திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
(வேறு – கவி)
📖 பாடல் எண்: (1046) 📖
ஓடுகுகை சீலைவயல் காடுகளின் தோறும்
நீடுமிரு வஞ்சுகர கால்களதின் வாறும்
தேடுநில மண்வளைகல் தோறுமெடு மூடி
கூடுகுகை சந்துபிசைந் தாடும்ரவி சூடே.
📖 பாடல் எண்: (1047) 📖
கொல்லனுலை யில்லம டக்கமிக வூது
வெல்லலாமி தற்குவித மூன்றுவிசை யேற்று
வல்லமையி தற்குவடி வானநவ ரத்னம்
சொல்லவெளி தோவதனின் சூட்சமறி வாரோ.
வெண்பா
📖 பாடல் எண்: (1048) 📖
சூக்ஷமிதுக் கின்னஞ் சுகாதீதமாய்ப் போசனங்கொள்
வாசமலர் வீசும்வச்சிர தேகம்- சூக்ஷமிது
பச்சைமா ணிக்கம் பருமணிபோ லுண்டையதாய்
வைச்சபொரு ளாண்டே வயசு.
📖 பாடல் எண்: (1049) 📖
பச்சையிது ரத்னம் பட்டவெளிப் பிரகாசம்
சத்துஎம ரசமிதுகா ணாண்டே- சத்ததுவும்
ஆற்றது காண்களிம்பு அறுபத்து நாலுமது
சேத்ததுகா ணமுரியினால் சீர்.
வேறு- கவி
📖 பாடல் எண்: (1050) 📖
சத்துநவ ரத்னமிது எத்ததுமு டைத்து
வித்துகுரு சுன்னமது வீரமணி கூட்டி
யெத்தது மதிப்பிறையின் விந்துநீரி லாட்டி
ஒத்தொரு விநாடியினி லெத்தகுகை யாண்டே.
📖 பாடல் எண்: (1051) 📖
ஊதியெலி காரமிட வூதவுரு குங்காண்
வீதமொரு கிண்ணிகுகை யேழுமேழு கூட்டி
வாதிகரு மூடிகரு மண்ணதுவி னாலும்
தாதுவடி கட்டிவருஞ் சத்துமிது வாண்டே.
📖 பாடல் எண்: (1052) 📖
கிண்ணமதில் சூதமொரு சேருவதி லூட்டி
வண்ணதிரு மேனிரசம் வாங்கியதில் சேர்த்துக்
கொண்ணைசரக் காமதுவி னாலுங்கடை யச்சேர்
வெண்ணிறம தாகிரச வெண்ணெயது வாமே.
📖 பாடல் எண்: (1053) 📖
வெண்ணெயில்வெங்காரமிடவிராகனிடையூட்டிக்
கண்ணின்மணிபோலவுங்கருங்குகையிலிட்டுக்
கிண்ணியதுவேகம்படரத்னமிதுதங்கம்
மண்ணினுடகரவலரைவாள்பகர்வாளாண்டே.
📖 பாடல் எண்: (1054) 📖
மூசையிலடக்கியுமிமேலுங்கரிதாக்கி
ஓசையிடவூதியிடுஉண்மையிதுகண்டாய்
வாசமலரம்பிகைவாலாம்பிகையைப்போற்றி
வாதரசசூதமணிவாலையருளாண்டே.
📖 பாடல் எண்: (1055) 📖
இம்மணியும்பாலிலிடஎண்விதநீர்வாங்கும்
அம்பலர்கடாக்ஷமதுளாயிரத்தெண்மாற்று
சம்புதிருவள்ளுசதாசாம்பவனுமாகில்
அம்புவியில்வாதிகளறிந்துவருகாணேன்.
📖 பாடல் எண்: (1056) 📖
காரியெனும்வங்கங்கருவங்கமதுசேர்தான்
வாரியயச்சட்டியிடுவட்டியதுமூடி
நாரியர்சுரோணிதமதாகுமுருவீரின்
சீரியரசத்தையிடுசேருக்கொருபலமே.
வேறு
📖 பாடல் எண்: (1057) 📖
வங்கசல நீரருவி யூதிவிட வுருகும்
வாங்கும்ரச சூதமணி வாலைரச மாகும்
ஓங்குமுனை குப்பியிலு றுத்திர வாதி
ஒகோபுவ னங்கள்மய லோகவய மாண்டே
யெங்குமதி தீபவொளி சூழுமுனை மீதில்
ஐங்கரன் பதக்கமல செங்கதிர் விலாச
மங்களமி வைதொழிலு ரைத்தபரி வேதை
தங்கரச வங்கமிது சாக்சியறி தாண்டே.
📖 பாடல் எண்: (1058) 📖
வெண்மதிவெண் வங்கரச மேவுமயத் தாடி
வித்துஒரு சேருருக வெண்சாரணை மூலி
உண்ணும்ரச மோர்பலம் தாகவிடு வீர்காண்
ஓடுருக ஆடிசல மோடியது பாயும்
கண்ணும்ரச வாலையது சூதமணி போமோ
டண்ணுவிடுஞ் சுத்தசல வெள்வங்கநீ றாலும்
கொண்ணுவிடு மேகுளிகை கோடிபரி வேதை
குப்பியில டக்கிரசங் கொண்டிடவுஞ் செய்யே.
📖 பாடல் எண்: (1059) 📖
இந்தரச மாமதுவு மேமரச மாகும்
அந்தரச தேய்வுஇடை யயமதிரு பத்தும்
இந்தகுகை தன்னிலது நீரதுரோ லாகில்
அந்தமதி வங்கமோ வராகனிடை பூட்டே.
📖 பாடல் எண்: (1060) 📖
ஊட்டியுமி யூதியெடு பத்தரையு மாகும்
ஓடுமிர சிதமெனு மொண்ணரையு மாகும்
காட்டியவெண் வங்கரச முப்பதொரு வஞ்சும்
காட்டையில் வராகனிடை கனகமது வாண்டே
ஏட்டினில்வி திப்பதனு போகியரு ளாலும்
எட்டியிது பத்தரையு மேருமய மாகும்
நீட்டிடுங்கா ரீயசல சூதரச வேதை
நாட்டினிலு முண்டுரச நன்பரிசப் புகையே.
📖 பாடல் எண்: (1061) 📖
புகைக்குஉமி சூதரச வங்கமிது கோரு
பொன்மயம் வராகனிடை போடுங்கரு நீரு
துகைக்குப்பதி னாயிரம ணங்குஇடை தேய்வு
சூட்சமிது சூதமிது சூதமிது சொன்னேன்
நகைக்கரச வாதமிதுக் கேவலது செய்யும்
ராஜர்களு நாடுமகிழ் நாமிவர்க்க வைத்த
வகைக்குநவ லோகபரி தங்கமய மாகும்
புகைக்குநிக ருண்டோசெய பூபதிகா னாண்டே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 7️⃣2️⃣ ஞானவெட்டியான் (1062-1072) 👈