பிறவியின் நோக்கம் The purpose of birth
🌹 நாம் அனைவரும் இறைவனுடைய படைப்பு.
🌹 நம்மை சுற்றியுள்ள அனைத்தும் இறைவனுடைய படைப்புகள் தான்.
🌹 இந்தப் படைப்புகள் படைக்கப்பட்டதற்கான நோக்கமே கொண்டாட்டமாக இருப்பதற்காக தான்.
🌹 பிறப்பின் நோக்கம் என்பது,
🌹 இன்பமாக இருப்பது,
🌹 மகிழ்ச்சியாக இருப்பது,
🌹 ஆனந்தமாக இருப்பது,
🌹 கொண்டாட்டமாக இருப்பது,
🌹 அதனால், நிறைவாக சாப்பிட வேண்டும்.
🌹 ஆணாக இருந்தால் பெண்ணை கொண்டாட வேண்டும்.
🌹 பெண்ணாக இருந்தால் ஆணை கொண்டாட வேண்டும்.
🌹 எவ்வளவு தூரம் மகிழ்ச்சியாக இருக்க முடியுமோ அவ்வளவு தூரம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
🌹நீங்கள் கொண்டாட்டமாக இருக்கும்போது தான் உங்களுக்கு நன்றி உணர்வே வரும்.
🌹 வாழ்க்கையில் இவ்வளவு விசேஷமாக இருக்கிறதே,
🌹 இதையெல்லாம் படைத்தது எது?
🌹 அது எப்படி இருக்கிறது?
🌹 என்று, நன்றி சொல்வதற்காக இறைவன் பக்கம் திருப்பும் போது தான் உங்களுக்கு பக்தியே ஆரம்பிக்கிறது.
🌹 மற்றபடி நீங்கள் பக்தி என்ற பெயரில் செய்து ஒன்னும் மத வழிபாடும், மதச் சடங்குகளும் சாதாரண கூத்து தான்.
🌹 அடுத்தவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக நடிப்பதுதான்.
🌹 அவைகள் போதுமானது கிடையாது.
🌹 மற்ற ஜீவன்களை விட மனிதருக்கு மட்டும் விசேஷத்தை அறிவு இருப்பதற்கான காரணம்,
🌹 நம்மால் சிந்திக்க முடியும் சிந்தித்து இந்த பிறவி நோக்கத்தை முடித்துக் கொள்ள முடியும்.
🌹 இது ஒரு விளையாட்டு தான்.
🌹 நாம் விளையாடிக் கொண்டே தான் இருக்கிறோம்.
🌹 இது போதும் என்று நிறைவு அடைகிறீர்கள்.
🌹 அதனால் பிறவியை (பிறவியின் நோக்கத்தை) முடித்துக் கொள்கிறீர்கள்.
🌹 அதாவது வாழ்ந்து முடித்தவுடன் திருப்தி ஆகிவிடும்.
🌹 சாப்பிடும் போதே திருப்தியாக சாப்பிட்டு விட்டால் போதும் என்ற முடிவுக்கு வந்து விடுவீர்கள்.
🌹 அதில் ஏதாவது குறை இருந்தால், அடுத்த முறை சாப்பிட்டு அந்தக் குறையை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று நினைப்பீர்கள்.
🌹 அதாவது வயிறு நிறைந்தாலும், மனம் திருப்தியாக வில்லை என்றால் அதற்காகவே மீண்டும் சாப்பிடும் போல,
🌹 வாழ்க்கையை சரியாக வாழவில்லை என்றால் சரியாக அனுபவிக்கவில்லை என்றால் அதற்காகவே பிறப்பு எடுக்க தான் செய்வீர்கள்.
🌹 பிறப்பின் நோக்கத்தை அனுபவித்து திருப்தி அடைய வேண்டும் என்றால்,
🌹 பொருள் சார்ந்த அனுபவங்களால் திருப்தி அடைவதை விட,
🌹 இந்த உடலுக்கான அனுபவத்தை (யோகத்தை) அனுபவிக்கும் போது மனம் முழு திருப்தி அடைகிறது.
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
✍🏻 Content Prepared on : March 2025