திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
கௌரிபாஷாணச்சுண்ணம்- ஆனந்தக்களிப்பு
தரு
தனனத்தனன தந்தனானா- தான-தனனத்தனனத்தந்தனா தந்தனானா.
📖 பாடல் எண்: (1501) 📖
சீனம்வெங்காரம்பொட்ளுப்பு- சாரஞ்
செய்கைவகைக்குப்பலங்கொண்டுதூளாய்ப்
பானத்திலிட்டுப்பூவில்- பணம்
பற்பமெல்லாமினியந்திடைதாக்கி
ஈனம்வராமற்கடிகை- ரவிமேல்
முகம்வீசிடவைத்துக்கலக்கி
ஊனதுவைக்கொண்டுபார்க்க – கலியாண
முருக்கம்பூவதுக்கொப்பாம்- தன.
📖 பாடல் எண்: (1502) 📖
கண்டதிந்தசெயநீர்காண்- அயங்
கருதியசட்டியில்கெவுரியைத்தாக்கி
விண்டிடவுநாலுசாமம்- மிக
மென்மேல்வன்னியாக்கினையாகத்
தொண்டுசெய்துசுருக்கேற்ற – கெவுரி
துவண்டுஇறுகிவலுத்திடுமாகில்
நின்றதைப்பார்க்கவெளுத்து- சந்திரன்
நிலவுபளிங்குவெண்துய்யநிறந்தான்- தன.
📖 பாடல் எண்: (1503) 📖
வெளுத்திடுங்கௌரியைவாங்கி- துருசி
வேகமென்றசுன்னமுப்புவின்சுண்ணம்
அழுத்திடவகைக்குக்கழஞ்சி- அந்த
அம்பிகைநாதவிந்ததுசலம்விட்டு
குளிர்த்தியாய்க்குழைத்ததின்- மேல்காண்
கொஞ்சங்கொஞ்சமாய்ப்பூசிரவிதன்முகத்தில்
வளர்த்தியேகாய்ந்தபின்கொண்டு- பின்பு
மலப்புளியிருபலமாதுநீர்விட்டே- தன.
📖 பாடல் எண்: (1504) 📖
மயனம்போலாட்டிவழித்து- கெவுரி
மலப்புளிசுன்னங்கவசங்கொடுத்து
வயனமதாய்ரவிவைத்து- மகிழ்ந்
தாறினபின்புமடையன்சுண்ணங்காண்
நியமதாய்ப்பலம்ரெண்டரை- கொண்டினி
நின்றஅமுரியினுப்புமந்திடைகாண்
துயரில்லாமலிரண்டுஞ்சேர்த்துச்- சட்டிச்
சுத்தமாய்கொண்டின்னீரில்பாதி- தன.
📖 பாடல் எண்: (1505) 📖
பாதியதிலிட்டுகெவுரி- நன்றாய்ப்
பாய்ச்சியேபின்னந்தபாதியுமிட்டு
ஆதியாயத்தியேயத்தி- அதின்
மேலொருசட்டியடக்கமாய்மூடி
நீதியாய்ச்சந்துமண்சீலை-நிலை
நிர்ப்பந்தமாகவுநேராய்முடித்து
தோதியடுப்பின்மேலேற்றி- கம
லாக்கினையாகவுஞ்சாமந்தீமாறா- தன.
📖 பாடல் எண்: (1506) 📖
மாறாமலும்வன்னிமூட்டி- அது
மாற்றித்தீயாறினபின்னெடுத்தேதான்
பாராய்கெவுரிசுண்ணத்தை- சந்திரன்
பலிங்குநிறமதுக்கதிதமாகும்
சீராய்ச்செம்புபதினாறு- குகையி
லிட்டுஉருக்குமுகமதனில்குன்றி
நேராய்ப்பாச்சிவிடும்போது- கெவுரி
நிகரில்லாதசெம்பொன்னிதுபத்துமாற்றே- தன.
📖 பாடல் எண்: (1507) 📖
ரசிதம்பத்துக்கொன்றுநாட்டுகுடவன்- நடப்பு
இருபதுக்கொன்றியபத்தாம்
விசித்தமிந்தகெவுரியாட்டு- வேதை
விஸ்தாரமென்றால்விளங்கவொண்ணாது
பசியொருநாளுமில்லை- சென்மப்
பாதகஞ்செய்திடுவோர்க்கென்னவாய்க்கும்
நிசுத்தமசுத்தமறிந்து- பற்பம்
நேராய்ப்பாடுபட்டுநேரறிந்தோரே- தன.
📖 பாடல் எண்: (1508) 📖
நவலோகநவரத்னநீறு- நாத
விந்துநீர்விட்டுக்குழைத்துக்கழஞ்சு
இவைதான்பற்பங்களும்நீறும்- பின்னு
மிரும்புரசிதமுந்தங்கமுநீறும்
அயச்சத்துகளெல்லாநீறும்- கரு
வங்கம்வெள்வங்கமுங்குடவனுநீறும்
சவமாகிலுமெழுந்தோடும் – சத
கோடிசரக்குங்காண்தவளமாமாண்டே – தன.
