நேர்மையால்கழஞ்சியெடைதுருசுசுண்ணம்
பேதியிலதிதபேதிகாண்இதின்பெருமை
பேசினார்பெரியோர்ஜெகஜாலமதா
யிதிலொருகழஞ்சியிடைவகைவகை
யிதுவகைகளனைத்துமேகமதாய்- தன.
📖 பாடல் எண்: (1581) 📖
பனிவிழும்காலமதில்எட்டுநாள்விதம்
பாகமதுவாகவொருவாரமும்வைத்தால்
இனிசலநீரிறங்கும்இதுவென்னமயம்
இறுத்துஇறுத்துக்குப்பியதினுள்ளதாய்
வனிதையின்மாதவிடைபோல்அக்கினிவீசும்
வடித்துவடித்துச்சலமளவதுவாம்
கனதையாயிதையெடுத்துகைபாகமாங்
கருதிமூசையில்நாங்கனலதிகம்
உருகும்பதங்களறிந்துசெயநீரதனில்
ஓரெழுதிரமுருக்கிச்சாய்த்திடவும்தான்
வரும்வெள்வங்கமதுபோல்வெட்டையதுவாய்
வலுத்துக்கட்டியுமறுதிரமுருக்க
அருகுஞ்சவளையதுபோல்மெழுகதினவாறாச்
சரியமறுவெறுதிரமிருக்கப்
பெருகுந்தங்கத்தினிதங்காண்அதுவலுத்துப்
பெருமையென்னால்விளங்கப்பேசரிதுகாண் – தன.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025