திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
விருத்தம்
📖 பாடல் எண்: (1031) 📖
சத்துகளின் சித்துஅறு பத்து நாலும்
தமிழ்முத்துக் கொப்பான வெள்ளே டில்லை
கற்றவர்கள் பழிப்பவரோ கவிக்கொவ் வாதால்
காரணத்தை யறியார்காண் மற்றப் பேரும்
முத்தர்நவ சித்தமற் றுள்ளோ ரெல்லாம்
முனிவனெனப் புகழ்ந்தேத்து முதல்வ ரான
வித்துவா னாயுதித்தாற் கிடைத்த தேது
விந்துத்தோ னவர்செயல்வாழ் விதித்த தாண்டே.
கொச்சகம்
📖 பாடல் எண்: (1032) 📖
ராஜரத்தின ரதிதான் ரத்தினத்தில்கோ மேதகமாம்
பேசவரி தோபெரிதோ பேருலகி லாரறிவார்
தேசமதி லுமனந்தஞ் சென்னிதனிலும்பலங்கொண்
டாசைவைத்துப் பாடுபட்டா லாண்டேயரைப்பதுவே.
📖 பாடல் எண்: (1033) 📖
பாரிலிருந் தேயுற்ற பண்டிதரே யுங்கள் புத்தி
தாரிகளி லேமயங்கி தாபந்திரி யப்படவோ
நாரியர்தன் கையிலகப் பட்டபுலி பூனையைப்போல்
ஊரி லிருக்குநரி யுபாயமதாய் வாழ்ந்திடுமே.
விருத்தம்
📖 பாடல் எண்: (1034) 📖
கலைபரவு மம்பிகையே வாலை தேவி
கருணையெனக் கருள்புரிந்த காட்சி யாலும்
வலுத்தன்னிக் கலுவமதில் மருவு முப்பு
வகையதனி லொருபலங்கொண் டமுரி யூட்டி
நிலைத்துவிடு மயனமெழு கதுபா கத்தில்
நிகழாமல் சதுரடையாய் நிகழ்த்தி வாலை
கலையதுவுமுருகிபனி ரெண்டு மோடில்
காந்தியொழி படவும்ரவி கடிச தாண்டே.
கலித்துறை
📖 பாடல் எண்: (1035) 📖
கெடியான வட்டி கனிலூட்டி மேவிமேல் மூடியதும்
அடியான சீலை வழுவேழு செய்து அருணன்முகம்
படவும் படமொரு அஞ்சுபத் தோர்புட மாறியபின்
தொடவு மதீத கோமேத கச்சத்து சோதிப்பதே.
📖 பாடல் எண்: (1036) 📖
மரகத வாலைப் பரிபூர ணத்தின் மலரடியில்
வரமே யளித்த குருமுனி பாத மடிதொழுது
நிரமே மரகதம் பலமொன்று பார்வை நிகந்தருவீர்
சரமே வியபதங் கலுவத் தினிலிட்டுத் தாபியுமே.
📖 பாடல் எண்: (1037) 📖
சற்குரு விந்து நாதமுங் கூடிச் சருவினதால்
வற்கமும் பொருளின் பணவிடை கூட்டி மதியமிர்தம்
முற்க மதாக விருசாம மாட்டி முன்பதமாய்
உற்கந்த விர்ந்து சதுரடை செய்து உலர்த்திடுமே.
📖 பாடல் எண்: (1038) 📖
கதிர்கோடி வாலை ரவிசூடு பட்டுக் கடிசதுவாம்
பதிமேவி வட்டி மேல்மூடி செய்து பாகமதாய்
மதியேழு சீலைமண்பூசிப் பின்பு வைத்துப்பதம்
மிதமேவு வைம்ப தெருச்சூடி யேவன்னி வீசவுமே.
வெண்பா
📖 பாடல் எண்: (1039) 📖
மரகத மாஞ்சற்று வானி லெழுமில்லை
திரமிதுகாண் பதனமிது செப்பினோம்-மரகதத்தில்
ஊரினி லுண்டாய்ந்து உத்தசெய்தி பாடுபடச்
சாரிவர லாங்கடல்சூழ் தான்.
📖 பாடல் எண்: (1040) 📖
மாலின்திரு வாலிலகு மாதவத்தோர் கண்டறிந்த
ஆலிலைமேல் பள்ளிகொள்ளு மாயுன்- மாலின்திரு
அவ்வெழுத்தும் பேசு மறிவா லறிவறியும்
உவ்வெழுத்தால் வாய்மூடு வோம்.
📖 பாடல் எண்: (1041) 📖
நீலமா ணிக்கமது நின்பல மொன்றுவெடை
வாலைகுரு வெடைபணமாய் வாங்கி- நீலமணி
புரையில்லாக் கலுவமது பூட்டிவிருந் துச்சூட்டி
உரையமெழு சாமு முணர்.
📖 பாடல் எண்: (1042) 📖
மயன மெழுகு மதியமிர்த நீரூட்டி
வயதுகுறை யாதிடைக்கு வன்னி- மயனமெழு
சதிரிடைபோ லிலசூந் தனிக்கதிரோன் தன்முகத்தில்
பயமதுகாண் வாராது பார்.
📖 பாடல் எண்: (1043) 📖
மண்வயிர வட்டி வைத்துமேல் வட்டியதும்
நண்பதிதண் சீலை நாட்டி- மண்வயிர
ரவியில் முகம்படவு நன்னயமா யைம்பதெரு
திரவியமா வன்னியதுஞ் சேர்.
📖 பாடல் எண்: (1044) 📖
மாறிகன லாற்றி மாறிசத்து நீலமணி
கூறுமா ணிக்கமதுக் கொவ்வாது- மாறுகனல்
விந்துநவ சத்து மிகவு மொருசுரூபம்
வைத்துகுரு பணவிடைகா ணாண்டே.
📖 பாடல் எண்: (1045) 📖
அமுரியுடன் றேங்கு அதுபத்துக் கொன்றுயிடை
கமுரியுட னாட்டிக் கருங்குகையில்- அமுரியுடன்
கதவான சத்ததற்குக் கருமயம் ரேசித்துப்
பதனங்கு கைமுக்கால் பார்.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 7️⃣1️⃣ ஞானவெட்டியான் (1046-1061) 👈