📖 பாடல் எண்: (1509) 📖
சத்திவிந்துநாதத்தாட்டு- சித்தர்
சமத்தெல்லாங்காரசாரத்தினாட்டு
வெற்றியெய்தும்வேதவாக்கியம்- வீர
சாம்புவமூர்த்திகாண்வெட்டியானாண்டே
சித்தியெய்துஞ்செயமாகும்- சத
தீட்சைபெற்றுமூலந்தெளிந்திடுவோர்கள்
முத்தியெய்துங்கெவுரிசுண்ணம்- பற்ப
முடிந்தது ஆண்டையேமுப்பூவாலாச்சே – தன.
வேறு – விருத்தம்
📖 பாடல் எண்: (1510) 📖
வேலியெனும்பருத்தியின்வே ரஸ்வகெந்தி
கெருடனுமே மிளகுஞ்சுக்கும்
காலியென்ற சீரகமுங் கார்கோலந்
திப்பிலியுங் கடுகு வோமம்
வால்மிளகு பரங்கியுடன் வகைவகையு
மினஞ்சரிதான் சமனாய்க்கொண்டு
சூலியபி ராமிபதம் பணிந்துபல
மிடைகுறைவாய்த் தூக்குவாயே.
📖 பாடல் எண்: (1511) 📖
சூரணமாச் செய்துவடிக் கட்டியதில்
பசுங்கிருதந் தேனுங் கூட்டிக்
காரணமாய்ப் பிசைந்துரவி முகம்படவு
மூன்றுநாள் கருதி மேலும்
வாரணமாம் கழஞ்சியதின் பிரமாணம்
லேகியத்தில் வசனி குன்றிச்
சாரணையாய்க் கெவுரிபற்பங் காலையொடு
மாலையுமே சாற்று வீரே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (1512) 📖
சீராய்ச் செழுங்கெவுரி சேர்த்துவுண்ணலேகியத்தில்
தீராய ரைமண்டலஞ் செய்கைநிலை யானபின்
பாராய் பரங்கியொடு பல்லரணை நாவரணை
மாறிவிடு நோய்பிணிகள் மண்டையிடிபோமதுவே.
📖 பாடல் எண்: (1513) 📖
மண்டையிடி கண்வலியு மார்வலிகைகால்குடைச்சல்
குண்டிவலி குன்மமெட்டுங் குடல்வாதமேகிடுங்காண்
அண்டையிடி வாழையரை யாப்புசீலையோடுபுண்கள்
கண்டமணி மாலையொடு கர்ணிகம்விட்டேகிடுமே.
கலித்துறை
📖 பாடல் எண்: (1514) 📖
விட்டேகு நோய்கள் கோடான கோடிவினைப்பயனும்
கெட்டேக டல்புக்கி சடலம்விட் டேகுங்கெவுரியினால்
கிட்டாது சன்னி சுரமேழு தோஷங் கிறுகிறுப்புத்
தொட்டாலும் பற்பம் விட்டேகு மென்றுசொல்கின்றேனே.
📖 பாடல் எண்: (1515) 📖
மதுராஜ மேகம் வரும்புண்கள் வாய்வு வாதபித்தங்
கெதியில்லை யென்று கர்மாந் தரநோய்கள்கிடுகிடுத்து
மதிசந்திர சோதி வாருதி பான மதினளவால்
சதிசெய் யுங்கால னெமனென்ற அஸ்திரந்தலைப்படுமே.
வெண்பா
📖 பாடல் எண்: (1516) 📖
இஞ்சி சுரசத்தி லிடுங்குன்றி பற்பமது
அஞ்சிப் பயந்தோடு மாறுசன்னி- இஞ்சி
பித்தசுரந் தேனிலிடும் பேசாம லோடிவிடுங்
சத்தேழு தோஷமும்போந் தான்.
பளிங்கு பாஷாண பற்பம்
தரு
பளிங்குபாஷாண பற்பமென்னாண்டையே
பார்க்கவுஞ்சொர்ணபற்பம்.
📖 பாடல் எண்: (1517) 📖
விளங்கலாகும்வெள்ளைவெண்மதிசந்திரன்
கல்மசங்களில்லாக்கண்பார்த்தொருபலம்
துலங்குந்துய்யநிறசுந்தரமாகிடுங்
களங்கமாகும்வெள்ளைப்பாஷாணங்கட்டுமே-பளி.
📖 பாடல் எண்: (1518) 📖
கருவில்மூலப்புளிகண்டதுமோரிடை
சுரூபசாரநீர்தூக்கிடுநாலிடை
புருவமாய்க்கம்பிஉப்புவெங்காரமும்
புரசனுப்புஉருவியுப்பாண்டையே- பளி.
📖 பாடல் எண்: (1519) 📖
பூனைவணங்கிப்புகழிந்துவுப்பது
மீனமிதுசரிபாகஞ்சமனதும்
தானேமூலப்புளிநீருறவாக்கியே
சாருமூன்றுதண்ணீர்போலாகிடும்- பளி.
📖 பாடல் எண்: (1520) 📖
தேனேசெயனீரினில்சேருமுப்பூவதின்
மானேகழஞ்சிடையதிலிட்டுத்தாக்கியே
நானோ அயச்சட்டிதன்னில்பாஷாணமும்
யானும்வைத்துச்செயநீர்சுருக்கானதே- பளி.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : June 2025
Next Post
👉 1️⃣0️⃣7️⃣ ஞானவெட்டியான் (1521-1530) 👈