திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த ஞான வெட்டியான் – 1500
ஆயுர்விர்த்தி
வயதுசொல்லுகிறேன் நூறாண்டுக்கும்
வயதுசொல்லுகிறேன்- வயது.
📖 பாடல் எண்: (0221) 📖
கூறியவாய்வுபத்தங்குலம் பாய்ந்து
குறைந்துநாலாங்குலமோடிக் கழிந்திடில்
மாறியமைந்தர்க்கு வயதெனுங்கொஞ்சம்
வகுத்தேன் புவியிலுரைத்தேன்கா னாண்டையே
தேறியபானனுதானனிடத்திற் சிநேகஞ்செய்து
எட்டங்குலம் பாய்ந்திடில்
சீறுமஞ்சங்குலமோடிக் கழிந்தபின்
செய்வினைதந்தையால்பை வினையாட்டையே- வயது .
📖 பாடல் எண்: (0222) 📖
தேய்வினில்வாய்வுவசைகின்ற போதினில்
சேர்ந்தொருநாழி பத்தங்குலமோடிடில்
மெய்யுடல்விந்து நாதமுங்கூடினால்
ஆணல்லவயது ஆறுபத்தாண்டையே
பாயும்பிராணன் பானனுஞ்சேர்ந்திடில்
பரவியேவிந்துவு நாதந்தொடங்கிடில்
மாயுங்கருவி வெவ்வேறதுவாகிப்பின்
மைந்தர்க்குப்பாதி மரணம்வந்தெய்துமே- வயது.
📖 பாடல் எண்: (0223) 📖
சொல்லும்பத்தங்குலமோடி யெட்டங்குலந்
தொக்கிச்சுழித்துச் சிதறிக்கடிந்திடில்
மெல்லின்கெர்ப்பந் தரித்திடும்போ தினில்
விரைந்துவயது குறைந்திடுமாண்டையே
கொல்லல்செய்பிராணவாயு மெட்டங்குலம்
கூறிரண்டங்குலந் தூறியேபாய்ந்திடில்
வல்லியின்கெர்ப்பம் வயிறிடிகண்டுமயங்கி
வயதுதியங்கிடுமாண்டையே- வயது.
📖 பாடல் எண்: (0224) 📖
வாய்வினில்வாய்வு அசைந்துறவாடிப்பின்
நாழிகைமுக்காலொன்பதங்குலம் பாய்ந்திடில்
தாயினீர்நாதமும்விந்துந் தரித்திடில்
தப்பாதுவயதுமுப்பாதா மாண்டையே
பாய்ந்திடும்பிராணன் வியானனுங்கூடிப்பின்
பாங்காய்நாதவிந்திலாறு முண்டங்குலம்
தாழ்ந்துநெட்டிட்டுக் கருவிலமைப்பதுந்தான்
வயதுமுப்பத்தஞ்செனுமாண்டையே- வயது.
📖 பாடல் எண்: (0225) 📖
ஆகாசம் வாய்வுதசைந்துறவாகிடி
லரைநாழிவிந்துரெண்டங்குலம் பாய்ந்திடில்
சாகாதுநாதமும் விந்துந்தரித்திடுஞ்
சார்வாகுவயது முப்பத்தெட்டாண்டையே
வேதமதாகியகூர்மன் கிரிகரன்
விந்துநாதத்தினில் மிகுத்தெழுவங்குலம்
வாகமதாகியரை நாழிகைபின்பு
வளர்ந்துபாய்ந்திடில் வயதுகாணாற்பதே- வயது.
📖 பாடல் எண்: (0226) 📖
அக்கினியாகிய சுழியின்முனைதன்னி
லடர்ந்துவாய்வு அரையங்குலமோடிடில்
சிக்கியநாதமும் விந்துந்தரித்திடுஞ்
சிதறிக்கருவிலுறைந்திடு மாண்டையே
தக்கபுகழுஞ் சுழிமுனைதன்னில்
தயவாகவாய்வு மிணங்கியபோதினில்
பக்கஞ் சிதறியேபாய்ந்திடிலும்பின்பு
பாகமாய் விந்துகரைந்திடுமாண்டையே- வயது.
