திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
பளிங்கு பாஷாண பற்பம்
தரு
பளிங்குபாஷாண பற்பமென்னாண்டையே
பார்க்கவுஞ்சொர்ணபற்பம்.
📖 பாடல் எண்: (1531) 📖
இந்தபற்பமீரேழுலோகத்திலும்
சங்கைகாண்பதரிதரிதாகையால்
விந்தைபார்விந்துநாதக்கருவியால்
வந்தநோய்கள்வாராதுசெடத்திலும்- பளி.
📖 பாடல் எண்: (1532) 📖
மந்தமும்வயிறுமுப்பசமேப்பமுங்
கொந்திடுங்குலைநோய்கள்பறந்திடும்
அந்தமாகுமருணனொளிவுபோல்
அந்தபற்பமெவர்செய்துண்பார்களே- பளி.
📖 பாடல் எண்: (1533) 📖
வெள்ளைப்பாஷாணமிதுகற்றறிந்திடில்
வேதைகோடிவெள்ளீயம்ரசிதமாங்
கொள்ளைகொள்ளைகோடானகோடிவினை
கூறறிந்துகொடுத்திடநோய்கள்போம்- பளி.
📖 பாடல் எண்: (1534) 📖
விள்ளயில்லைவேதாந்திகள்சூதுகாண்
விந்துநாதம்வெளிமறைத்தேகினார்
கள்ளமில்லைக்கருதியநோய்களில்
காட்டினார்கருகாண்பதருமையே- பளி.
📖 பாடல் எண்: (1535) 📖
பற்பங்கோடிபலப்பலநூல்களில்
பாடினார்கள்பழம்பொருளாகவும்
கற்பங்கோடிகருவறியாமலும்
காட்டினார்கள்கனகத்தின்வேதைகாண்- பளி.
📖 பாடல் எண்: (1536) 📖
சற்பஞ்சாரைசவுக்காரமுப்பூவினால்
தப்பிதங்களொருசங்கைவராதிடில்
அற்பசண்டாளருக்காகுமாகாதிடில்
ஆண்டேஞானவெட்டிஆயிரத்தைந்நூறே- பளி.
விருத்தம்
📖 பாடல் எண்: (1537) 📖
இந்தவிதங் குறுமுனிவ ரெனக்குச் சொன்ன
ஏழ்மையடி யேனுரைத்த இயல்பைக் காண்போர்
அந்தரங்க மானதெல்லாம் வெளியாய்ப் பாடி
அப்புவியி லனை வருக்கு மாசா னாக
வந்தவிதி காணரிய ஞான வெட்டி
வசனித்த வாறுகளின் வரலா றெல்லாம்
பைந்தமிழை யாய்ந்துவிந்து நாத கற்பம்
பாடுபட்டோர்க் கெய்தும்பர கெதிதா னாண்டே.
📖 பாடல் எண்: (1538) 📖
கனவதுபோற் கண்டதொரு காட்சி யெல்லாங்
கற்பத்தா லறிந்தெந்தன் கருத்தி னாலும்
இனம்பிரித்து எந்தனுக் குபதே சத்தால்
எடுத்துரைத்தே மினிவர்ம மில்லா தாலும்
அனைவருக்கு மாயுரைத்த பொருளா னல்ல
மகத்துவத்தா லானதல்ல மர்ம மல்ல
தனமிதுகாண் பொக்கிஷத்தை வெளிவிட் டாலுந்
தலைதெறித்து அண்டஇடி சாருந் தானே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (1539) 📖
பூத்திருக்கு நாதவிந்து பூநீறு வானதுகாண்
மாற்றுஇரு பத்தாண்டில் மலப்புளிபூ நீரதுவாம்
வேற்றுமைக ளில்லையினி மெய்பொய்யறிந்தேமருவக்
காற்றுமழை போலிருந்த காரணத்தைக்கண்டிலரே.
📖 பாடல் எண்: (1540) 📖
வஞ்சகமில்லா நூலாய்ந்துவைத்திருப்போர்க்கென்னபலன்
சஞ்சலம்வா ராதுவினை சாஸ்திரம்பொய் வாராது
பஞ்சவரு காதவற்குப் பதினெண்பேர்காயமும்போம்
கஞ்சமல ரம்பிகையின் கருணைபெற்றுவாழ்பவரே.
📖 பாடல் எண்: (1541) 📖
இந்நூலை யாய்ந்து இகழ்ச்சிபடு வித்த ஈனருக்குத்
தன்னா லனேகஞ் சதகோடி நோய்களில்சஞ்சலமாய்க்
கன்னான் குறடுகனல்கொண்டுவீசிடுங்காயத்திலும்
சொன்னேன்சொரிகுஷ்டம்வெறிகொண்டுபாய்ந்துசொக்குவரே.
📖 பாடல் எண்: (1542) 📖
கற்பத்தை யுண்டு கணக்குபத் தாண்டுகழித்தபின்பு
அற்பமிது வென்றறிந் திட்டதா லல்ல ஆச்சுதென்று
உற்பகஞான ஜெகஜோதி யாட்ட முடலதனில்
முற்பகஞ் செய்த பூசாபல யோகமுன் னாள்தவமே.
வெண்பா
📖 பாடல் எண்: (1543) 📖
எஞ்செய லாலெய்து மிவ்விதியு மல்ல
தஞ்செய லாலுண்டோ தந்தைவிதி- எஞ்செயலோ
முன்னா ளமைத்த மொழிதவறா தன்னால்
இன்னாள மைப்பதுவு மில்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 1️⃣0️⃣9️⃣ ஞானவெட்டியான் (1544-1553) 👈