திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
கற்பசாதனை
தரு
அதிவிதகாயகற்பமருளுவேனாண்டே- சரஸ்வதி
அமிர்தசந்திரபுஷ்கரணிதீர்த்தமுண்டே.
📖 பாடல் எண்: (0756) 📖
மதிபொழிந்தனுக்கிரகபேரின்பத்தேன்மதுரம்-வஸ்து
வாருதிபானம்வாலாம்பிகையினருளமிர்தம்- சுழி
துதிபெருமூலாதாரத்திலுங்கருவின்பம்- நாத
சுக்கிலவிந்துசுரோணிதமும்பேரின்பமதி
விதியிதுகோசபீசமும்விந்துநாதம்- சூத
விந்ததுவும்கெந்திநாதமீதால்ரசவாதம்புகழ்
பேதிப்பதுமறுபத்துநாலுபேரைக்கட்டும்- வாசி
பேரண்டஞ்சுற்றியுமெட்டுமதிபதியாட்டம்- அதி.
📖 பாடல் எண்: (0757) 📖
நாற்பதுக்குள் கற்பமுண்டிடுவோர்க்கென்னபேதம்-வெகு
நாள்கள்கழிந்துநரைத்ததினால்சொல்லும்பேதம்-ஆனால்
கற்பத்தினருளமிர்தமேயுண்டுமறந்தால்- செட
அற்பமதாகியழிந்திடுமுகங்குறைந்தால்- இன்பம்
சொற்பமென்றெண்ணிடுங்கற்பங்கொண்டழிந்தோர்கோடி- சூக்ஷ
சுழிமுனையறியாதென்னமாந்தர்கள்பேடி-யுடல்
உற்பகமாசிபடாலிருந்தவர்க்கெய்தும்- தேக
மூத்தைக்குழியிலடிபட்டபேர்க்கென்னமுழுதும்-அதி.
📖 பாடல் எண்: (0758) 📖
விந்ததிசாரமுமப்புநதிகங்கைசாரை- மதி
மேவியசந்திரபுஷ்கரணியூசிநீரை- ரோம
இந்திரியமிதுவாரியமுரிகார்மேகம்- ஏழு
கடலுவரறுசுவையினில்வரும்வேகம்- அருள்
தந்தைவிதிகருநீர்பதினாறுடன்கூடி- சல
சாகரமாவதெண்சாணுடலுற்பவந்தேடிக்- கியான
மந்திரபஞ்சாக்ஷரமெனுமக்ஷரமுமாகும்- கற்ப
மாமதுவின்பத்தேனெனுமாமலர்சூழும்- அதி.
📖 பாடல் எண்: (0759) 📖
அதிகாரத்தினாலன்பத்தோரக்ஷரமிதுபானம் உடல்
ஆத்துமாநீர்மேற்குமிழியிடுமிதுவானம்- ஆசை
மகாரத்தினால்செகமாதிதமுமயல்மோகம்- மத
மாசசரியகாமக்குரோதத்தினால்சுகபோகம்-வினை
யகாரத்தினாலெமனிப்படிபாசக்கயிறுகொண்-டுயிர்
எழுந்தெண்சாணுடலழிந்துபோய்விடுமாகில்- சனி
விகாரத்தினாலுமழிந்தேகபுவனமும்வாடி- மயல்
வின்பததினால்சுடுகாடுமரணமுந்தேடி- அதி.
📖 பாடல் எண்: (0760) 📖
அண்டசராசரபுவனமேயருள்படைத்தேன்- புகழ்
ஆதியனாதியறுபத்தினால்தீட்சைவிதித்தேன்- கரு
கண்டேனமுரியேகாக்ஷரமென்றதினாலும்காயஞ்-சித்திய
தாங்கற்பதேகவஜீகரத்தாலும்அது- நின்று
ஓராண்டுகொண்டற்புதமாய்ச்சரமாறி- யானும்
நிர்ப்பந்தமாய் வயிராக்கியமாகவுந்தேறு- வாரி
யுண்டேனமிர்தத்தைக்காலையுமாலைவிடாமல்-மித
மோடிடுஞ்சாரையதுநடுமையங்கோடாமல்- அதி.