📖 பாடல் எண்: (0227) 📖
ஓடியேவாய்வதுடனே விரைந்திடி லோமென்ற
நாதமும்விந்துந்தரித்திடில்
கூடிய திங்களொண்ணரையதுக்குள்
குழவிகரைந்து வெளியாகுமாண்டையே
நாடியபக்க நால்வாயுவுஞ்சேர்ந்திடில்
நாதமும்விந்து நயந்ததுபோகமாய்
மோடியேநின்று மிகவுந்தரித்திடில்
விழலாய்க்கரைந்து விழுந்திடுமாண்டையே- வயது .
📖 பாடல் எண்: (0228) 📖
திக்கெல்லாம்வாயுவு சிதறிநடக்கையில்
செப்பரிய நாதம்விந்துந்தரித்திடில்
கக்கல்திருவாயுவு திங்கள்மூன்றுக்குள்ளே
கருவிகரைந்து வெளியாகுமாண்டையே
சக்கரம்போலுஞ் சுழன்றிடில்வாயுவுந்
தானிறைந்தோடிடில்நா தவிந்தாவதும்
பக்கமுதைந்துகெர்ப்பங் கரைந்தங்ஙளே
பார்க்கத்திங்கள் நாளில்மார்க்கமீதாண்டையே- வயது .
📖 பாடல் எண்: (0229) 📖
உந்தியில்வாயுவுச ந்துநெட்டிட்டிடி
லோகங்கார நாதமும்விந்துந்தரித்திடில்
சந்தேகமில்லைதிங்களொன் றில்கெர்ப்பமுங்
கண்ணீராய்க்கரைந்து வெண்ணீராகுமாண்டையே
கூறியவாயுவுங்குறுக்கே சுழன்றிடில்
கொள்கையநாதமும்விந்து முதித்திடில்
மாறிடுமைந்தனீரொன் பதுதிங்களில்
மாளப்பிறந்தினிமாய்ந்திடு மாண்டையே- வயது.
📖 பாடல் எண்: (0230) 📖
தூறியகுண்டலி வட்டத்தினுள்ளே
சுருத்திடுவாயுவு முதித்திடும்போதினில்
வேறில்லைகெரப்பந் தரித்துப்பிறந்தபின்
மெய்யாய்த்திங்களொன்றுய்யவே மாண்டிடும்
தில்லைப்பதிதெனுமெல்லையில் வாயுவும்
செழித்து நடக்கையில்சேர்ந்துநாதவிந்து
வல்லமையாகத் தரித்துப்பிறந்தபின்
வருஷமீராண்டினில்மாண்டிடு மாண்டையே- வயது.
📖 பாடல் எண்: (0231) 📖
செல்வஆணும்பெண்ணுஞ் சேர்ந்துரதிகேளி
சித்திரலீலைசெயில் செயவிந்துநாதமும்
தொல்லைமைந்தன் பிறந்தல்லல்வயதொன்றில்
சொன்னேன்மடிந்திடில் சூதில்லையாண்டையே
வல்லமையாய்வந்து வாழ்பவித்தாகையால்
மாதர்மயல்கொண்டணு கிடாமல்மனம்
தொல்லைவாராதெனுந் திங்களோராண்டினில்
தோகையெனும் புணர்ந்தோர்களின்வல்லமை- வயது.
📖 பாடல் எண்: (0232) 📖
போதும்போதாதொருவாண்டு தசையெனும்
போகிபோகமிது பிசகாதிடில்
ஏதுவூழ்வினையாகமத்தோர் சொலு
மேதுவினைப்பயனேது பிணிவரா
மாதுபோகந்தசத்திங்களீ ரைஞ்சுதான்
வாததேகிவலுவாகு நூறாண்டுக்கும்
சாதுசத்தியகுணதாது வலுத்திடுந்
தந்தையிந்தமதிமைந்தன் பிறவியே- வயது.
விருத்தம்
📖 பாடல் எண்: (0233) 📖
மூலமதில் வாயுநின் றிலங்கும் போதில்
முதலான நாதவிந் துதித்த நேர்மை
ஆலவிடங்வ கடித்ததுபோ லாண்டு மூன்றி
லது வுயிர்போ மைந்தன்மடிந் தாக்கை வேறாம்
ஞானமுடன் வாய்வுசுழி சிதறி யோடில்
நாதவிந்து தித்துவய தஞ்சில் மாள்வான்
கோலமுடன் குண்டலியில் வாய்வு மோடில்
கொடியமைந்தன் வயதெட்டில் மாய்ந்த வாறே.
Next Post