திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
வேறு
📖 பாடல் எண்: (1062) 📖
கிண்ணமதி லன்னமொடு ஆவினமிர் தங்கள்
அன்னமது சுவையுமொடு அதிதவகை யெல்லாம்
இன்னவகை யுள்ளசட மென்றனநிற மாகும்
வர்னபரி தங்கவொளி சொன்னேன்தொழிலாண்டே.
📖 பாடல் எண்: (1063) 📖
அமுரியிதி லுண்ணசட மாக்கையழி யாது
அமிர்தவெளி மதியுங்கதிர் வழலையதி னாலும்
அமிர்தரச பானமுறு காயம்பெல மாகும்
அமுரிரவி மதிதரச வேதையொடு வாமே.
📖 பாடல் எண்: (1064) 📖
கற்பமதி லுண்ணசட சொற்பமது வல்ல
விற்பகவி னோதரச பானதி னாலும்
உற்பகந ரம்புதச நாடிவலு வாகும்
இப்பொருள றிந்தவர்கள் கற்பனைசெய் வாரே.
📖 பாடல் எண்: (1065) 📖
அக்கினிமி குந்துவள ரந்தமது கோடி
திக்கினில்சித் தாதிகளுஞ் செய்கையுணர் வாரோ
கைக்கினியி தற்குமணி மந்திரம றிந்தால்
அக்கரையுந் தாண்டியனுக் கிரகம்பெறு வாரே.
📖 பாடல் எண்: (1066) 📖
முப்புவும றிந்துவுரை தப்புமோகை பாகம்
இப்படியு டற்குறியுஞ் செப்பிடுஞ் சாஸ்திரம்
சொற்படியு ரைத்ததிரு வள்ளுவனு ணர்ந்த
இப்புவியி லும்மறிவ ரெந்தனுரை யாண்டே.
வேறு – கவி
📖 பாடல் எண்: (1067) 📖
ஆட லாங்கட லுப்புவி னால்ரசம்
காடெ லாமுடல் காந்த மலரினால்
ஓடெ லாம்ரச வாதிகள் தேடினும்
வீடெ லாம்வெளி வேதைக் குருவதே.
📖 பாடல் எண்: (1068) 📖
உப்பென் றாலுரு வானஉப் பேதுகாண்
செப்பி னார்தெட்ச ணாய னருளினால்
கைப்பு மாறிக் கடல்நுரை கட்டியும்
வைப்பு காண்கடல் வாரிக்கல் லுப்பதே.
📖 பாடல் எண்: (1069) 📖
காந்த மாமலர்க் காட்டினி லுப்புகாண்
ஆய்ந்து பார்க்க அடிமூல சுன்னமாம்
மாய்ந்து மாய்ந்துவ ரும்புளி மாறினால்
தோய்ந்து அப்புவுந் தோய்ந்தது சொக்குமே.
📖 பாடல் எண்: (1070) 📖
அமுரி யுப்புமப் பூவுங் கடசலம்
அமுரி யுப்புமடி மூலம் புக்கினால்
அமுரி யுப்புமம் மண்ணதில் பூர்க்குமாம்
அமுரி மூல மதிதசுன் னங்களே.
📖 பாடல் எண்: (1071) 📖
காந்த மாமலர் கதிரெனுஞ் சூரியன்
ஆய்ந்து பாரு மதுபுளி மண்ணுதான்
சேர்ந்து தான்கட லுப்புவுங் கூடினால்
ஈந்து தானு மிதுநிக ரில்லையே.
📖 பாடல் எண்: (1072) 📖
காடு காடுகா டென்றா லறிவரோ
காடு தான்கரு கண்ட மகத்துகள்
வீடு வீடுவீடென் றாலுன்னுக் குள்ளே
நாடு நாடெலாம் நாடித் திரிவதே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 7️⃣3️⃣ ஞானவெட்டியான் (1073-1082) 👈