திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
பளிங்கு பாஷாண பற்பம்
தரு
பளிங்குபாஷாண பற்பமென்னாண்டையே
பார்க்கவுஞ்சொர்ணபற்பம்.
📖 பாடல் எண்: (1521) 📖
ஏற்றநாலுமிடைவிடாச்சாமமும்
போற்றிமூலப்புளியொருதன்பலம்
சாற்றுமோவிந்துநாதநீராட்டிப்பின்
ஏற்றுவங்கவசமினந்தெரியாமலும்- பளி.
📖 பாடல் எண்: (1522) 📖
காற்றுரவிமுகங்காயவைத்தானபின்
மாற்றுமுப்பின்வகைவகைக்கோர்பலம்
வேற்றிடாவெள்ளெருக்கன் பால்விட்டது
பார்த்துஆட்டிப்பாஷாணத்தின்மேலுமே- பளி.
📖 பாடல் எண்: (1523) 📖
அட்டியில்லாமலதுகவசங்கன
மருணகாந்தியதுமுகம்வீசிட
கட்டிவைத்துக்கனரவிகாய்ந்தபின்
கவசமேழும்மண்சீலையதுசெய்தே- பளி.
📖 பாடல் எண்: (1524) 📖
நெட்டிடுமேபுடஞ்சோடசமாவது
கெட்டியதாய்சுண்ணங்கீர்த்தியதாகுமால்
சொட்டுப்போடுஞ்சுண்ணத்தினால்வேதைகாண்
வெட்டிடுமேவெள்வங்கமும்வெள்ளி- பளி.
📖 பாடல் எண்: (1525) 📖
வெள்வங்கமிருசேரயச்சட்டியில்
கண்விட்டாடக்கனலாக்கினிதீயினால்
பண்பற்றேசலநீரதுபாகமாய்ப்
பாஷாணசுண்ணம்பணவிடைதாக்குமே- பளி.
📖 பாடல் எண்: (1526) 📖
எண்விதப்புகையெட்டுமேகட்டுங்
கண்விதப்பதமாகக்கருதினால்
விண்ணுமண்ணுமிதுக்கெதிரில்லைகாண்
நண்ணுந்தீதுவராதுகாணாண்டையே- பளி.
📖 பாடல் எண்: (1527) 📖
சுத்தபற்பஞ்சுகசன்னிதாந்தரீகஞ்
சூலைபேதிசுரதோசம்சீரணம்
உற்றநோய்களின்வாயுவுடகிராணியும்
உள்மூலமாவதுடல்மூலமெட்டதும்- பளி.
📖 பாடல் எண்: (1528) 📖
வித்தில்மேகம்விப்புருதிகட்டியும்
வெக்கைபுண்கள்வெடிசூலைகுஷ்டமும்
சத்திவிக்கல்சயரோககாசமுந்
தானேபறந்திடுஞ்சங்கைகளில்லையே- பளி.
📖 பாடல் எண்: (1529) 📖
பற்பங்குன்றிபஞ்சதாரைக்கிருதந்தனில்
பாகமதாகவும்பாய்ச்சுங்காலைமாலை
கெற்பநோயோடிகெதிகெட்டுப்புக்கிடுங்
கிலேசமில்லையரைமண்டலமுண்பீராகில்- பளி
📖 பாடல் எண்: (1530) 📖
அற்பநோய்தனக்காவின்பாலன்னமும்
ஆகுஞ்சருக்கரையந்தவிதிப்படி
சர்ப்பவிஷங்கடித்தாலுமேறாதுகாண்
காரசாரசவுகாரமிதாண்டையே- பளி.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 1️⃣0️⃣8️⃣ ஞானவெட்டியான் (1531-1543) 👈