📖 பாடல் எண்: (0761) 📖
துய்யவெண்சாரைமுன்பின்னகற்றிநடுமையல்
துதிசெய்துசிவயநமஓங்கிலியெனுமபையம்- கற்ப
மையமில்லாமலடிக்கடிமாறியில்லத்தில்- எந்தன்
ஆத்துமாவீறிவிளங்கமென்மேலுமகத்தில்-தொழில்
வையகத்தோரிணங்காமல்தறிநெய்துமாறி- உடல்
வயிறுகும்பிகடைத்தேறும்படி செய்துமீறியானும்
செய்விதத்தால்பசியாறியொருபோதுமன்னன்-எந்தன்
ஸ்திரீயுடனேசீஷனாகவிருவருமின்னம்- அதி.
📖 பாடல் எண்: (0762) 📖
அகமில்லாமலவனிசஞ்சாரஞ்செய்யாமல்- தினம்
அமுரியேவணைஅகாரம்பொய்யாமல்கற்பம்
சுகஜீகரவின் பமதாகப்பேரின்பம்- மேலுஞ்
சுத்தஜெலம்செலவானதுபோகவுமமிர்தம்- நதி
பாகமாயோடுஞ்சமுத்திரநீரொருபாண்டம்- அது
பானமதைவெகுபத்திரமாகப்பிர்மாண்டம்- இது
ஏகவஸ்துவெனும்வன்னியிட்டெரித்துப்பார்-அன்னம்
மிகவுண்ணும்பதமேலுங்கறிவகைக்கூட்டும்- அதி.
📖 பாடல் எண்: (0763) 📖
இனமதாய்வருஞ்சுத்தசலப்பனிநீர்தான்
இடர்எங்கும்விடாமல்வெகுபதனமறுவகையைக்-கற்பங்
கனம்பொருந்தியகாயகற்பமுபவாசம்- செடங்
காந்திசுயம்புச்சுகாதீதசோதிப்பிரகாசம- பானம்
தினந்தினமறவாமல்சரமாரியுண்டேன்- உடல்
செங்கனலால்சிவந்தெழுந்தசூரியன்கண்டேன்-தேக
மனம்புத்திசித்தமாண்மையும்வெளுத்துநீறாச்சே-கோல
மாதுமரபதிசாரையறுபதால்போச்சே- அதி.
கொச்சகம்
📖 பாடல் எண்: (0764) 📖
வாரிபுகழ் மாமதுர வஸ்துவெனும் பானமதால்
வீரியமென் றேயிருந்த விந்துபா ழாச்சுதுகாண்
நாரியர்தன் மாய்கைவிட்டு நான்பிரிந்தேனேதளவால்
மாரிபொழிந் தேயமிர்த வாலைரச முண்டேனே.
📖 பாடல் எண்: (0765) 📖
மண்டலமெ லாம்புகழு மந்திரபஞ் சாட்சரத்தை
அண்டமெல்லாஞ் சோதனைசெய் தாகிலுமேயாரறிவார்
நின்றனுல காகிதமு நிராமயத்தைக் காணாமல்
கண்டேன்குறுமுனியால் காயகற்பங்கொண்டேனே.
📖 பாடல் எண்: (0766) 📖
உப்பதுவு மப்புமய மோகோதிரு மாலின்மயம்
அப்புவினால் முப்பாழ மைத்ததுகாண் சுன்னமதால்
செப்பிடிலுங் காயகற்பஞ் சென்றதுமோராண்டுவரை
இப்பொருளைப் பத்திரமா யிச்சையுடனுண்டேனே.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Next Post
👉 5️⃣0️⃣ ஞானவெட்டியான் (767-781) 👈